உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு

திருப்பூர்: உடுமலை திருமூர்த்தி அணையின் மூலம் பிஏபி (பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனம்) திட்டத்தின்  மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் , சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உடுமலை நகராட்சி, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் , முதலாம் மண்டல பாசனத்திற்கு, தண்ணீர் வழங்கப்பட்டு, கடந்த மே மாதம் 15ம் தேதி … Read more

’எங்களை தடுத்தால் போலீசையும் வெட்டுவோம்’.. கோயில் கொடை விழாவில் ரகளை செய்தவர் கைது!

நெல்லை மாவட்டம் நான்குநேரியில் கோவில் கொடை விழாவின் போது காவல் உதவி ஆய்வாளர் கணேசனை வெட்ட முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் நான்குநேரி காவல்நிலைய எல்கைகுட்பட்ட மறுகால்குறிச்சி கிராமத்தில் கடந்த  சில தினங்களுக்கு முன்பு தோட்டத்து பேச்சியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது. இந்த கோவில் கொடை விழாவின் போது இரவு இன்னிசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு நான்குநேரி காவல் உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு … Read more

"நல்லொழுக்கத்தை போதிக்கும் கடமையும் கல்வி நிறுவனங்களுக்கு உண்டு" – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கோவை: கல்வியுடன் நல்லொழுக்கத்தை கற்றுத் தரும் கடமை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உண்டு என்று கோவையில் நடந்த கல்லூரி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். கோவை பீளமேட்டில் இயங்கி வரும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியின் பவளவிழா கல்லூரி அரங்கில் வெள்ளிக்கிழமை (ஆக.26) மாலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பவளவிழா திறந்தவெளி அரங்கம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நாட்டிலேயே தமிழகம் … Read more

மதுரையில் அமைச்சர் பிடிஆர் கார் மீதான செருப்பு வீச்சு சம்பவத்தை ‘எப்படி அரசியல் பண்ணலாம் என யோசித்து கொண்டிருக்கிறேன்’

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பிடிஆர் கார் மீதான செருப்பு வீச்சு சம்பவம் தொடர்பாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் சுசீந்திரனிடம், ‘‘இதை வைத்து எப்படி அரசியல் பண்ணுவது என்று யோசித்து கொண்டிருக்கிறேன்…” என பேசியுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காஷ்மீரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை விமான நிலையத்திற்கு கடந்த 13ம் தேதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் … Read more

இந்திய தேசியக் கொடியில் ‘மேட் இன் சீனா’ வாசகம்.. காமன்வெல்த் சபாநாயகர் மாநாட்டில் சர்ச்சை!

கனடா காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் இந்திய தேசியக் கொடியில் மேட் இன் சைனா என்ற பொறிக்கப்பட்டிருந்ததால் சர்ச்சசை எழுந்துள்ளது. கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 26 வரை நடைபெற்றது. இந்தியா சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் பல மாநில சட்டமன்ற சபாநாயகர்கள், எம்.பிக்கள் பங்கேற்றனர். மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு சபாநாயகர்கள் கையில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர். அந்த தேசியக் கொடியில் மேட் … Read more

தென்காசி ஆட்சியர் அலுவலகம் கட்டுமானப் பணிக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

மதுரை: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த எஸ்.பி.முத்துராமன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது. ரூ.119 கோடி செலவில் 6 மாடிகளுடன் ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணியை நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானப் பணிக்கு மாநில அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் … Read more

எல்லோருக்கும் பொதுவான நிகழ்ச்சியாகவே பிஎஸ்ஜி கல்லூரி விழாவை பார்க்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

கோவை: மூன்று நாள் பயணமாக இந்த மேற்கு மண்டலத்திற்கு வருகை தந்த நான், பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், இயக்கத்தினுடைய நிகழ்ச்சிகள், அதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு இப்போது இங்கே வந்திருக்கிறேன், உங்கள் கல்லூரிக்கு வந்திருக்கிறேன். இது ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆனால் நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. எல்லோலாருக்கும் பொதுவான நிகழ்ச்சியாகத்தான் நான் இதை உணர்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.  இந்தக் கல்லூரி எவ்வளவு நேரம் தவறாமல் ஒரு கட்டுப்பாட்டோடு நடைபெறுகின்றது … Read more

ஆருத்ரா மோசடியால் சிதைந்த குடும்பம்.. தாயின் 16ம் நாள் காரியம் முடிந்தவுடன் மகனும் தற்கொலை

காஞ்சிபுரம் அருகே நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணத்திற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர். ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் முகவராக செயல்பட்டு வந்துள்ளார். விஜயபாஸ்கரை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் … Read more

அமாவாசை விரதம் போகணும்… சட்டென முடிந்த திருச்சி மாநகராட்சி கவுன்சில்!

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி 60வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய் தங்களது பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால்  குழாய்களின் சுற்றளவை அதிகரிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தி பேசிய போது: மேயர் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் அமாவாசை விரதம் முடிக்க வேண்டும் சொல்லி கூச்சலிட்டனர். இதனால் … Read more

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தில் விரிசல்.!

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி ரயில்வே அலுவலர்கள் இன்று காலை தண்டவாளத்தை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாணியம்பாடி அருகே நியூ டவுன் ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. அப்போது சென்னையிலிருந்து கோவைக்கு சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து அந்த ரயில் வாணியம்பாடியில் நிறுத்தப்பட்டது. இதனை போன்றே, சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர் காட்பாடியில் நிறுத்தப்பட்டது.  மேலும், லால்பாக் எக்ஸ்பிரஸ் வாலாஜாபேட்டையில் நிறுத்தப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. … Read more