மாணவர்களே, இன்று மதியம் ஹால் டிக்கெட்.. இணைப்பு உள்ளே இருக்கு..!

8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்படவுள்ளது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று (செப். 29-ம் தேதி) மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவெண், … Read more

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் 1,024 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 1,024 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு உரிய நபர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2019-ம் ஆண்டு நவ.27-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. கணினி வழித் தேர்வு: … Read more

சென்னையில் இருந்து ஊருக்கு போறீங்களா? தனியார் பேருந்துகளுக்கு போட்டியாக அரசு பேருந்துகள்

ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். செவ்வாய்க்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்பட்டாலும், செப்டம்பர் 29 ஆம் தேதியான இன்று இரவே வெளியூர்களுக்கு செல்ல பயணிகள் திட்டமிட்டுள்ளனர். அக்டோபர் 9 ஆம் தேதி வரை விடுமுறைக்கு திட்டமிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கின்றனர். கிட்டதட்ட 9 நாட்கள் விடுமுறை என்பதால், பேருந்துகளில் கூட்டம் அலைமோத இருக்கிறது.  குறிப்பாக சென்னையில் இருந்து தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு செல்வோர், தனியார் … Read more

தி.மலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் அருகே பாதாள சாக்கடையில் உடைப்பு: பக்தர்கள் அவதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் அருகே பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றத்துடன் வெளியேறும் கழிவுநீரால் அண்ணாமலையார் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர்.

காதல் மனைவியை என்னோடு சேர்த்து வையுங்க – போலீசில் புகார் அளித்த மாற்றுத்திறனாளி காதலன்

விபத்தில் மாற்றுத் திறனாளியாக மாறிய காதலனை கரம்பிடித்த காதலியால் பிரித்து சென்ற உறவினர்கள் கலங்கி நிற்கும் காதலனின் கண்ணீர் கதை… நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கேசவனேரியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பிரகாஷ் (25) தொழிற்கல்வி படித்த இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவரும் வள்ளியூர் அருகே உள்ள வள்ளியம்மாள் புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் திவ்யா (22) இருவரும் கடந்த ஐந்து வருடமாக … Read more

அரசு தடை செய்யலை.. நான் நடிக்கிறேன்.. என்னை யாரும் கேட்க முடியாது..!

“ஆன்லைன் சூதாட்டத்தை சுப்ரீம் கோர்ட்டும், அரசும் தான் தடை பண்ண வேண்டும். அப்படி தடை செய்த ஒன்றில் நான் நடிக்க மாட்டேன். ஆனால், அரசு தடை செய்யாத ஒன்றில் நடித்தால் யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது” என்று சரத்குமார் கூறினார். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு … Read more

பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு: அதிமுக குறித்து ஆலோசனை

சென்னை: அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று சந்தித்து, கட்சியின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை 11-ம் தேதி பழனிசாமி கட்சி பொதுக்குழுவை நடத்தி, இடைக்காலப் பொதுச்செயலாளரானார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். இது தொடர்பான வழக்கில் பழனிசாமி ஜூலை … Read more

காற்றில் பறக்கும் அமைச்சர்களின் உத்தரவு! பேருந்தில் அடாவடி செய்யும் மாணவர்கள்

வேலூர்: வேலூர் மாவட்டம், வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் செல்லும் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. பள்ளி மாணவர்கள் இது போன்ற செயல்கள் செய்வதில் பேருந்தில் பயணிக்கும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். படிக்கட்டில் தொங்கியபடி பாட்டுக்கு பாட்டு போட்டி நடப்பது ஆச்சரியம் அளிக்கிறது. பின் படிக்கட்டில் பாட்டை தொடங்கிய பின் அந்தப் பாட்டு முடிந்தவுடன் முன் படிக்கட்டில் தொங்கியவர் விட்ட எழுத்திலிருந்து பாட்டை ஆரம்பிக்கிறார். போக்குவரத்து துறை அமைச்சர் … Read more

நாகர்கோவில் சந்தையில் இன்று ஒரு கிலோ கேரட் விலை ரூ.95 ஆக குறைந்தது..!!

குமரி: நாகர்கோவில் சந்தையில் இன்று ஒரு கிலோ கேரட் விலை ரூ.95 ஆக குறைந்தது. நேற்று கேரட் ஒரு கிலோ ரூ.120 ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று விலை சற்று குறைந்தது. நேற்று சென்னை கோயம்பேடு சந்தையில் கேரட் ஒரு கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையானது.

நாயை கொடூரமாக அடித்து துன்புறுத்தி பிடிப்பதா? – வைரல் வீடியோ உண்மையா? அதிகாரிகள் விளக்கம்

நாய்களை கொடூரமாக தாக்கி, அவற்றை சிறை பிடிப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவுக்கு மாநகராட்சி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார். வேலூர் மாநகராட்சியில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனால் நாய்கள் தொல்லையும் ஏராளமாக உள்ளன. நாய்களின் அட்டகாசத்தால் சில இடங்களில் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையும் உள்ளது. இது குறித்து மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு ஆலோசனை செய்து … Read more