“பாஜக ஆட்சியில் மாநில அரசுகளின் உரிமை பறிப்பு” – கூடலூரில் ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டு

கூடலூர்: “பாஜக மக்களிடையே பல்வேறு பாகுபாடுகளை புகுத்தி வருகிறது” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், 21வது நாளில் இன்று மீண்டும் தமிழகத்தில் ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டார். கேரள மாநில எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டம் கூடலூரில் பாதயாத்திரையை மாலையில் தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் … Read more

பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அட்டவணை இதோ – தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு..!

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு அருகே உள்ள எஸ்வந்த்பூர் – திருநெல்வேலி மற்றும் மைசூர் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி எஸ்வந்த்பூர் திருநெல்வேலி சிறப்பு ரயில் (06565) அக்டோபர் 4 மற்றும் 11 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் எஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி – எஸ்வந்த்பூர் சிறப்பு ரயில் … Read more

Exclusive: திலகவதி IPS மீது மருமகள் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மையா? திடுக்கிடும் தகவல்கள்

முன்னாள் டிஜிபியும், தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியுமான திலகவதி மீதும் அவரது மகன் மீதும் மருமகள் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தன்னை கொடுமை படுத்தியதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் அளித்த பேட்டியை ஜீ தமிழ் நியூஸ் சேனலில் ஒளிபரப்பி இருந்தோம். ஒரு தரப்பின் பேட்டியை மட்டும் ஒளிபரப்பியதை அடுத்து திலகவதி ஐபிஎஸ் தரப்பில் இந்த குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்தோம். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் … Read more

அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதையில் 100 கி.மீ. வேகத்தில் அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்

வேதாரண்யம்: ரூ.288 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதையில் 100 கி.மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட மீட்டர் கேஜ் பாதையில் ெரயில் போக்குவரத்து நடந்தது. முற்காலத்தில் பெரிய அளவில் போக்குவரத்து வசதி இல்லாத போது வேதாரண்யம் பகுதியில் உள்ள மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்கவும், வேதாரண்யம் பகுதியில் உற்பத்தியாகும் உப்பை மூட்டைகளாக கட்டி … Read more

புதுக்கோட்டை: பிறந்த குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு தப்பியோடிய தாய்.!

புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை விட்டுவிட்டு தப்பியோடிய தாயை காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு 40 வயது மதிப்புடைய நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக கடந்த 16ஆம் தேதி வந்துள்ளார். கடந்த 17ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் அப்பெண்மணிக்கென உறவினர்கள் யாரும் வராததால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் இது குறித்து கணேஷ் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் … Read more

Tamil news today live: ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தமிழகத்தில் மட்டும் தடுக்க காரணம் என்ன? அண்ணாமலை கேள்வி

Tamil news today live: ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தமிழகத்தில் மட்டும் தடுக்க காரணம் என்ன? அண்ணாமலை கேள்வி Source link

சென்னை | ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்வு!

தெற்கு இரயில்வே சென்னை மண்டல  ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் பண்டிகை சீசனைக் கருத்தில் கொண்டு சென்னை டிவிஷனில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. இரயில் நிலையங்களில் உள்ள பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்வு – தெற்கு ரயில்வே அறிவிப்பு#Railway #PlatForm #Chennai #Tamilnadu #Seithipunal pic.twitter.com/0Domxg4SRD — Seithi Punal (@seithipunal) … Read more

“12 துறைகளில் 30 இளைஞர்கள்… அரசு இயந்திரத்தில் பாயும் புதிய ரத்தம்” – புத்தாய்வுத் திட்டத்தை விவரித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் மூலம் அரசு இயந்திரத்தில் இளைய, புதிய ரத்தம் பாய்ச்சப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “தனிமனிதராக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும், ஆட்சியாக இருந்தாலும், தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அத்தகைய புத்தாய்வுத் திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இதில் முப்பது இளைய – தனித்திறமைசாலிகள் இணைக்கப்பட்டுள்ளார்கள். பல்லாயிரம் பேர் தேர்வு எழுதி, பல கட்ட மதிப்பீட்டுகளுக்குப் பின், … Read more

சீன அதிபர் ஜீ ஜின்பிங் வந்தபோது போராட்டம்: மாணவர்கள் மீதான வழக்கு ரத்து!

சீன அதிபர் ஜீ ஜின்பிங் சென்னை வந்தபோது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக திபெத்தை சேர்ந்த 9 மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின் பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். அப்போது, சென்னையில் படித்து கொண்டிருந்த திபெத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர் உள்ளிட்டோர் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் … Read more

கடைவரம்பில் கருகிய நெற்பயிர்களை காப்பாற்ற அறுவடை வரை தண்ணீர் விட குமரி விவசாயிகள் கோரிக்கை: வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

நாகர்கோவில்: தெங்கம்புதூர் கடைவரம்பு பகுதியில் தண்ணீர் இல்லாததால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு உள்ளனர். அவர்களிடம் அறுவடை முடியும் வரை தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகளை நம்பியே விவசாயம் நடந்து வருகிறது. மேலும் இருபருவமழையும் கைகொடுப்பதால், மாவட்டத்தில் உள்ள குளங்களில் தண்ணீரை சேமித்து வைத்தும், விவசாயத்திற்கு … Read more