மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளும் அகற்றப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்களின் அருகாமையில் உள்ள மதுக்கடைகள்  அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். கன்னியாகுமரியில் பேசிய அவர், மக்களுக்கு இடையூறாக  உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்பது அரசின் முடிவு  என்றும் கூறினார்.  Source link

சென்னை தின கொண்டாட்டம்: எலியட்ஸ் கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் – எலியட்ஸ் கடற்கரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் எலியட் கடற்கரையில் மாலை 3.30 மணி முதல் 11.30 மணி வரை சென்னை தின கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறகிறது. இதன் காரணமாக பெசன்ட் நகர் 6-வது நிழற்சாலை முதல் போலீஸ் பூத் முதல் மீன் கடை வரை சுமார் 850 மீட்டர் தூரத்திற்கு … Read more

நெல்லை கண்ணன் உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி

நெல்லை: பட்டிமன்ற இலக்கிய பேச்சாளரான நெல்லை கண்ணன்(77) நேற்று முன்தினம் வயது முதிர்வு காரணமாக காலமானார். நேற்று காலை அவரது உடலுக்கு தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி, நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வகாப் எம்எல்ஏ, தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஜெயசீலன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பாஜ சார்பில் நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். விடுதலைசிறுத்தைகள் சார்பில் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி … Read more

மாப்ள ஒருவேள மெடிக்கல் ரெப்பா இருப்பாரோ? இணையத்தை கலக்கும் மாத்திரை அட்டை திருமண அழைப்பிதழ்!

மாத்திரை அட்டை வடிவில் நெட்டிசன்களை ஈர்க்கும் விதமாக வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் பரவசப்பட வைத்துள்ளது. திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். அப்படி அந்த ஒரு நாளில் நடக்கும் நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்குள் அனைவருமே திக்குமுக்காடிவிடுவர். வீட்டை கட்டிப் பார், கல்யாணம் முடித்துப் பார் என்ற பழமொழி கூட உண்டு. திருமணம் என்றால் பலரின் கூட்டு முயற்சிதான் அங்கே அங்கம் வகிக்கும். திருமணம் என்ற பேச்சு அடிபட்டவுடனே … Read more

இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்பதை நிரூபிக்க முடியுமா? – நிதியமைச்சருக்கு சீமான் கேள்வி

இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்பதை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா? என பிரதமர் மோடிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி விமானநிலையத்தில் 19.5.2018 அன்று மதிமுகவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக, மதிமுக மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு அளித்த புகார் மீதான வழக்கு விசாரணை திருச்சி ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று … Read more

திருச்சி மத்திய சிறை முகாமில் அதிரடி சோதனை: 60 செல்போன் பறிமுதல்

திருச்சி: திருச்சி மத்திய சிறை முகாமில் 250க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி 60 செல்போ ன்களை பறிமுதல் செய்தனர். செல்போன்களை திரும்ப ஒப்படைக்க கோரி கைதிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், 4 பேர் தற்கொலை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாட்டை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். போலி பாஸ்போர்ட்டில் வந்தவர்கள், விசா முடிந்தும் தங்கள் நாடுகளுக்கு செல்லாதவர்கள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட இலங்கை … Read more

மும்பையில் மீண்டு(ம்) டபுள் டெக்கர்.. அந்த நாள் ஞாபகம் வந்ததே வந்ததே..!

மும்பையின் அடையாளமான டபுள் டெக்கர் பேருந்துகள் 19600களில் நகரெங்கிலும்அழகாக வலம்வந்தன. ஆனால் பின்னாள்களில் அவை வழக்கொழிந்தன. மும்பைவாசிகளுடன் டபுள் டெக்கர் பேருந்துகளின் 70 ஆண்டுகால காதலை அவ்வளவு எளிதாக கடந்துசெல்ல முடியாது. இந்தக் காதல் தற்போது மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆம், மும்பையின் அங்கமான டபுள் டெக்கர் பேருந்துகள், அதுவும் சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைவிக்காத எலக்ட்ரானிக் பேருந்துகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 18) மீண்டு(ம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மும்பையில் முதன் முதலாக டபுள் டெக்கர் பேருந்துகள் 1937இல் ஆங்கிலேயர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தப் … Read more

தூத்துக்குடி: டீக்கடை உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் டீக்கடை உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் செட்டிக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(57). இவர் அதே பகுதியில் டீக்கடை ஒன்று நடத்தி வந்தார். இந்நிலையில் சுரேஷுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் இவருக்கு கடன் பிரச்சனை இருந்ததால், மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ், அவரது கடையின் அருகே உள்ள கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த … Read more

கைலாசா அதிபருக்கு திடீர் கைது வாரண்டு.! எப்படி கொடுப்பது.? என போலீஸ் குழப்பம்

பாலியல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கு கொடுத்து வரும் கைலாசா அதிபர் நித்யானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில், தன்னை சாமியாராக அவதானித்துக் கொள்ளும் நித்யானந்தாவுக்குச் சொந்தமான ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் சிஷ்யை ஒருவர் அளித்த புகாரின் பேரில் பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று … Read more

அஞ்சலகங்களில் 8.7 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்கள் மூலம் மொத்தம் 8.7 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டன. இதன்மூலம் ரூ.2.17 கோடி வருவாய் கிடைத்தது. இதுபற்றி சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நட்ராஜ் கூறியதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்களில் 8.71 லட்சம் கொடிகள் விற்பனையாகின. இதில், அதிகபட்சமாக சென்னை நகர மண்டலத்தில் 2.74 லட்சம் கொடிகளும், மத்திய மண்டலத்தில் 2.32 லட்சம், மேற்கு மண்டலத்தில் … Read more