திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல்: மு.க.ஸ்டாலின் ஆலோசனை

திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல், பொதுக்குழு நடத்துவது குறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்  முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், கே.என்.நேரு, ஆ. ராசா, ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். திருப்பூர், கோவை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் யாரை புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கலாம் என்பது குறித்து தற்போதைய மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அத்துடன் அடுத்த மாதம் … Read more

தொடர் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திருடனை மடக்கி பிடித்த போலீசார்.!

தூத்துக்குடியில் தொடர் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திருடனை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார், 126 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். சாத்தான்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிந்த போலீசார், அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த வாகனத்தில் பூட்டை உடைக்க பயன்படுத்தும் ஸ்குரு ட்ரைவர், கட்டிங் பிளேயர், 2 பிளாஸ்டிக் கவர் நிறைய தங்க நகைகள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். கட்டாரி … Read more

அமித் ஷாவுடன் பழனிசாமி சந்திப்பு – பிரதமரை சந்திக்கும் ஓபிஎஸ்?

சென்னை: மத்திய உள்துறை அமித் ஷாவை சந்தித்த அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பில் மாநில அரசு மெத்தனம் காட்டுவதாகப் புகார் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு, முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதேபோல, ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு … Read more

தமிழக மீனவர்கள் கைது: டெல்லிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதும், படகுகள், மீன்கள் பறிமுதல் செய்யப்படுவதும், தொடர்கதையாகி வருகிறது. ஒவ்வொருமுறையும் தமிழக அரசு டெல்லிக்கு கடிதம் எழுதி மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் விரைவில் விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் … Read more

பெரியகுளத்தில் இடப்பிரச்னை ஓபிஎஸ் சகோதரர் மீது வழக்கு: ஓய்வு டாக்டர் புகாரின்பேரில் நடவடிக்கை

பெரியகுளம்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் 2வது சகோதரர் ஓ.சண்முகசுந்தரம். இவர் தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 24வது வார்டு கவுன்சிலராக உள்ளார். பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹார பகுதியில் (ஓபிஎஸ் வீடு அருகே) ஓ.சண்முகசுந்தரம் வாங்கிய இடத்திற்கு பக்கத்தில் ஓய்வு பெற்ற டாக்டர்களான திருமலை மற்றும் விமலா தம்பதி சொந்த வீட்டில் வசிக்கின்றனர். ஓபிஎஸ் சகோதரர் வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கான முதற்கட்ட பணிகளுக்காக குழி தோண்டப்பட்டது. அப்போது அருகில் உள்ள டாக்டரின் வீட்டின் அஸ்திவாரம் சேதமடைந்தது. … Read more

திமுகவிலிருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன் – 45 ஆண்டுகால அரசியல் பயணம் நிறைவு; தலைமை மீதான அதிருப்தி காரணமா?

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தனது 45 ஆண்டுகால அரசியல் பயணத்தை நிறைவு செய்வதாக அறிவித்துள்ளார். தலைமை மீதான அதிருப்தியே அவர் திமுகவிலிருந்து விலகக் காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்ட விலகல் கடிதத்தில், ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று, அரசுப் பணிகளையும், கட்சிப்பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். இது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு, அரசியலில் இருந்து ஓய்வுபெற … Read more

குடந்தை வாலிபர்கள் 3 பேர் மியான்மரில் சிக்கி தவிப்பு: பெற்றோருக்கு வீடியோ அனுப்பி கதறல்

கும்பகோணம்: தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளதாக இணையதளத்தில் தகவல் வெளியானது. இதை நம்பி விண்ணப்பித்த 60 இந்தியர்கள், தாய்லாந்து அழைத்து செல்வதாக கூறி அந்த வேலை வாய்ப்பு நிறுவனம் சட்ட விரோதமாக மியான்மருக்கு அழைத்து சென்றுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கீழக்கோட்டையூர் மேலதெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராகுல் (22), அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ஹரிஹரன் (21) மற்றும் கும்பகோணம் பாணாதுறை கள்ளர் தெருவை சேர்ந்த கருப்பையன் மகன் … Read more

உ.பி., கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு சப்ளை.. அதிகாரி சஸ்பெண்ட்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் விளையாட்டு அரங்கில் மூன்று நாள் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கபடி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான், கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த சம்பவத்தை தொடர்ந்து சஹாரன்பூர் … Read more

வேகமாக பரவும் இன்ஃப்ளுன்சா காய்ச்சல்.. தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் சிறப்பு முகாம் .!

தமிழகம் முழுவதும் காய்ச்சல் தொடர்பாக இன்று 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்ஃபுளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இன்று, காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்த மருத்துவத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் … Read more