புதுச்சேரியில் தியாகிகளுக்கு ரூ.1000 பென்ஷன் உயர்வு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: “புதுச்சேரியில் தியாகிகளுக்கு ரூ.1000 பென்ஷன் உயர்த்தி வழங்கப்படும்; மாநில அந்தஸ்து பெற அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியில் முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசியது: ‘‘நிதிலை அறிக்கையில் நம்முடைய நிதி ஆதாரம் என்ன, கடன் எவ்வளவு பெறப்போகிறோம், எவ்வளவு செலவு செய்துள்ளோம் உள்ளிட்டவை குறித்து விளக்கமாக சொல்லியுள்ளோம். இதில் எந்த மறைவும் இல்லை. இருக்கின்ற வருவாயை கொண்டு அறிவித்துள்ள திட்டங்களை … Read more