வாஷிங் மிஷினின் பின்பக்கத்தில் புகுந்த பாம்பு உயிருடன் பிடிப்பட்டது..!

கடலூர் மாவட்டம் உண்ணாமலை அருகே வாஷிங் மிஷினில் புகுந்த பாம்பு உயிருடன் பிடிபட்டது. செட்டிசாவடியை சேர்ந்த மோகன், என்பவரது வீட்டில் இருந்த வாஷிங்மெஷினில் ஏதோ சத்தம் கேட்டதால் அதனை சாய்த்து பார்த்தபோது அதில் பாம்பு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பாம்பு பிடிக்கும் ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, வாஷிங் மிஷினின் பின்பக்கத்தில் இருந்த பாம்பை லாகவமாக உயிருடன் பிடித்த அவர் பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டார். Source link

காரைக்குடியில் மாட்டுவண்டி பந்தயம்: ஒற்றைச் சக்கரத்தில் வண்டியை ஓட்டியவருக்கு பாராட்டு

காரைக்குடியில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் வண்டியின் ஒரு சக்கரம் உடைந்தபோதும் மனம்தளராமல் வண்டியை ஓட்டிச் சென்ற இளைஞரை மக்கள் பாராட்டினர். காரைக்குடி கழனிவாசல் அய்யுளி அம்மன் கோயில் திரு விழாவையொட்டி சூரக்குடி சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 51 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் 10 ஜோடிகள், கரிச்சான் பிரிவில் 41 ஜோடிகள் பங்கேற்றன. கரிச்சான் பிரிவில் ஒரே நேரத்தில் … Read more

`வருந்துகிறோம்’- மாட்டுக்கறி பதிவும் சென்னை காவல்துறையின் சர்ச்சை பதிலும்!

ட்விட்டர் பயனாளியொருவர் மாட்டுக்கறி புகைப்படத்தை பகிர்ந்தமைக்கு, `இது தேவையற்றது’ என்று சென்னை காவல்துறை கூறியது விமர்சனத்துக்குள்ளானது. சர்ச்சையை தொடர்ந்து, தங்கள் ரிப்ளைக்கு விளக்கமளித்துள்ளது சென்னை காவல்துறை. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அபூபக்கர் என்பவர் நேற்றைய தினம் `மாட்டு கறி’ என கேப்ஷன் போட்டு மாட்டுக்கறி உணவின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பெருநகர சென்னை காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து `இத்தகைய பதிவு, இங்கு தேவையற்றது’ என பதில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையின் இந்த … Read more

சென்னையின் பல பகுதிகளில் இன்று (ஜூலை:7) மின்வெட்டு.. எங்கெங்கே தெரியுமா?

சென்னையின் மயிலாப்பூர், தி.நகர், தாம்பரம், வியாசர்பாடி, ஆவடி, அம்பத்தூர், போரூர், கிண்டி, கே.கே.நகர், அடையாறு, மதுரவாயல், ஐ.டி. காரிடர், சோத்துப்பெரும்பேடு, பெரம்பூர், தண்டையார்பேட்டை நகரில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இன்று மின்சாரம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மயிலாப்பூர்: டூமிங் … Read more

தேசிய தடகளப் போட்டியில் மயிலாடுதுறை வீராங்கனை., தங்கப்பதக்கம்.! கிராமத்தினர் உற்சாக வரவேற்பு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு அவரது சொந்த கிராம மக்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.  கடந்த ஜூன் மாதத்தில் தமிழக தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையில் 61வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் கோல்டு வால்ட் என்று அழைக்கப்படுகின்றன கோல் ஊன்றி உயரம் தாண்டும் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கலந்து கொண்டார்.  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் … Read more

முதல்வர் திறந்து வைத்து ஒரு மாதமாகியும் பயன்பாட்டுக்கு வராத திருப்பத்தூர் வாரச்சந்தை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாரச்சந்தையை திறந்து வைத்து ஒரு மாதமாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. நகரில் ஓராண்டாக சந்தை இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகே சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வந்தது. அங்குள்ள கடைகள் சேதமடைந்ததை அடுத்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மூலதன மானிய நிதி திட்டம் ரூ.2 கோடியில் வாரச்சந்தை சீரமைக்கப்பட்டது. மொத்தம் 120 கடைகள் கட்டப்பட்டன. கட்டுமானப் பணிக்காக ஓராண்டுக்கு முன்பு, வாரச்சந்தை நகருக்கு வெளியே மதுரை சாலைக்கு … Read more

விவசாயி பலி எதிரொலி: தாளவாடியில் கும்கிகளாக களமிறங்கும் சின்னதம்பி, ராஜவர்தன்!

தாளவாடி அருகே நேற்றைய தினம் யானை தாக்கியதில் விவசாயி மல்லநாயக்கர் என்பவர் உயிரிழந்திருந்தார். இதைத்தொடர்ந்து ஆட்கொல்லி யானையை பிடித்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஆனைமலையில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அடுத்த தர்மாபுரத்தில் வாழைத்தோட்டத்தில் இரவு நேர காவலுக்கு சென்ற விவசாயி மல்லநாயக்கர் (வயது 68) ஒற்றை யானை தாக்கியதில் நேற்று உயிரிழந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திகினாரையில் விவசாயியை இந்த யானை … Read more

மியான்மர் எல்லைக்குள் நுழைந்த 2 தமிழர்கள் சுட்டுக் கொலை: போராளிக் குழு அட்டூழியம்

Two Tamils from Manipur’s Moreh shot in Myanmar Tamil News: மணிப்பூரில் வசிக்கும் இரண்டு தமிழர்களின் உடல்கள் நேற்று அண்டை நாடான மியான்மரில் துப்பாக்கி காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. கொலைக்குப் பின்னணியில் இராணுவ ஆட்சிக்கு ஆதரவான போராளிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மணிப்பூரின் மோரே நகரைச் சேர்ந்தவர்கள் பி மோகன், 27, மற்றும் எம் ஐயனார், 28. இவர்கள் இருவரும் நேற்று செவ்வாய்க் கிழமை காலை மியான்மரின் தமு பகுதியில் உள்ள அவர்களது தமிழ் நண்பரைச் சந்திக்கச் சென்றுள்ளனர். … Read more

#செங்கல்பட்டு || கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள்.! போலீசார் வலைவீச்சு.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி அருகே பொத்தேரி குமரன் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(46). இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்று வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தின இரவு வழக்கமாக வியாபாரம் முடிந்த பிறகு, கடையை பூட்டு போட்டு பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து வழக்கமாக நேற்று காலை, கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.  … Read more

'இசையால் நம் உள்ளங்களையும், மாநிலங்களையும் ஆண்ட இளையராஜா' – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட ‘இசைஞானி’ இளையராஜா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் அறிவிப்பு: கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் … Read more