IND vs PAK: கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார், யார்? இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா?

Asia Cup 2022: India vs Pakistan Tamil News: 15 – வது ஆசிய கோப்பை போட்டிகள் வருகிற 27ம் முதல் தொடங்குகிறது. இதில் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில், இந்தியா கிரிக்கெட்டில் தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் கடைசியாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நேருக்கு நேர் சந்தித்தன. அந்த ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் 10 … Read more

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செப்.15-ல் தொடங்க முடிவு – வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை: அரசுப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை செப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டம் … Read more

குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தல்; 5 பேர் கைது

பள்ளிப்பட்டு:  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் போதை பொருட்கள் தடுப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு  காவல் ஆய்வாளர் ராஜ்  தலைமையில்  போலீசார் அய்யனேரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ் வழியாக சோளிங்கரிலிருந்து திருத்தணி நோக்கி சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது மூட்டையில் அடைத்து கடத்திய  ரூ.25 ஆயிரம் மதிப்பிலான  குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ைபக்கில் வந்த … Read more

சோனாலி போகட் மரணம்: கொலை வழக்கு பதிவு; பிரேதப் பரிசோதனையில் காயங்கள் கண்டுபிடிப்பு

பாஜக தலைவர் சோனாலி போகட்டின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோவா காவல்துறை வியாழக்கிழமை கொலை வழக்காக பதிவு செய்துள்ளது. 42 வயதான நடிகையும்அரசியல்வாதியுமான சோனாலி போகட் செவ்வாயன்று கோவாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் மாரடைப்பால் மரணமடைந்தார். போலீஸ் ஐ.ஜி ஓம்வீர் சிங் பிஷ்னோய், “இறந்தவரின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், அஞ்சுனா காவல் நிலையத்தில் 302 பிரிவின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். சோனாலி போகட்டின் சகோதரர் ரிங்கு டாக்கா புதன்கிழமையன்று போகட்டின் … Read more

திமுக செய்யும் பச்சைத் துரோகம்: பல்கலை. பணியாளர்கள் விவகாரத்தில் சீமான் சாடல்

சென்னை: “10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் பல்கலைக்கழகத் தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து, அதன் மூலம் வாக்குகளைப் பெற்று ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த திமுக, தற்போது அதனை நிறைவேற்ற மறுப்பது பல்கலைக்கழக ஊழியர்களுக்குச் செய்யும் பச்சை துரோகமாகும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஊழியர்களைப் … Read more

புதிய பதவி உயர்வு; கொள்கையை கைவிடக்கோரி அணுசக்தி ஊழியர்கள் உண்ணாவிரதம்

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம், அணு சக்தி துறையின் டிராம்பே கவுன்சில் மற்றும் டிராம்பே சைன்டிபிக் கவுன்சிலின் புதிய பதவி உயர்வு கொள்கையை கைவிட வேண்டி, தொழிற்சங்க இணைப்பு குழு சார்பில்  கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் ரவுண்டானா அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு  தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கத்தின் நிறுவன உறுப்பினர் சக்கரபாணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கத்தின் தலைவர்  சின்ன கோவிந்தன், அணு ஆற்றல் ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜான், … Read more

பேரிச்சம் பழம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதா? எப்போது சாப்பிட வேண்டும்..

பேரிச்சம் பழம் அதிக கலோரிகள் இருப்பதால் அதை எப்போது சாப்பிட வேண்டும் என்ற சந்தேகம் வருவது இயல்பு. பேரிச்சம் பழத்தில் அதிக நார்சத்து இருக்கிறது. இது நமது ஒட்டு மொத்த அரோக்கியத்திற்கும் நன்மை தருகிறது. ஜீரண மண்டலத்தை சீர்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிக நன்மைகள் அளிக்கிறது. இரவில் ஊரவைத்து மறுநள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதா ? அல்லது வெறும் வயிற்றில் பேரிசம்பழம் சாப்பிடுவதா ? இரவு தூங்கப்போவதற்கு முன்பு பேரிச்சம் பழம் சாப்பிடுவதா … Read more

பல மாவட்டங்களுக்கு போதை மருந்தை விற்பனை செய்த பொறியியல் பட்டதாரி கைது..!

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் உள்ள மாணவர்களை போதை ஊசிகளுக்கு அடிமையாக்கிய திருச்சியைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேரை, போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனுாரில் இளைஞர்கள் போதை ஊசி செலுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அறிந்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், உத்தமபாளையம் இந்திரா நகர் முகமது மீரான் வயது 22, சின்னமனுார் சாமிகுளத்தைச் சேர்ந்த மாணிக்கம் வயது 19, ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், … Read more