சென்னை ஒபன் டென்னிஸ்: முதல் பரிசு வழங்கிய மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் இறுதி போட்டியில் பார்வையாளராக பங்கேற்றார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் மகளிர் ஒபன் டென்னிஸ் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. மு.க. ஸ்டாலின் பங்கேற்பு இதில் பார்வையாளராக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அவருடன் திமுக மூத்தத் தலைவரும், அமைச்சருமான கே.என். நேருவும் உடனிருந்தார். சென்னை ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை லிண்டா ஃபருஹ்விர்டோவா, போலந்து வீராங்கனை மேக்னா லினெட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். … Read more

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பொத்தை சுத்தியை சேர்ந்தவர்கள் ஆனந்தராஜ்(47) மற்றும் சாமுவேல்(40). இவர்கள் இருவரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் திசையன்விளையில் இருந்து களக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது குமாரபுரம் அருகே சென்ற போது எதிரே பொத்தக் காலன் விளையை சேர்ந்த பிரான்சிஸ் (35) என்பவர் … Read more

சென்னை, வேளச்சேரி, பெருங்களத்தூரில் ரூ.115 கோடியில் கட்டப்பட்ட பாலங்கள் திறப்பு

வேளச்சேரி மற்றும் பெருங்களத்தூரில் ரூ.115 கோடியே 49 லட்சத்தில் கட்டப்பட்ட பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நேற்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.145.49 கோடியில்வேளச்சேரியில் விஜயநகர் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம் – வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைத்து மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி 2 அடுக்குமேம்பாலங்களாக ஒவ்வொன்றும் 7.5 மீட்டர் அகலம் கொண்ட இரு வழித்தட, ஒருவழி மேம்பாலமாக அமைக்கப்பட்டு … Read more

கோவையில் கார் பந்தயம்

தேசிய அளவிலான 25வது ஜேகே டயர் ரேசிங் சாம்பியன்ஷிப் கோவையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. எல்ஜிபி பார்முலா 4 கார் பந்தயத்தில் பங்கேற்ற வீரர்கள், செட்டிபாளையம் கரி மோட்டார் ஸ்பீட்வே பந்தயக் களத்தில் வெற்றி முனைப்புடன் சீறிப் பாய்கின்றனர்.

இன்புளுவென்சா காய்ச்சல் குறித்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

இன்புளுவென்சா காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்புளுவென்சா காய்ச்சல் குறித்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கான அவசியம் இல்லை. பெரியவர்கள், குழந்தைகள் என்று ஒட்டுமொத்த பாதிப்பு 1,044 ஆக உள்ளது.  இந்த … Read more

கல் குவாரிக்கு எதிர்ப்பு: பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 15 பேர் உண்ணாவிரத போராட்டம்

பல்லடத்தில் முறைகேடாக இயங்கும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 5 பெண்கள் உட்பட15 பேர் நேற்று முன்தினம் உள்ளிருப்புப் போராட்டம், உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். நேற்று முன் தினம் இரவு விடிய,விடிய போராட்டத்தை தொடர்ந்ததால் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கோடாங்கிபாளையத்தில் செயல்பட்டு வரும் 2 குவாரிகளின் விதிமீறல்களை கண்டித்துகடந்த 12 நாட்களாக உண்ணா விரத போராட்டம் நடத்தி வரும்விவசாயி செந்தில்குமாருக்கு ஆதரவளிக்கும் வகையில் இப்போராட்டம் நடைபெற்றது. செந்தில் குமாரின் மனைவி … Read more

கும்பக்கரை அருவியில் குளித்த புதுச்சேரி போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து சாவு

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் குளித்துக் கொண்டிருந்த புதுச்சேரி போலீஸ் ஏட்டு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (48). அங்கு போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவர் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, ேநற்று தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க சென்றுள்ளார். அருவியில் குளித்து கொண்டிருந்த போது, ஹரிஹரன் திடீரென மயங்கி  விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், … Read more

கோவையில் வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானத்தால் 4 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானத்தால் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த ஓட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க நபர், கோவையில் தங்கி தீத்திபாளையத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி கோவை கொண்டாட்டம் அருகில் அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை … Read more

பைக் விபத்தில் சிறுவர்கள் 2 பேர் பலி

போளூர்: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த அல்லியாளமங்கலத்தை சேர்ந்தவர்கள் ராமன் மகன் நவீன்(14), ராஜேந்திரன் மகன் செல்வா(14). இருவரும் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அஜித்(16). பிளஸ் 1 படித்து வருகிறார்.  நேற்று மதியம் 1 மணியளவில், ஊராட்சி செயலாளரான ஆனந்தனிடம் டீ குடித்து விட்டு வருகிறோம் என கூறி, பைக்கை வாங்கி 3 பேரும் சென்றனர். நவீன் பைக்கை ஓட்டி சென்றான். மட்டபிறையூர் அருகே திடீரென … Read more

எலி பேஸ்ட் சாப்பிட்டு பாதித்தோருக்கு கோவை அரசு மருத்துவமனையில் ‘பிளாஸ்மா’ சிகிச்சை – 8 மாதங்களில் 33 பேர் உயிர் பிழைத்தனர்

கடந்த 8 மாதங்களில் எலி பேஸ்ட் சாப்பிட்டு கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 33 பேர் உயிர் பிழைத்துள்ளனர். இது குறித்து மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: எலி பேஸ்ட் சாப்பிடுவதால் உண்டாகும் விளைவுகள் உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இதிலுள்ள, மஞ்சள் பாஸ்பரஸானது தோல், குடல் மற்றும் மூச்சுக்குழல் ஆகியவற்றில் இருக்கும் திசுக்களால் எளிதாக உறிஞ்சப்படுகிறது. இது குடல், கல்லீரல், இதயம் மற்றும் சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இது தொடர்பான ஆய்வுகளில் … Read more