75 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டை கடையில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் புதுக்கோட்டையில் உள்ள பிரபல பிரியாணி கடை ஒன்றில் இன்று முதலில் வரும் 75 நபருக்கு 75 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி வழங்குவதாக அறிவித்ததை அடுத்து அதனை வாங்க ஏராளமான மக்கள் குவிந்து போட்டி போட்டு குவிந்து பிரியாணியை வாங்கிச் சென்றனர். இன்று நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையின் கீழ இரண்டாம் வீதியில் செயல்பட்டு வரும் தொப்பி … Read more

சுதந்திர போராட்ட தியாகிகளை சிறுமைப்படுத்த அனுமதியோம்: சோனியா காந்தி

நாட்டின் பிரிவினையில் ஜவஹர்லால் நேருவின் பங்கு குறித்து பாரதிய ஜனதா ஆக.14ஆம் தேதி கேள்வியெழுப்பியிருந்தது. இதற்கு இன்று (ஆக.15) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பதிலளித்துள்ளார்.அப்போது, ‘கட்சியின் அரசியல் லாபத்துக்காக தேசத் தலைவர்களை, நாட்டின் சுதந்திர போராட்ட தியாகிகளை சிறுமைப்படுத்த எவரையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.இது குறித்து சோனியா காந்தி கடிதத்தில், “கடந்த 75 ஆண்டுகளாக நாங்கள் நிறைய சாதித்துள்ளோம். ஆனால் தற்போதைய சுயராஜ்ஜிய அரசாங்கம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் மகத்தான தியாகங்களையும், … Read more

அமமுக இனி தேசிய கட்சியுடன் தான் கூட்டணி – டிடிவி தினகரன்.!

வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக, காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகளில் ஒரு கட்சியுடன் தான் கூட்டணி என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று அவர்கள் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கையில் கவனிக்கப்பட்ட கருத்து என்னவென்றால், அது அடுத்த தேர்தலுக்கான கூட்டணிதான். அதுவும் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் ஆகும். வரப்போவது நாடாளுமன்ற தேர்தல், அதில் … Read more

சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய மாணவி அரசு பேருந்து மோதி உயிரிழப்பு!

சென்னை குரோம்பேட்டையில் பள்ளி சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய மாணவி அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். லட்சுமி பிரியா என்ற அந்த 11-ம் வகுப்பு மாணவி தோழியுடன் சைக்கிளில் வீடு திரும்பிகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசுப்பேருந்து மோதியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த லட்சுமி பிரியா பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பிச்சென்ற பேருந்து ஓட்டுநர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் சரணடைந்தார். பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவு, சாலையோர … Read more

பெரியார் சிலை குறித்து சர்ச்சைப் பேச்சு: தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் கைது 

சென்னை: ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாகப் பேசி, தலைமறைவாக இருந்த திரைப்பட சண்டைப் பயிற்சி நிபுணர் கனல் கண்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் புதுச்சேரியில் வைத்து கைது செய்தனர். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் ஒன்றை அளித்தார். அதில், “கடந்த 1ஆம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு … Read more

திருமாவளவனுக்கு நாளை மணி விழா – முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!

விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் 60வது பிறந்த நாள், நாளை மணி விழா என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது. இதில், தமிழக முதலமைச்சர் பங்கேற்க உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பிறந்த நாளை கட்சி தொண்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர். நாளை மறுநாள் 17 ஆம் தேதி அவருக்கு 60வது பிறந்த நாளாகும். பிறந்த நாள் … Read more

ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன்! நூறாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவத்தின் பின்னணி!

ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன்! 1911 ஜூன் 17 சனிக்கிழமை காலை நடந்த படுகொலை பின்னணி என்ன ஆவணங்கள் மற்றும் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலான செய்தி தொகுப்பு.. நம் நாட்டின் சுதந்திர வரலாறு அகிம்சை போராட்டத்தினால் மட்டுமல்ல, தனக்கு விருப்பமான உறவுகளை தவிக்க விட்டு தன் இன்னுயிரை தாய் நாட்டிற்காக கொடுத்த பல போராளிகளின் உதிரத்தாலும் எழுதப்பட்டுள்ளது. தியாகத்தின் பலனை போராளிகளோ அவர்களின் உடன் இருந்த உறவுகளோ பிரதிபலனை அனுபவிக்க முடியாமல் போனதுதான் துரதிருஷ்டம். … Read more

அலைமோதும் பயணிகள் கூட்டம்: திருச்சி- சென்னைக்கு சிறப்பு பஸ்கள்

சென்னையில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தொடர் விடுமுறையைத் தொடர்ந்து, அவர்களின் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் மீண்டும் சென்னை திரும்ப திருச்சி கும்பகோணம் கோட்டத்தில் இருந்து அதிகப்படியான பேருந்துகளை இயக்கவிருப்பதாக நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். இது குறித்த விபரம் வருமாறு : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலமாக இன்றும், நாளையும் 15, 16-ம் தேதிகள் தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு … Read more

எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர்… யார் இவர்?!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர்… மனித இயல்புகளின் மீது புன்னகையை படரவிட்டவர்… தமிழ் நவீன இலக்கியவாதிகளின் வரிசையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றவர்… தமிழ்ப்படைப்புலகில் பல குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தியவர்… பழம்பெரும் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தணி முத்திரையைப் பதித்தவர்…. சுந்தரம் என்ற புனை பெயர் கொண்ட நாவலாசிரியர்… யார் இவர்? இவர் தான்… எழுத்தாளர் ஆதவன்.. பிறப்பு : கே.எஸ்.சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் (யுயனாயஎயn) 1942ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என். ரவி தேநீர் விருந்தளித்தார். இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள், இந்நாள் நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேநீர் விருந்திற்கு முன்பாக இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஆளுநர், சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார். Source link