அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் காவல் துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்த மனுவில், “கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த … Read more

ஒரே ஆண்டில் 3-வது முறையாக தனியார் பால்விலை உயர்வு.. அவசரச் சட்டம் பிறப்பிக்க கோரிக்கை

ஒரே ஆண்டில் 3-வது முறையாக தனியார் பால் விலை உயர்வால், டீ, காபி, பால் சார்ந்த பொருள்களின் விற்பனை விலை உயர்வதை தடுக்க முடியாது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் தலைவர் பொன்னுசாமி அளித்துள்ள பேட்டியில், “சீனிவாச நிறுவனம் பால் விலையை ஏற்கனவே உயர்த்தியுள்ள நிலையில், ஹட்சன் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், தயிர் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும் நாளை … Read more

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்; மதுரை ராணுவ வீரர் வீரமரணம் 

Madurai army soldier killed terrorist attack in JK: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து போரிட்ட ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அதில் ஒருவர் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன், தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதையும் படியுங்கள்: அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு; தேதி … Read more

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தீவிரவாதிகளின் தாக்குதலில் மரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மதுரை மாவட்டம், து.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். இந்நிலையில் மரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இன்று அதிகாலை காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த … Read more

அடுத்த மாதம் திருமணம்..பொள்ளாச்சி அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை! காரணம் குறித்து விசாரணை

பொள்ளாச்சி அருகே கோமங்கலம் பகுதியில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் விருப்பமில்லா திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் இந்த முடிவினை அவர் எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  பொள்ளாச்சி அருகே உள்ள பருத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் மணியரசு (30). இவர் கோமங்கலம் காவல்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் அருகிலுள்ள காவலர் குடியிருப்பில் தங்கி உள்ளார். இன்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்திலுள்ள காவலர்கள் … Read more

என்னை மிரட்டியே மேயரானாங்க… திருச்சி கல்லூரி விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

திருச்சிக்கு மேயரானவங்க என்னை மிரட்டியே மேயரானாங்க; என்று ஹோலிகிரஸ் கல்லூரி விழாவில் அமைச்சர் நேரு பேசியது தற்போது வைரலாகி வருகிறது.  திருச்சியில் பெண்களுக்கென இயங்கி வரும் மிகவும் புகழ்பெற்ற தென்னிந்தியாவில் முதன்மையான, பழமை வாய்ந்த புனித சிலுவை(ஹோலி கிராஸ்) தன்னாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற இந்தக்கல்லூரி 1923-ம் ஆண்டில் திருச்சிலுவை கன்னியர் சபை சகோதரிகளால் 5 மாணவிகளைக் கொண்டு … Read more

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு; தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

Chennai High Court reserved ADMK general council meeting case judgement: அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்றும் இன்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது இ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயணனும், … Read more

போதையில் தள்ளாடிய 11- ஆம் வகுப்பு மாணவிகள்.. விசாரணையில் கூறிய அதிர்ச்சி காரணம்.!

இன்று தமிழகம் முழுவதும் இருக்கும் பள்ளி வளாகங்கள், விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்டவற்றில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிலையில், கரூரில் பள்ளி சீருடை அணிந்த சில மாணவிகள் போதை மயக்கத்தில் தடுமாறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கரூர் சர்ச் கார்னர் பகுதியில் மூன்று பள்ளி மாணவிகள் சீருடை அணிந்த நிலையில் நல்ல மதுபோதையில் நிலைதடுமாறி கொண்டு இருந்தனர்.  இதனை அப்பகுதியில் கடை வைத்திருந்த சிலர் கண்டு கொண்டனர். அவர்களுக்கு உடல் … Read more

‘ஜெய்பீம்’ பட விவகாரம்: நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீதான வழக்கு ரத்து

சென்னை: ‘ஜெய்பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கிய ‘ஜெய்பீம்’ படத்தில், இந்து வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வழிபடும் அக்கினி குண்டம், மகாலட்சுமி, மற்றும் வன்னியர்களின் தலைவர்களில் ஒருவரான குருவின் பெயரை இழிவுபடுத்தியும் வகையில் காட்சிகள் உள்ளதாக கூறி, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் … Read more

' பெட்ரோல், டீசல் விலை டபுளானதுக்கு காரணம் என்ன ஜி?'

பிரதமர் மோடி: பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் கடந்த 7-8 ஆண்டுகளில் சுமார் 50 ஆயிரம் கோடி வெளிநாடுகளுக்கு அந்நிய செலாவணியாக செல்வதில் இருந்து சேமிக்கப்பட்டுள்ளது. அந்த தொகை விவசாயிகளுக்கு சென்றுள்ளது. பப்ளிக் மைண்ட்வாய்ஸ்: சந்தோஷம் ஜி… ஆனா நீங்க சொல்ற 7-8 வருஷத்துல பெட்ரோல், டீசல் விலை டபுளாகி இருக்கே… அதுக்கான காரணத்த ‘மான் கி பாத்’தல நீங்க பேசும்போதாவது சொல்லுவீங்களா ஜி? சசிகலா: அதிமுகவில் நிலவும் குழப்பத்துக்கு திமுக தான் காரணம்! மைண்ட்வாய்ஸ்:: என்னதான் இருந்தாலும் … Read more