பள்ளி, கல்லூரிகள் விடுமுறை… சென்னை, புதுச்சேரி லீவ் – வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட்

School College Leave: சென்னையில் பள்ளிகளுக்கும், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வானிலை அப்டேட்டை இங்கு காணலாம்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ராமேசுவரம்: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை புதன்கிழமை மதியம் தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் … Read more

மக்களே உஷார்.. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை!

Flood Warning: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வானிலை முன்னெச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை

சென்னை: தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், தஞ்சை, கடலூர் உட்பட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பும் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 8:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு … Read more

காவலர் வீரவணக்க நாள்: காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் நாள் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1959-ஆம் ஆண்டு லடாக் பகுதியில் சீனப்படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூறும் விதமாகவும், காவல்துறையில் பணியில் இருந்த போது உயிர் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும் … Read more

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

மதுரை வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர்: தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “வடகிழக்கு … Read more

விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியம்! தமிழக அரசின் புதிய திட்டம் – உடனே விண்ணப்பியுங்கள்!

ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மானிய திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்பாட்டில் உள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கலாம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 

மதுரை: ​முஸ்​லிம், கிறிஸ்தவ மதங்​களை சேர்ந்​தவர்​கள் சிறு​வர்​ நீதி சட்​டத்​தின் கீழ் குழந்​தைகளை தத்​தெடுக்​கலாம் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை​யில் முஸ்​லிம் மதத்​தைச் சேர்ந்த ஒரு​வருக்கு குழந்தை இல்​லை. அவரது சகோ​தரருக்கு 3 குழந்​தைகள் உள்​ளனர். இந்​நிலை​யில், அவரதுசகோ​தரர் அண்​மை​யில் இறந்​து​விட்​டார். சகோ​தரரின் 8 வயது மகனை தத்​தெடுக்க அவர் விருப்​பம் தெரி​வித்​தார். மகனை தத்​துக்கொடுக்க சகோ​தரரின் மனை​வி​யும் ஒப்​புக்​கொண்​டுள்​ளார். இதையடுத்​து, தத்​தெடுப்பு பத்​திரத்தை பதிவதற்​காக மேலூர் கிழக்கு சார் பதி​வாளர் அலு​வல​கத்​தில் அவர் விண்​ணப்​பித்​தார். … Read more

கல்வி உரிமை திட்டம்: மீண்டும் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் – அன்புமணி!

கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்தி, தகுதியுடைய அனைவரும் பயனடைவதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.