எடப்பாடிக்கு தெற்கில் இருந்து வந்த சேதி… சொதப்புகிறதா மாஸ்டர் பிளான்?

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கொக்கிர குளத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ரத்ததான கழக நிறுவனர் புதுக்குடி எம்.எஸ்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் தலைமையிலான அரசு வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இதன்மூலம் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் 10.5 சதவீத இட ஒதுக்கிட்டை பெற்றனர். ஆனால் 108 சமூக மக்களின் கெட்ட பெயரை எடப்பாடி பழனிசாமி சம்பாதித்துக் கொண்டார். அவர்கள் அனைவரும் எதிராக திரும்பினர். சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு … Read more

முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் பற்றிய முழு விவரம்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை 10:30 மணிக்கு குடியரசு துணை தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். இதனைத் தொடரந்து காலை 11:30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு மசோதா குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மாலை 4:30 மணிக்கு பிரதமர் பிரதமர் மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு … Read more

நெல்லை: பணகுடி பகுதியில் தொடரும் குழந்தை திருமணம்

பணகுடி அருகே சிவகாமிபுரத்தில் பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞரின் பெற்றோர் மற்றும் மாணவியின் பெற்றோர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் சிவகாமிபுரத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவிக்கு அவரது பெற்றோர் அதேபகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞருக்கு நேற்று திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அதே ஊரைச் சேர்ந்தவர்கள், நெல்லை குழந்தைகள் நலக் … Read more

டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.274 கோடி மது விற்பனை

சென்னை: டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.274 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன.சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. பலரும் 2 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதனால், நேற்று முன்தினம் ஒரே நாளில் மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.58.26 கோடிக்கு மதுபானங்கள் … Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா- கொடியேற்றத்துடன் துவங்கியது

தமிழ் மாதமான ஆடி மாதம் நேற்றுடன் முடிவடைந்து இன்று ஆவணி மாதம் பிறந்துள்ளநிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். எப்போதும் கடலென பெருங்கூட்டம் முருகனின் தரிசனத்துக்காகத் திரளும் பூமி திருச்செந்தூர். இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 28-ம் தேதி … Read more

பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு: விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவி பிருந்தா முழு மதிப்பெண் பெற்றார்

சென்னை: பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவி பிருந்தா உட்பட 133 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைபடிப்புகளுக்கு 1.48 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த கல்வியாண்டில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர 2 லட்சத்து 11,905 பேர் இணையதள வழியில் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். இதில், 1 லட்சத்து 58,157 பேரின் விண்ணப்பங்கள் … Read more

டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-பிரதமரை மாலை சந்திக்கிறார்

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுக்கும் முதலமைச்சர், இன்று காலை 10.30 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். 11.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்லும் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவராக புதிதாக பொறுப்பேற்ற திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்துக் கூறுகிறார். மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றி கூறுகிறார். மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் … Read more

காலாவதியான அரசு பேருந்துகள் அதிக அளவில் இயக்கம்: உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

சென்னை: போக்குவரத்து கழகங்களில் காலாவதியான அரசு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். போக்குவரத்து கழக ஊழியர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்தல், ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் இல்லம்அருகே அண்ணா தொழிற்சங்கபேரவை சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் பேசியதாவது: முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்: திமுக அரசு ஆட்சியைவிட்டுசென்றபோது போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.922 கோடி … Read more

ஜூலையில் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லுமா? இன்று நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டு மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் … Read more

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு..!

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. கடந்த மாதம் 11ந் தேதி நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக ஓ.பி.எஸ்., பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்கள் கடந்த வாரம் முடிந்தநிலையில், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.   Source link