குமரியில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களுடன் 2-வது நாளாக ராகுல் நடைபயணம் – சாலையோரம் திரண்ட பொதுமக்கள் உற்சாகம்

நாகர்கோவில்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டார். சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையான 150 நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி எம்.பி. நேற்று முன்தினம் தொடங்கினார். இந்த நடைபயணத்தை கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்நாள் நடைபயணத்தை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் ராகுல் நிறைவு செய்தார். கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட … Read more

தோல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த தாய் உடலை வீல் சேரில் மயானத்திற்கு கொண்டு சென்ற மகன்

துவரங்குறிச்சி: திருச்சி அருகே தோல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த தாய் உடலை வீல் சேரில் வைத்து மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்த சம்பவம் நெஞ்சை பதற வைத்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதியார் நகரில் வசித்து வருபவர் பெரியசாமி (85). இவரது மனைவி ராஜேஸ்வரி(74). இவர்களது மகன் முருகானந்தம் (50).எலக்ட்ரீசியனான இவருக்கு, திருமணமாக வில்லை. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ராஜேஸ்வரிக்கு தோல் நோய் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது மகன் முருகானந்தம் தனது … Read more

குமுளி மலைச்சரிவில் மழைநீரினால் மண் அரிப்பு – வேர்பிடிப்பின்றி நிற்கும் ராட்சத மரங்களால் அபாயம்

குமுளி: தமிழக கேரள எல்லையான குமுளியில் கனமழையினால் மலைச்சரிவில் உள்ள ராட்சத மரங்களின் அடிப்பகுதிவரை மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேர்கள் பிடிப்பின்றி அந்தரத்தில் இருக்கும் மரங்கள் சாலையில் சரிந்து விழும் அபாயம் உள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவின் முக்கிய வழித்தடமாக குமுளி மலைப்பாதை அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள், சபரிமலை ஐயப்ப பக்தர்கள், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்தச் சாலையையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் இருந்து 6 கிமீ … Read more

அனைவரையும் சமமாக நடத்துகிறார்; முதல்வருக்கு பாஜ எம்எல்ஏ பாராட்டு

நெல்லை: சட்டமன்றத்தில் அனைத்து கட்சி  உறுப்பினர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமமாக நடத்துவதாக நெல்லையில் நடந்த விழாவில் முதல்வருக்கு பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்தார். நெல்லையில் நடந்த நலத்திட்ட விழாவில் நெல்லை தொகுதி எம்எல்ஏவும், பாஜ மாநில துணைத்தலைவருமான நயினார்  நாகேந்திரன் பேசியதாவது: நெல்லை  மாவட்டத்தில் முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும்  விழாவில் நானும் பங்கேற்பதை பெருமையாக நினைக்கிறேன். சட்டமன்றத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களையும் அவர், சமமாக நடத்துகிறார்.  எதிர்க்கட்சி, மாற்றுக்கட்சி என்று … Read more

பல்லடம் | கல்குவாரிக்கு எதிராக விவசாயி உண்ணாவிரத போராட்டம் – உரிமத்தை ரத்து செய்து ஆட்சியர் உத்தரவு

திருப்பூர்: முறைகேடாக இயங்கி வரும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தனது தோட்டத்தில் 10-வது நாளாக விவசாயி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்த நிலையில், ஒரு குவாரிக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கோடங்கிபாளையம் கிராமத்தில், கொத்துமுட்டிபாளையத்தில் தனியார் கல்குவாரி மற்றும் ஜல்லி ஆலை இயங்கி வருகிறது. அரசின் நிபந்தனைகளை மீறி பாறையை அதிக வெடிமருந்து வைத்து தகர்ப்பது, அதிக ஆழத்துக்கு தோண்டுவது என செயல்பட்டு … Read more

ரவுடிகளுக்கு வைக்கப்போகும் ஆப்பு..! – தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவால் கலக்கம்..!

குற்றத் தடுப்பு நடவடிக்கையாக, ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும், போலீசார் கண்காணிக்க வேண்டும் என, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. இதை உறுதி படுத்தும் விதமாக சட்ட ஒழுங்கிற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் குற்றச்சம்பவங்கள் நடை பெற்று வருகிறது. இதை தடுக்கும் நோக்கில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு முயற்சி எடுத்து வருகிறார். குற்றத் தடுப்பு நடவடிக்கையாக, ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும், போலீசார் கண்காணிக்க வேண்டும் என, தமிழக … Read more

மதுரை தமுக்கத்தில் ரூ.47.72 கோடியில் கட்டிய மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: மதுரைக்கு நேற்றுமாலை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமுக்கம் மைதானத்தில் ரூ.47.72 கோடியில் கட்டப்பட்ட மாநாட்டு மையம், மீனாட்சி அம்மன் கோயில் அருகே ரூ.44.10 கோடியில் கட்டப்பட்ட பன்னடுக்கு வாகன காப்பகத்தை திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் இருந்து கார் மூலம் நேற்று மாலை 6 மணிக்கு மதுரை வந்தடைந்தார்.  மாலை 6.45 மணிக்கு வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஐடா ஸ்கட்டர் ஆடிட்டோரியத்தில் நடந்த மதுரை வேலம்மாள் குழும தலைவர் இல்ல திருமண … Read more

விருத்தாசலம் | இந்திரா நகரில் சொத்து வரி வசூலித்த நகராட்சி நிர்வாகமே மாற்று இடம் தர குடியிருப்புவாசிகள் கோரிக்கை

கடலூர்: விருத்தாசலம் நகரில் முல்லா குட்டையை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இந்திராநகர் பகுதியில் வசித்தவந்தவர்களிடம் நகராட்சி நிர்வாகம் சொத்து வரி வசூலிப்பில் ஈடுபட்டு வந்ததால் நகராட்சி நிர்வாகமே மாற்று இடமும் இழப்பீடும் தரவேண்டும் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரின் 15-வது வார்டில் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட முல்லா குட்டையை 40 வருடங்களுக்கு முன் ஆக்கிமித்து சிலர் குடியிருப்பும், வணிக வளாகமும் கட்டி வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த பாபு … Read more