செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்… ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு!

தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சராக தற்போது பதவி வகித்து வரும் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு, விசாரணை என அரசியல் களம் பரபரப்பாக மாறியது. செந்தில் பாலாஜி, அவரது தனி உதவியாளர் உள்ளிட்ட 4 பேர் மீது … Read more

உபரிநீரால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு; திற்பரப்பு அருவியில் 2வது நாளாக குளிக்க தடை: தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

குலசேகரம்:  குமரி  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், சில  இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக மலை மற்றும் அணைகளின்  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை  அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட  பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.45 அடியாக உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி … Read more

அத்தப்பூ கோலம் அறுசுவை உணவு உற்சாக நடனம் –கல்லூரி மாணவிகளின் ஓணம் பண்டிகை

கன்னியாகுமரி மாவட்டத்தில் களைகட்டத் தொடங்கியது ஓணம் கொண்டாட்டம். கல்லூரி மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு நடனமாடி மகிழ்ந்தனர். கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை கடந்த 30-ம் தேதி ஹஸ்தம் நட்சத்திரம் அன்று தொடங்கி தொடர்ந்து திருவோண நட்சத்திரம் வரை 10-நாட்கள் நடைபெறுகிறது இந்த பத்து நாள் ஓணம் பண்டிகையின் போது முந்தைய காலத்தில் கேரளாவை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி வீடுகளை பார்வையிட வருகை தருவதாக ஐதீகம். இதனால் இந்த பத்து நாட்களும் கேரள மக்கள் தங்கள் வீடுகளுக்கு … Read more

ஒற்றுமை பயணம் தொடங்கினார் ராகுல் – குமரியில் முதல் நாள் ஹைலைட்ஸ்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுலிடம் தேசியக் கொடியை வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைத்தார். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்னும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி எம்.பி. மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தை கன்னியாகுமரியில் நேற்று தொடங்கினார். இதற்காக நேற்று முன்தினம் சென்னை வந்த அவர், நேற்று காலை பெரும்புதூரில் உள்ள … Read more

மாநில அரசுகளின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

கும்பகோணம்: மாநில அரசுகளின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு கொண்டு வரும் புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டுக்கு ஏற்றதல்ல என்று கும்பகோணத்தில் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.

`அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்துக’- உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்சநீதிமன்ற தீர்ப்புபடி அமல்படுத்தும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கி 2016 ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்பிரிவின் கீழ் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீத இடங்களிலும் பெண்கள் போட்டியிடவும் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவுகளை எதிர்த்தும், … Read more

Tamil news today live : அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு

Go to Live Updates பெட்ரோ- டீசல் விலை பெட்ரோல் – டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோ ரூ.102.63-க்கும் டீசல் ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீட் தேர்வு மாணவி தற்கொலை நேற்று நள்ளிரவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. ராஜஸ்தானைச் சேந்த தனிஷ்கா பிடித்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், திருவள்ளூர் : அம்பத்தூர், சோழபுரம் பகுதியில் லக்ஷனா ஸ்வேதா(19) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்திய ஒற்றுமை … Read more

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட தமிழகப் பகுதிகளையொட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செப். 8) தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வரும் 9,10, 11-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு … Read more

எடப்பாடிக்கு செக் வச்ச ஓபிஎஸ்… இன்னிக்கு பெரிய சம்பவம் இருக்கு!

ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு விஷயத்தில் என்ன தீர்வு? என்று அதிமுகவினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். ஏனெனில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் முதல்முறையும், இரண்டாவது முறையும் மகிழ்ச்சி அடைந்தனர். மூன்றாவது முறை ஒருகை பார்த்து விடலாம் என்று உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கிடையில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள … Read more

வெளியானது நீட் தேர்வு முடிவுகள்: மாணவி விபரீத முடிவு

நீட் யு.ஜி 2022 இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது. இந்த முடிவுகள் என்.டி.ஏ அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in இல் சரிப்பார்க்கலாம். மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நாட்டின் 546 நகரங்களில் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வில் ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா 715 … Read more