ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கையை மக்கள் மன்றத்தில் வைத்திடுக: முத்தரசன்

சென்னை: “ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையை மக்கள் மன்றத்தில் முன்வைத்து பொது விவாதம் நடத்த வேண்டும்” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி அருகில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையின் இயக்கத்தின் நச்சுக் கழிவுகள் வெளியேறி சுற்றுச்சூழல் பாதித்து, உயிர் வாழ்வும் பறிபோகும் அபாயம் எட்டிய நிலையில், அந்த ஆலையை நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்று … Read more

பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி..! – பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

தனியார் பள்ளிகளைப் போல் அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்புகள் இல்லாத சூழலே இன்னும் நிலவுகிறது. இதுநாள் வரை அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை அரசு பள்ளி மாணவர்களே செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் பள்ளி மாணவர்களை தூய்மைப்படுத்த வைப்பது தொடர்பாக பள்ளி கல்வி துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இன்று பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளியில் மரங்கள் இருந்தால் அதில் … Read more

ராமஜெயம் கொலை வழக்கு: கோவையில் சிபிசிஐடி சிறப்பு குழு விசாரணை

கோவை: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் சிபிசிஐடி சிறப்பு குழுவினர் விசாரணை நடத்தினர். திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் ராமஜெயம், திருச்சி திருவளர்ச்சோலை பகுதியில் கடந்த 29.3.2012ல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக தற்போது சிபிசிஐடி போலீசாருக்கு முக்கிய தடயமாக, மாருதி சுசுகி வெர்ஷா கார் ஒன்று கொலை சம்பவம் நடைபெற்ற நாளில் அப்பகுதியில் … Read more

மின் நிறுவனங்களுக்கு ரூ.926 கோடி நிலுவை | தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு: ஓபிஎஸ்

சென்னை: “மின்சாரத் தேவை என்பது எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம் என்ற நிலையில், ஒரு நாட்டின் பொருளாதாரமே மின்சாரத்தை நம்பியுள்ள நிலையில், எரிசக்தி பரிமாற்றச் சந்தையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண் வளர்ச்சிக்கும், தொழில் மேம்பாட்டிற்கும், இளைய சமுதாயத்தினர் முன்னேற்றம் அடைவதற்கும் முக்கிய காரணியாக விளங்குவது … Read more

“எடப்பாடியின் பரிணாம வளர்ச்சிக்கு அவரது உழைப்பே காரணம்.ஆனால்”…. – ஓ.பி.ரவீந்திரநாத் சொல்வது என்ன..?

சில தினங்களுக்கு முன்பாக ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது ஓபிஎஸ் ஆதரவாளர்களை குஷிப்படுத்தியது. இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை எதிர்கொள்ள முடியும். அதிமுக எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்திற்கு பிறகு இந்த இயக்கம் பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளது. அதிமுக பொதுக்குழுவின் போது ஓபிஎஸ் பல அவமானங்களை சந்தித்துள்ளார். கழகம் ஒன்றுபட … Read more

ஊடகங்களில் சொல்லப்பட்ட செய்தி தவறானது -அமைச்சர் மூர்த்தி விளக்கம்

Parandur Airport: சென்னை புதிய விமான நிலையம் அமையவுள்ள காஞ்சிபுரம் வட்டம் பரந்தூர் கிராமத்தில் உயர் மதிப்பில் பதிவான ஆவணம் குறித்து ஊடகங்களில் வந்த செய்தி குறித்த உண்மை நிலை என்ன என்பதை தமிழக வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் என்ன கூறியிருக்கிறது என்பதைக் குறித்து அறிந்துக்கொள்ளுவோம்.  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிக்கையில் கூறியதாவது,  சென்னை புதிய விமான நிலையம் அமையவுள்ள காஞ்சிபுரம் வட்டம் … Read more

ஆன்லைனில் வேலை தேடிய இளம்பெண்- மோசடி செய்து ரூ.6 லட்சத்தை அபேஸ் செய்த இளைஞர்!

சென்னையில் ஒ.எல்.எக்ஸ் செயலியில் பகுதி நேர வேலை தேடிய பெண்ணை நூதன முறையில் மோசடி செய்து ஆறு லட்சம் ரூபாய் ஏமாற்றிய திருடனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆவடி கோயில் பதாகை பகுதியை சேர்ந்தவர் 24 வயதான சந்தியா. கடந்த மே மாதம் வீட்டில் இருந்தபடி பணியாற்ற ஆன்லைனில் வேலை தேடி உள்ளார் சந்தியா. அப்போது ஒ.எல்.எக்ஸ் எனும் தனியார் வர்த்தக செயலின் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சந்தியாவுக்கு அறிமுகமாகியுள்ளார். வீட்டில் இருந்தபடி பேக்கிங் … Read more

'பத்திரப்பதிவுத் துறையில் சட்டமீறல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன' – மநீம கண்டனம்

சென்னை: “புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை பலமடங்கு ஏற்றி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் பத்திரப்பதிவுத் துறையின் நம்பகத்தன்மையைக் குலைப்பதாக உள்ளது” என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: “புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை பலமடங்கு ஏற்றி மோசடியாகப் பத்திரப்பதிவு … Read more

ஸ்டாலினிடம் சென்ற ரிப்போர்ட்: இனி அதிரடி கைது தான்!

ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதார் இன்று (ஆகஸ்ட் 20 ) தாக்கல் செய்தார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2015ஆம் ஆண்டு சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது. நகரம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன. பல … Read more

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா – அமைச்சர் தகவல்

அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி, சென்னை மாநகரப் பேருந்துகளில் முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது என்றும், அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் திருமாவேலனின் ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் புதுக்கோட்டை வருகை தந்திருந்தார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த … Read more