மு.க.ஸ்டாலின் எதிர்த்த ‘அவுட்சோர்சிங்’ முறையில் ஓட்டுநர்களை நியமிப்பது நியாயமா? – ராமதாஸ்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ஒப்பந்த ஓட்டுநர்கள் கூடாது என்றும், நேரடியாக அரசே நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த அவுட்சோர்சிங் முறையை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்ததையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, தனியார் நிறுவனம் மூலம், அவுட்சோர்சிங் முறையில் 400 ஓட்டுநர்களை நியமிக்க அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. … Read more

பெரியார் சிலை விவகாரம்: கனல் கண்ணன் ஜாமீன் கோரி மனு!

பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சை பேச்சு குறித்த வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் … Read more

வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெரு விழா: 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம்: கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் பக்தர்கள் பங்களிப்பு இல்லாமல் நடைபெற்ற வேளாங்கண்ணி திருவிழா இந்தாண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருக்க கூடிய ஆரோக்கிய மாதா அன்னை ஆலயத்தினுடைய ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டாண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடைபெற்ற இந்த திருவிழா, இந்த வருடம் பக்தர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என பேராலயம் … Read more

தூத்துக்குடி: செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் – காரணம் இதுதான்!

இடப்பிரச்னை காரணமாக தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர் (35). தச்சு வேலை செய்து வரும் இவர் பங்களா தெரு சண்முகம் என்பவரிடம், ராஜகோபால் நகர் 1வது தெருவில் ஒன்றறை சென்ட் இடத்தை மொத்தம் 6 லட்சம் கிராயம் பேசி 4 லட்சம் ரூபாய் அட்வான்ஸாக கொடுத்துள்ளார். பின்னர் அந்த இடத்தில் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடும் கட்டியுள்ளார். … Read more

17 வயது முடிந்தால் வாக்காளர் அட்டைக்கு ‘அட்வான்ஸ் புக்கிங்’ – இந்திய தேர்தல் ஆணையர் தகவல்

சென்னை: “17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக செய்து கொள்ள முடியும். அவர்களுக்கு 18-வது பிறந்த தினத்தில் பரிசாக வீட்டிற்கு வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும்” என்று இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக தேர்தல் ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கும் விழா சென்னை ரிப்பன் அலுவலக வளாகத்தில் … Read more

கோவில் நிலத்தை மீட்க கோரியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

தனிநபர்களுக்கு கடந்த 1971ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்க கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில் உள்ள கரியபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்டு கோவில் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த … Read more

ஜப்பானின் மலர் அலங்காரம் – இந்திய சமையல் இணைந்த "மிஷ்ரானா" புத்தக வெளியீடு!

இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ மற்றும் ஜப்பான் இந்திய இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடடும் விதமாக ஒன்றிணைந்து ஜப்பானின் இகேபனா எனும் கலையை இந்திய பாரம்பரியதுடன் செய்வது மற்றும் இந்திய பாரம்பரிய சமையல் முறை இரண்டும் ஒன்றாக இடம்பெற்றியிருக்கும் “மிஷ்ரானா” என்ற புத்தகம் சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகத்தின் கலாச்சார பிரிவு சார்பாக வெளியிடப்பட்டது.  இகேபனா என்பது ஜப்பானிய பாரம்பரிய கலையான மலர்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் … Read more

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள கலப்பட டீசல் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பெங்களூருவில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்த கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.80 லட்சம் மதிப்புள்ள கலப்பட டீசலுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பாதுகாப்பிற்காக செய்த செயல் உயிரையே பறித்த கொடூரம்.. மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்

சீர்காழி அருகே வீட்டின் பாதுகாப்பிற்காக கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து வசித்துவந்த மூதாட்டி அதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவைச் சேர்ந்தவர் அன்பழகி (68). சீர்காழி நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவர் இறந்த நிலையில் குழந்தைகளும் இல்லாததால் தனிமையில் வசித்து வந்துள்ளார். தன்னுடைய வீட்டின் பாதுகாப்பிற்காக இரவு நேரத்தில் கதவு மற்றும் பீரோவிற்கு மின் இணைப்பு கொடுத்து … Read more

கல்லல் | விவசாயிகளின் வீடு தேடி வரும் விதை நெல்: கிராம மக்கள் உதவியோடு விவசாயத்தை மீட்டெடுத்த பட்டதாரி இளைஞர்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே விவசாயத்தை கைவிட்ட பலரையும் மீண்டும் விவசாயத்தை நோக்கி வர வைத்துள்ளார் பட்டதாரி இளைஞர் ஒருவர். கல்லல் அருகேயுள்ள வேப்பங்குளம் ஊராட்சியில் புதுவேப்பங்குளம், பழைய வேப்பங்குளம், தேர்வலசை, அச்சினி, கல்குளம், சந்தனேந்தல் தெம்மாவயல் என 7 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 2,000 பேர் வசிக்கின்றனர். 600 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. வானம் பார்த்த பூமியாக உள்ள இக்கிராமங்களில் வறட்சி, விவசாய ஈடு பொருட்கள் கிடைப்பதில் சிரமம், விளைபொருட்களுக்கு விலை … Read more