எளாவூர் சோதனை சாவடியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உள்ளிட்ட தனிப்படை போலீசார் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆந்திர மாநில அரசு பேருந்தை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் 21 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து பேருந்தில் பயணித்த 4 பேரை போலீசார் கவரப்பேட்டை காவல்நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில் ஆந்திர மாநிலம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முரளி, ஜோதி, தினேஷ், பாக்கியகிருஷ்ணா … Read more

உதவி இயக்குனரை அடித்த சீரியல் நடிகர்… பாதியில் நின்றது ஷூட்டிங்

ஷூட்டிங்கிங்கு அழைத்த உதவி இயக்குனரை சீரியல் நடிகர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாடே சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் நவீன். அதற்கு முன்பு தமிழில் பூலோகம் பட்டாஸ்’ மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாலும், நவீனுக்கு அடையாளத்தை கொடுத்தது சீரியல் தான் இதயத்தை திருடாதே சீரியலுக்கும் நடிகர் நவீனுக்கும் ரசிகர்கள் … Read more

ஆகஸ்ட் 27 : சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் வேலைநாள்! வெளியானது அறிவிப்பு! 

சென்னையில் நடைபெற்ற 44 சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா அன்று திருவள்ளுர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதால் அதனை ஈடு செய்யும் விதமாக தற்பொழுது மாற்று வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியா போட்டிகள் தொடங்கியது. இதற்கான தொடக்க விழாவையொட்டி திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஜூலை 28ஆம் … Read more

மிளகாய் பொடியை தூவி, காரில் பைனான்சியரை கடத்திய மர்ம கும்பல்.. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!

நாமக்கல் மாவட்டம் பாதரையில் கெளதம் என்ற பைனான்சியரை மிளகாய் பொடி தூவி காரில் கடத்தி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நேற்றிரவு வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கௌதமை, வீட்டின் அருகே காத்திருந்த மர்ம கும்பல் ஒன்று, மிளகாய் பொடியை தூவி இருசக்கர வாகனத்துடன் காரில் கடத்திச்சென்றது. கடத்தப்பட்ட கௌதமின் மனைவி திவ்யா கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி வரும் போலீசார், கடத்தப்பட்ட இடத்தில் சிதறிக்கிடந்த காலணி, உடைந்த மூக்குகண்ணாடி, … Read more

89 இந்து இயக்க பிரமுகர்களுக்கு பாதுகாப்பு – விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து இயக்க பிரமுகர்கள் 89 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, கடந்த மே மாதம் முகமது நபி குறித்து கூறியகருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோவில், “அவதூறாக பேசியதற்கு பழிவாங்குவோம்.இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவோம்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் முக்கிய … Read more

திருவாலங்காடு கூளூர் கிராம கன்னியம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணி தொடக்கம்

திருத்தணி: திருத்தணி வட்டம், திருவாலங்காடு ஒன்றியம், கூளூர் கிராம கன்னியம்மன் கோயில் குளம் ரூ.2,18,000  செலவில்  தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இந்த விழாவில்   ஓராசிரியர் பள்ளிகளின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் விஜயராகவன், சிவராமகிருஷ்ணன், மகேஷ் ஆகியோர் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டனர்.  கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையில் தூர்வாரப்பட்ட அனைத்து குளங்களும் நிரம்பியதை கிராம மக்கள் மிக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் களமேற்பார்வையாளர்கள் உள்பட கலந்து கொண்டனர். சுவாமி … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம் – இபிஎஸ் மேல்முறையீட்டு மனு நாளை இறுதி விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முன்னாள் முதல்வர் பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை நாளை (ஆக. 25) தள்ளிவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னையில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் அம்மன் பி.வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற … Read more

கடன் தொல்லையால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே கடன் தொல்லையால் விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். கல்பாக்கம்  அடுத்த புதுப்பட்டினம் ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி  (27).  இவர், அங்குள்ள அடகு கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.  இந்நிலையில், வேலையில் நின்றுவிட்ட அவர், சில மாதங்களாக வேலையின்றி தவித்து  வந்தார். மேலும் வீட்டின் மீது வங்கி கடன் மற்றும் நண்பர்கள்,  தெரிந்தவர்கள் என பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து,  வங்கி  கடன்தாரர்கள் மற்றும் வெளியில் … Read more

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மின் கட்டண சலுகை: செந்தில் பாலாஜி தகவல்

மின்சார கட்டணத்தில் சிறு குறு தொழில் முனைவோரின் கோரிக்கையை ஏற்று பரிசீலனைக்கு பின் பிக்சிடு சார்ஜ், டிமாண்ட் சார்ஜ் விலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவையில் ஈச்சனாரி பகுதியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த ஏற்பாடுகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி … Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அடுத்த 5 நாட்களுக்கு அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, புதுக்கோட்டை, பெரம்பலூர்‌, … Read more