இரு பெண்கள் பாலியல் புகார்: எழுத்தாளர் சிவிக் சந்திரன் முன்ஜாமின் ரத்து

இரு பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ள நிலையில் பிரபல மலையாள எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை கேரள மாநில உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்தது.கேரளத்தின் எழுத்தாளராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் திகழ்பவர் சிவிக் சந்திரன். 73 வயதான இவர் கோழிக்கோட்டில் வசித்துவருகிறார்.இவர் மீது இளம்பெண் எழுத்தாளர் ஒருவர் ஏப்ரல் 2ஆம் தேதி புகார் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் சிவிக் சந்திரன் முன்ஜாமின் பெற்றுவிட்டார். இந்த நிலையில் மற்றொரு பெண் எழுத்தாள் ஒருவர் சிவிக் சந்திரன் … Read more

அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – பிரச்சனையை சுமுகமாக முடித்த தமிழக அரசு.!

போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள்  தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு சென்னையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை குரோம்பேட்டை பணிமனையில் ஊதிய உயர்வு குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் 66 தொழிற்சங்கங்களுடன் 7 கட்டங்களாக  பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதனை தொடர்ந்து, இன்று சென்னையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் ஊதிய உயர்வு … Read more

கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்ற முற்பட்டால் தொடர் உண்ணாவிரதம் – எடப்பாடி பழனிசாமி

கோவை: கோவை வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை இடம் மாற்ற செய்ய முற்பட்டால் கோவை மாநகராட்சியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி தமிழக அரசை எச்சரித்துள்ளார். கோவையில் அதிமுக பிரமுகரின் இல்ல நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “கோவை மாநகர மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சியில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான பணிகள் தொடங்கின. இந்நிலையில், திமுக … Read more

எம்எல்ஏ வீட்டு காதணி விழா மொய் விருந்தில் ரூ.10 கோடி வசூல்

பேராவூரணி: பேராவூரணியில் நடந்த மொய்விருந்தில் ரூ.10 கோடி வசூலானது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரிடையே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொய் என்ற பழக்கம் இன்று சாதி, மத சமய எல்லைகளை கடந்து அனைவருக்கும் பொதுவான நிகழ்வாக மாறியுள்ளது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி தொகுதியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் நெடுவாசல், அனவயல், வடகாடு உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகமாக மொய் விருந்து நடைபெறுகிறது. ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் நடைபெற்ற … Read more

அதிமுக விவகாரம்: தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? நீதிமன்றம் கண்டனம்

அதிமுக பொதுக்குழு மற்றும் தேர்தல் தொடர்பான வழக்குகளை ஒரே அமர்வில் பட்டியலிடும்படி கடிதம் கொடுத்த மனுதாரர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் கே.சி. பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். அதில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த … Read more

கடனை விரிவுப்படுத்தும் அதானி: பிட்ச் கிரெடிட் தர நிறுவனம் சொல்வதென்ன?

கடன் வாங்கி தொழில் நடத்துகிறார், அதுவும் கொஞ்சம் நஞ்சம் கடன் அல்ல. கப்பலே மூழ்கி போகும் அளவுக்கு கடன் என கௌதம் அதானி நிறுவனம் குறித்து பிரபல நிதி தர நிறுவனமான பிட்ச் தெரிவித்துள்ளது.இன்றைய காலகட்டத்தில் அதிகமாக ஒலிக்கும் ஒரு பெயர் கௌதம் அதானி. இவர் தான் பல்துறை தொழில் நிறுவனமான அதானி குழுமங்களின் தலைவர். இவர் குறித்து பிட்ச் நிதி தர நிறுவனம் அளித்துள்ள அறிக்கைதான் இன்றைய ஹாட் டாபிக்.தற்போதுள்ள சூழலில் அதானி நிறுவனம் அதிகப்படியான … Read more

முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

மதுரை: லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சதீஷ்பாபு என்பவர் லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து பெரிய குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் ரூ.1,020 கோடியில் … Read more

மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நடிகை சோனாலி கொல்லப்பட்டாரா?.. சகோதரர் புகாரால் பரபரப்பு

பனாஜி: நடிகை சோனாலி போகட்டின் மரணம் இயற்கையானது இல்லை. உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்று அவரது சகோதரர் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். அரியானாவைச் சேர்ந்த நடிகை சோனாலி போகட்(42),  கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்றுமுன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரை பரிசோதித்த டாக்டர்கள் சோனாலி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என அறிவித்தனர். இதற்கிடையே, சோனாலியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது சகோதரரும், சகோதரியும் புகார் கூறியுள்ளனர். சோனாலி மரணத்திற்கு முன்னால் நடந்த இரவு … Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு மீண்டும் பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினிக்கு 8-வது முறையாக மேலும் 30 நாட்களுக்கு பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் நளினி. தனது தாயார் பத்மாவதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக்கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை அடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு … Read more

தண்ணீரே இல்லாத இடத்தில் கூட வளரும்; பனைமரங்களை பாதுகாப்பது அவசியம் – யோகா விஜயகுமார்

க.சண்முகவடிவேல் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் ஆற்றங்கரையோரம் ஆயிரம் பனை விதை விதைப்பு பணிகள் திருச்சியில் நடைபெற்றது.  மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.கே.ராஜா, கன்மலை டிரஸ்ட் வில்பர்ட் எடிசன், அக்னி சிறகுகள் மகேந்திரன், சுகு, நிரோஷ், ஆரிப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த பனை விதை விதைப்பு பணியில் ஈடுபட்டனர். பனை … Read more