இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை..!
நடிகர் கார்த்தி நடித்த படத்தை தயாரிக்க பெற்ற கடனை திரும்ப செலுத்தாத வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை தயாரிக்க, பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாயை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக லிங்குசாமி கடனாக பெற்றார். அப்போது, அவர் கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை பணமில்லாமல் திரும்பியதால், பி.வி.பி. நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. … Read more