சிவசேனாவுக்கு நடந்ததுதான் இங்கே திமுகவுக்கும் நடக்கும்: அண்ணாமலை

புதுக்கோட்டையில் நேற்றிரவு பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் , அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேசியது: புதுக்கோட்டை எம்.பி தொகுதிசிலரின் ஆதாயத்துக்காக 4 பகுதிகளாக துண்டாடப்பட்டுள்ளது. தொகுதி மறு சீரமைப்பு வரும்போது புதுக்கோட்டை எம்.பி தொகுதி மீண்டும் உருவாக்கப்படும். சமூக நீதி, சமநீதி பேசும்திமுக ஆட்சியில், சுதந்திர தினத்தில் 20 ஊராட்சி மன்றத் தலைவர்களால் தேசியக் கொடியேற்ற முடியவில்லை. 22 ஊராட்சி மன்றத் தலைவர்களால் அவர்களின் நாற்காலியில் அமர முடியவில்லை. 42 ஊராட்சி மன்றத் தலைவர்களின் பெயர்ப் … Read more

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது: வடமதுரை அருகே அதிர்ச்சி

வடமதுரை: வடமதுரை அருகே நான்கு வழிச்சாலையில் ஓடிக் கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்லை சேர்ந்தவர் அருள்ஜோதி (33). இவர் திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினார். நேற்று காலை ஸ்கூட்டரில் திண்டுக்கல்லில் இருந்து வேலைக்கு சென்றார். பின்னர் மீண்டும் பணி தொடர்பாக ஸ்கூட்டரில் வடமதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல் – … Read more

வேலூரில் போலி மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வாங்கி கொடுத்தவர் குண்டாசில் கைது

வேலூர்: வேலூர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் கடந்த ஏப்ரல் மாதம் எஸ்பியிடம் அளித்த புகார் மனுவில், வேலூர் மாவட்டத்தில் மாற்றத்திறனாளிகள் அல்லாதவர்கள் போலி மருத்துவ சான்றிதழ் பெற்று மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையை பெற்று நலத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர்  என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முதல்கட்டமாக போலி சான்றிதழ் மூலம் தேசிய அடையாள அட்டை … Read more

கடலூர்: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் மோசஸ்(18). இவருக்கு பெற்றோர் இல்லாததால், கடலூர் மாவட்டம் கணிசப்பாக்கம் பகுதியில் உள்ள தாய் மாமன் வீட்டில் தங்கி, மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் இன்று காலை வழக்கமாக வேலைக்கு செல்வதற்காக குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்பொழுது மழை பெய்ததால் தரை வழிக்கு உள்ளது. மோசஸ் கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த … Read more

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்: கல்வியாளர்கள் கோரிக்கை

சென்னை: “கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிப்பதற்கு ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் தாமதப்போக்கும், மெத்தனப்போக்கும் விசாரணையைப் பாதிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு கல்வியாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். பேராசிரியர்கள் வே.வசந்தி தேவி, அ.மார்க்ஸ், கே.ஏ.மணிக்குமார், கல்விமணி, ப.சிவக்குமார், வீ.அரசு, ஆர்.முரளி, கே. இராஜூ, அ.கருணானந்தம், பி.ராஜமாணிக்கம், சரஸ்வதி கோவிந்தராஜ், எஸ்.கோச்சடை, மு.திருமாவளவன், பி.ரத்தினசபாபதி, க. கணேசன், … Read more

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த ஆவணங்கள் கோர்ட்டில் மாயம்: ஊழியர்களிடம் விசாரணை

விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் எதிர் தரப்பு குறுக்கு விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில், அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை நடந்து … Read more

பா.ஜ.க. தலைவரை புலம்ப வைத்த மம்தா.. அப்படி என்னதான் ஆச்சு?

மேற்கு வங்க பாரதிய ஜனதா மாநிலத் தலைவராக இருந்தவர் திலீப் கோஷ். அதிரடி பேச்சுகளுக்கு சொந்க்காரர். தற்போது இவர்தான் மாநிலத்தின் ஹாட் டாக். அப்படி என்னதான் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் செய்தனர் என்பதை பார்ப்போம். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக திலிப் கோஷ் நியமிக்கப்பட்ட பிறகு மேற்கு வங்கத்தில் பாஜக பெரும் வெற்றிகளை குவித்தது. 2019 மக்களவை தேர்தலில் ஆளும் மம்தா பானர்ஜி கட்சிக்கு பெரும் சவாலாக விளங்கியது.தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் பாரதிய … Read more

7 வயது சிறுவன் உடல் ஆற்றில் கண்டெடுப்பு.. காவல்துறையினர் விசாரணை..!

7 வயது சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று மிதந்து செல்வதாக     அங்குள்ளவர்கள்  காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். இதனை அடுத்து,  தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து வாய்காலில் தண்ணீரில் இறங்கி 45 மதிக்க தக்க ஆண் உடலை தேடி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 7 வயது சிறுவனின்  உடல் கண்டெடுக்கப்பட்டது. … Read more

“3 முறை நேதாஜியை நேரில் சந்தித்துள்ளேன்” – தருமபுரி சிவகாமியம்மாள் அனுபவப் பகிர்வு

இந்திய சுதந்திர போராட்டத்தின்போது நேதாஜி படைப்பிரிவின் கீழ் கலை வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்திய 90 வயது மூதாட்டி நேதாஜி நினைவு நாளில் அஞ்சலி செலுத்தினார். தருமபுரி அடுத்த அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமியம்மாள் (90). ஏழை நெசவாளர்களான மாரிமுத்து-சின்னத்தாய் தம்பதியரின் மகள் சிவகாமியம்மாள் ஒன்றரை வயது குழந்தையாக இருந்தபோதே 1934-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பினாங்குக்கு ரப்பர் தோட்ட பணிக்கு சென்றுள்ளனர். பின்னர் கோலாலம்பூரில் இருந்தபோது காடுகளை அழித்து சாலை அமைக்கும் பணிக்காக இரவில் பிரிட்டிஷ் ராணுவம் … Read more

கேரளாவில் தங்க கடத்தல்காரர்களுக்கு உடந்தை தமிழகத்தை சேர்ந்த சுங்க அதிகாரி கைது: நகைகள், ரூ.4.5 லட்சம் பறிமுதல்

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கக் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த சுங்க இலாகா கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டார். கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானத்தில் 2 பயணிகள் தங்கம் கடத்துவதாக மலப்புரம் மாவட்ட எஸ்பி.க்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதில், காசர்கோட்டை சேர்ந்த அப்துல் நசீர் (46), ஜம்ஷீர் (20) சிக்கினர். அவர்களிடம் இருந்து 360 கிராம் தங்கத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்தபோது, அவர்களின் செல்போனில் தொடர்ந்து … Read more