திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த நர்ஸ்: இறந்து பிறந்த குழந்தை

திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருக்கு வயது 36 ஆகும். இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா வயது 33 ஆகும். இவர் இரண்டாவதாக கருத்தரித்து இருந்த நிலையில் மருத்துவரால் பிரசவ தேதி இன்று அறிவித்து இருந்த நிலையில் இன்று காலை சூனாம்பேடு இல்லிடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். வலி … Read more

மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் 4 நாட்களுக்கு பக்கதர்களுக்கு அனுமதி..

விருதுநகர்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் (வெள்ளிக்கிழமை) முதல் 26-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையன்று … Read more

கேபி பூங்கா விவகாரம்: குடியிருப்புகள், கட்டுமானங்களை ஆய்வு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை புளியந்தோப்பு கேபி பூங்கா குடிசை மாற்று வாரியத்தில் தரம் இல்லாத வீடுகள் கட்டப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து குடியிருப்புகள், கட்டுமானங்களை ஆய்வு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இவற்றுடன் வாரியத்தின் பழைய குடியிருப்புகளும் புதிய கட்டுமானங்களை ஆய்வு செய்ய இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் வல்லுநர் குழு, வாரியத்தின் கட்டுமானங்கள், கட்டுமான பொருட்கள், வேலையாட்களின் பணி உள்ளிட்டவற்றை ஆரம்ப நிலையில் இருந்தே … Read more

Chennai Power Shutdown, 20th September: தாம்பரம், வியாசர்பாடி, பெரம்பூர் பகுதிகளில் இன்று மின்தடை

Chennai Power Shutdown: சென்னையில் 20.09.2022 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், வியாசர்பாடி, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தாம்பரம் பகுதி : பல்லாவரம் மல்லிகா நகர், பாரத் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு ராஜ கீழ்பாக்கம் வ.உ.சி.தெரு, மாருதி … Read more

மத்திய அமைச்சருடன் நரிக்குறவர்கள் சந்திப்பு: பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்காக பிரதமருக்கு நன்றி

சென்னை: நரிக்குறவர் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய இணையமைச்சர் எல்.முருகனை நேரில் சந்தித்து பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி கூறினர். தமிழகத்தில் நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துசாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாகப் போராடி வந்தனர். இவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, பிரதமர் மோடி தலைமையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர் சமுதாயத்தை பழங்குடியினர் … Read more

எடப்பாடியின் டெல்லி பயணம்: சரமாரியாக விமர்சித்திருக்கும் மருது அழகுராஜ்

’அம்மா போட்ட உத்தரவு’ என்ற தலைப்பில் அவர் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தையும், அதிமுகவை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். அந்த பதிவில், ” எதுக்காக அவரு டெல்லிக்கு போறாரு..கூப்பிட்டு வச்சு திட்ட போறாங்களா இல்லை எதையாவது கொடுக்கப் போறாங்களா..குழப்பத்திலேயே நடந்து வந்துங்கிட்டு இருக்கிறப்ப எதிரே ஒரு 72 வயது பாட்டி வந்து நின்னுக்கிட்டு தம்பி எடப்பாடி கையில மட்டும் இந்த கட்சி சிக்கிடக்கூடாது தம்பி… தலைவரு ரத்தம் சிந்தி … Read more

கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: மீனவர்கள் குற்றசாட்டு

ராமேஸ்வரம்: கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தனர். இரண்டு விசைப்படகுகள், அதில் இருந்த வலைகளை வெட்டி சேதப்படுத்தி விட்டு விரட்டியடித்ததாக மீனவர்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர். இலங்கை கடற்படை அட்டுழியத்தால் மீனவர்கள் மிபிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பினார்கள்.

பெண் பார்த்துவிட்டு திரும்பிய போது ஏற்பட்ட சோகம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் பலி.!

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). இவருடைய மனைவி ராஜம்மாள் (வயது 47). இவர்களது மகன் கிட்சன் ஞானதுரை (வயது 27). இந்த நிலையில் நேற்று, ஞானதுரைக்கு பெண் பார்ப்பதற்காக செல்வராஜ், ராஜம்மாள், ஞானதுரை, உறவினர்களான செல்வி, ஆசீர் கோவில்பிள்ளை, அகஸ்டின் ஆகிய 6 பேர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வடுகபாளையம் சென்றனர். பெண் பார்த்து விட்டு கோவைக்கு திரும்பிய போது, பல்லடம் தாசில்தார் அலுவலகம் எதிரே தாங்கள் வந்த வேனை சாலையோரம் … Read more

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 64% நீர் இருப்பு: ஓராண்டுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என தகவல்

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 64 சதவீதம் (8 ஆயிரத்து 566 மில்லியன் கன அடி) நீர் இருப்பு உள்ளது. இதன் மூலம் ஓராண்டுக்குச் சீரான குடிநீர் விநியோகிக்க முடியும். இது தொடர்பாகச் சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளான வீராணம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை,புழல், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் சோழவரம் ஆகியவற்றின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 … Read more