விழிஞ்சம் மீனவர்கள் போராட்டம்: ஆதரவளிக்கும் கத்தோலிக்க திருச்சபை!

கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுக திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில், அங்கு நடக்கும் மீனவ மக்களின் போராட்டங்களுக்கு கத்தோலிக்க திருச்சபை ஆதரவு உள்ளது.இதற்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காண கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் அங்கு சென்றார். அப்போது மக்கள் அவரிடம் கோபமான கேள்விகளை முன்னிறுத்தினர். அரசியல்வாதிகள் மீது அவர்கள் கோபத்தில் இருப்பது இதன் மூலம் அறிய முடிந்தது. கேரளாவில் இந்தத் திட்டம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி … Read more

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து – வாலிபர் பலி

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஏழுசாட்டுபத்து பகுதியை சேர்ந்த பால்துரை என்பவரது மகன் வருண் (27). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான சித்தார்த் என்பவருடன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமாரி செல்லும் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் … Read more

இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் நாளை உயர் நீதிமன்றம் விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் விசாரணைக்குப் பட்டியலிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், “கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது. … Read more

அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமனம்: விதிகளை வகுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  ராஜபாளையம் அருகே சமாதானபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீத். திருவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் தனது மகன் கொலை வழக்கில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ஆஜராக பவானி ப.மோகனை நியமிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வீ.சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: இதைப்போல திருச்சியிலுள்ள ஒரு வழக்கிலும் பவானி ப.மோகனை சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கக் கோரிய மனுவும் நிலுவையில் உள்ளது. இரு மனுக்களிலும் ஒரே காரணம் கூறப்பட்டுள்ளன. … Read more

ஜெயா டி.வி-யை புகழ்ந்து ஓ.பி.எஸ் பேட்டி: சசிகலாவுடன் இணைய முன்னோட்டம்?

தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவில் கடந்த சில மாதங்களாக பல அதிரடி திருப்பங்கள் அரஙகேறி வரும் நிலையில், தற்போ மேலும் ஒரு திருப்பமாக எடப்பாடி அணியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒ.பன்னீர்செல்வம் ஜெயா தொலைக்காட்சியில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தததில் இருந்து பதவி மோதல் பெரும் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் அதிமுக ஆட்சியில் இருந்தது முதல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும், ஒ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர். … Read more

17 ஆண்டுகளுக்கு பிறகு நகைகள் சரிபார்ப்பு ஆய்வு..!

 கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சுவாமிகளுக்கு ஏராளமான நகைகள் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும் முதன் முதலாக கடந்த 1955 ஆம் ஆண்டு கணக்கீடு செய்யப்பட்டது.  அதன் பிறகு பல்வேறு கால கட்டங்களில் நகைகள் சரிபார்ப்பு ஆய்வு நடந்த வந்த நிலையில், கடைசியாக கடந்த 2005 ஆம் ஆண்டு மதிப்பீடு ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று மீண்டும் நகை சரிபார்ப்பு ஆய்வு துவங்கியுள்ளது. இதில் 6 பேர் … Read more

தூத்துக்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவரை வெட்டி கொலை செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவரான பொன்ராஜ், தனது தோட்டத்தில் இருந்தபோது, அங்கு புகுந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பியோடினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே ஊரை சேர்ந்த கார்த்திக், வசந்த் ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 15ஆம் தேதி மழைநீர் வடிகால் … Read more

கள்ளக்குறிச்சி கலவரத்தில் சட்டவிரோதமாக கைதானோருக்கு இழப்பீடு கோரிய வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரம் தொடர்பாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூன்று நாட்களுக்கு பின் பள்ளியில் நடந்த கலவரம், தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காணக் கோரியும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக் … Read more

அதிக வட்டி தருவதாக ரூ.930 கோடி சுருட்டல்: பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் 26ம் தேதி தீர்ப்பு

கோவை: திருப்பூரை தலைமையிடமாக கொண்டு கடந்த 2011ல் பாசி டிரேடிங் என்ற ஆன்லைன் நிதி நிறுவனத்தினர் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.930 கோடிமோசடி செய்தது. இதுதொடர்பாக, அந்த நிறுவனத்தின் இயக்குநர் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன் மற்றும் பங்குதாரர் கமலவள்ளி ஆகியோரை சி.பி.ஐ போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பாக கோவையில் உள்ள தமிழக முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) வழக்கு தொடரப்பட்டது. 2013ல் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் … Read more

அ.தி.மு.க அலுவலகத்தில் மது, மாமிசம்: கோவை செல்வராஜ் புகார்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பாபா இல்லத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின்  கோவை மாநகர மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ் கூறுகையில், நேற்று முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ் அவர்களை தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அம்மாவால் விரட்டி அடிக்கப் பட்டவர் முனுசாமி. அவருக்கு கட்சியில் 2 ம் தலைவராக வாய்பு வாங்கி கொடுத்தவர் ஓ.பி.எஸ். எடப்பாடியே முனுசாமிக்கு எதிராக பேசிய … Read more