2 ஆண்டுகளில் 6 அதிகாரிகள் மாற்றம் – வரி வசூலில் திணறும் மதுரை மாநகராட்சி வருவாய் துறை

மதுரை: மதுரை மாநகராட்சி வருவாய் துறைக்கு புதிய உதவி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் 6 அதிகாரிகள் இந்த துறையில் மாற்றப்பட்டதால் நிலையான வருவாய் துறை உதவி ஆணையர் இல்லாமல் இந்த துறை திணறிக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் அனைத்து துறைகளிலும் வருவாய் துறை முதன்மையானது. கடைகள் ஏலம், வாடகை வசூல், வரி நிர்ணயம், வரி வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இந்த துறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த துறை மூலம் வசூலிக்கப்படும் வரி … Read more

வண்டலூர் பூங்கா: மலக்குடல் பிரச்னையால் அவதி; அறுவை சிகிச்சைப் பின் பெண் சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர் பூங்காவில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெண் சிங்கம் உயிரிழந்தது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 25 வயதான புவனா (எ) விஜி, பெண் சிங்கம் உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து மலக்குடல் பிரச்னை காரணமாக ஒருமாத காலமாக மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மிகவும் மோசமானதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை 7 மணியளவில் பெண் சிங்கம் உயிரிழந்தது. … Read more

உங்களுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம்? மாணவிகளின் கேள்வியால் வியந்த உதயநிதி

சென்னையில் 5 அரசு பள்ளிகளில் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் கற்பிக்கும் வகையில், வி.ஆர். லேப் பயன்பாட்டை தொடங்கி வைத்துப் பேசிய உதயநிதி, உங்களுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் என்று தைரியமாக கேட்ட மாணவிகளை வியந்து பாராட்டிப் பேசினார். மாணவர்களின் கற்றல் ஆர்வம்-திறனை அதிகரித்திட, மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் கற்பிக்கும் வகையில், மெட்டா கல்வி ( MetaKalvi) நிறுவனத்தின் உதவியுடன் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலுள்ள 5 அரசு பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள VR LAB-ன் பயன்பாட்டை லேடிவில்லிங்டன் கல்லூரியில் … Read more

தமிழகத்திற்கு காரில் கடத்திவரப்பட்ட 50 மூட்டை சாராயம்.. 2 பேர் கைது.!

காரில் கடத்திவரப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்திச் செல்வதை தடுப்பதற்காக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், திட்டச்சேரி அருகே பனங்காட்டூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக வேகமாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த பொழுது 50 மூட்டைகளில் ஒரு லட்சம் மதிப்பிலான சாராயம் … Read more

” உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஹேம்நாத் செய்த கொடுமையால் சித்ரா தற்கொலை” – சித்ராவின் தந்தை காமராஜ்

கணவர் ஹேம்நாத் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செய்த கொடுமையால் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சித்ரா தற்கொலை தொடர்பாக தன் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கக் கூடாது என சித்ராவை ஹேம்நாத் சித்ரவதை செய்ததாக தந்தை காமராஜ் பதில் மனு தாக்கல் செய்தார். சித்ரா வீட்டில் இல்லாதபோது … Read more

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ இடைவெளியில் அம்மா உணவகம் அமைக்க கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் இடைவெளியிலும் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், “தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 50 கிலோ மீட்டர் இடைவெளியில் உணவகங்கள் அமைந்துள்ளன. அவற்றில் தரமற்ற உணவுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. எனவே பயணிகள், லாரி உள்ளிட்ட … Read more

குளிக்கும்போது நீரோட்ட சுழற்சியில் சிக்கிய அண்ணன் சடலமாக மீட்பு – தம்பியும் பலியான சோகம்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் நீரில் மூழ்கிய நிலையில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருநாவுக்கரசு – ராஜாமணி தம்பதியினர், காந்தி மார்க்கெட் பகுதியில் பூண்டு வியாபாரம் செய்துவரும் இவர்களுக்கு தினேஷ் (21) மற்றும் ராஜேஷ் (16) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சில்லத்தூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு நிச்சயதார்த்த விழாவிற்கு குடும்பத்துடன் வந்துள்ளனர். இந்நிலையில், தினேஷ் ராஜேஷ் ஆகிய இருவரும் அவர்களது உறவினர்கள் … Read more

ரூ1497 கோடி முதலீடு… 12 நிறுவனங்களை தொடங்கி வைத்த ஸ்டாலின்; 7050 பேருக்கு வேலை வாய்ப்பு

கிருஷ்ணகிரி, ஒசூர், ஒரக்கடம் உள்ளிட்ட இடங்களில் ரூ.1497 கோடி முதலீட்டில் 12 நிறுவனங்களின் வணிக உற்பத்தியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம், 7050 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 1497 கோடி ரூபாய் முதலீட்டில் 12 நிறுவனங்களின் முதலீட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் தொழிற்பூங்கா, உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், ஜவுளி உற்பத்தி நிறுவனம் … Read more

திருப்பூர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போலீசார் எச்சரிக்கை.!

திருப்பூரில் பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டுமென ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.  * ஆட்டோவில் அரசு அனுமதித்த எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்ற வேண்டும்.  * அனுமதியை மீறி அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றக்கூடாது.  * மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஓட்டுனர்கள் கதவு பூட்டப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே வாகனத்தை ஓட்ட வேண்டும்.  * விபத்துகள் இல்லாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட வேண்டும். * போக்குவரத்து விதி மற்றும் … Read more

சொந்த பைக்கால செய்வினை வச்சுகிட்ட யூடியூப்பர் TTF வாசன்..! 247 கிமீ ஓவர் ஸ்பீடு… வீலிங்… குவியும் புகார்கள்..!

அதிவேகத்தில் பைக் ஓட்டி, விபரீத வீலிங் சாகசம் செய்து, சிறுவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்வதாக, யூடியூப்பில் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த டிடிஎப் வாசன் என்ற யூடியூப்பர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றது. கோவையை பூர்வீகமாக கொண்ட யூடியூப்பர் டிடிஎப் வாசன்..! அதிவேகத்தில் பைக் ஓட்டுவது… வீலிங் செய்வது… என்று தனது ரேசிங் திறமையால் யூடியூப்பில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு குறுகிய காலத்தில் 20 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கடந்துள்ளார் வாசனின் … Read more