விமான டிக்கெட் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியிருக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள்!

விடுமுறை தினங்கள் முடிவடைந்ததை ஒட்டி வெளியூரில் இருந்து சென்னை திரும்ப ஆம்னி பேருந்துகளில் விமான கட்டணங்கள் போல் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. 76 சுதந்திர தினத்தை ஒட்டி சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என்று தொடர் விடுமுறையால் ஏராளமான மக்கள் சென்னையிலிருந்து அவர்களுது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். வெள்ளி மாலை, இரவு நேரங்களில் அதிக அளவில் சென்னையில் இருந்து பேருந்துகளில் உள் மாவட்டங்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மக்கள் குவிந்தனர். இதனையடுத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்து … Read more

விமான நிலையங்களில் நடைமுறை இனி எளிது: அது என்ன டிஜியாத்ரா

டெல்லி விமான நிலையத்தில் டிஜியாத்ரா நடைமுறை திங்கள்கிழமை (ஆக.15) நடைமுறைக்கு வந்துள்ளது. டிஜியாத்ரா என்பது பயணிகளின் முகத்தை கணினி தொழில்நுட்பம் மூலம் அடையாளம்க காணும் ஒரு நடைமுறை ஆகும்.இந்தச் சோதனைக்கு தேவையான உள்கட்டமைப்புகள் சர்வதேச முனைமம் 3இல் சோதனைக்கு வைக்கப்பட்டுள்ளன. டிஜியாத்ரா என்றால் என்ன, அது எப்படி வேலை செய்யும்?டிஜியாத்ரா விமான நிலையத்தில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளை காகிதமற்ற மற்றும் காண்டாக்ட்லெஸ் செயலாக்கத்தின் மூலம் கடந்து செல்வதையும், அவர்களின் அடையாளத்தை நிறுவ முக அம்சங்களைப் பயன்படுத்தி, … Read more

விற்பனைக்காக குட்கா கடத்தி வந்து 3 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் விற்பனைக்காக குட்கா கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதிகளில் கார், இருசக்கர வாகனங்களில் குட்கா கடத்தி வரப்படுவதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் கடையநல்லூர் பண்மொழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த கார், இருசக்கர வாகனங்களில் சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்துள்ளது. … Read more

நீட் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? – என்டிஏ அதிகாரிகள் தகவல்

சென்னை: இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 497 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 17.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் … Read more

தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் இன்று மழை? வானிலை அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (15.08.2022) வடதமிழக மாவட்டங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் 16.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் … Read more

ஆதரவாளர்களுடன் பங்கேற்ற ஓபிஎஸ்.. ஆப்சென்ட் ஆன இபிஎஸ்.. ஆளுநர் தேநீர் விருந்து.. முழுதகவல்

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் தேநீர் விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு சால்வை அணிவித்து காந்தி சிலையை பரிசாக அளித்தார். இந்த தேநீர் விருந்தில் அனிதா ராதாகிருஷ்ணன், மெய்யநாதன், பழனிவேல் தியாகராஜன், மதிவேந்தன், காந்தி, மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சக்கரபாணி, பெரிய கருப்பன் ஆகிய திமுக அமைச்சர்களும், எம்.பிக்கள் கலாநிதி … Read more

எந்த தேசியக் கட்சியுடன் கூட்டணி? பொதுக் குழுவில் டி.டி.வி தினகரன் விளக்கம்

சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், அமமுக எந்த தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்பது குறித்து கூறினார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அமமுக பொதுக்‍குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எம்.ஜி.ஆர் உருவாக்‍கிய இயக்‍கம் தற்போது அல்லப்பட்டு கொண்டிருப்பதைப் பார்க்‍கும்போது வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்தார். பதவி ஆசையால், அம்மாவுக்கே (ஜெயலலிதா) … Read more

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடி ஏற்றுகிறார்: விருதுகள், பதக்கங்களையும் வழங்குகிறார்

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்துகிறார். மேலும், பல்வேறு விருதுகள், பதக்கங்களையும் அவர் வழங்குகிறார். முன்னதாக, இன்று காலை 8.35 மணிக்கு கோட்டை அருகில்வரும் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலர் வெ.இறையன்பு வரவேற்று, காவல் துறை அதிகாரிகளை அறிமுகம் செய்துவைக்கிறார். தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின், 9 மணிக்குகோட்டை … Read more

பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்..! என்ன செய்யப்போகிறது அரசு?

தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது .அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால், இரண்டாவது புதிய சர்வதேச விமான நிலையம் தொடங்குவதற்கு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு இடங்களை பரிந்துரை செய்தனர். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.மேலும், புதிய சர்வதேச விமான நிலைய அமைக்க பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 … Read more

மறைக்கப்பட்ட வரலாறு.. சுதந்திர போராட்டத்தின் முதல் ஆயுதப்போராளி சேலம் உழவன் அப்பாவு!

இந்திய சுதந்திர வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் ஆயுதப்போராளி சேலம் உழவன் அப்பாவு. வரலாற்று பக்கங்களிலும் பள்ளி கல்லூரி வரலாற்று பாட புத்தகங்களிலும் நம்மை ஆட்சி செய்த மன்னர்களை பற்றி மட்டுமே கற்பித்தும் படித்தும் வரும் நிலையில், கடந்த இரண்டு தலைமுறையினருக்கும் இந்த தலைமுறையினருக்கும் நம் நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி தேடித் தெரிந்து கொள்ளும் இடத்திலும், புதியது போல தெரிவிக்கும் இடத்திலும் தான் நாம் இருக்கிறோம். அப்படி மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட … Read more