மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை.. இபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றவர்களும் பங்கேற்பு

தேனி பெரியகுளத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பி.எஸ். திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் ஈ.பி.எஸ். நடத்திய பொதுக்குழுவில் பங்கேற்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓ.பி.எஸ். தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் முகாமிட்டுள்ளார். அவரை அவரது ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் இருந்து வந்து சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், ஓ.பி.எஸ். ஆல் நியமிக்கபட்ட தென்காசி, நெல்லை, திருவாரூர் மாவட்ட செயலாளர்கள், 300-க்கும் மேற்பட்ட ஓ.பி.எஸ். ஆதரவு கட்சி நிர்வாகிகளுடன் பெரியகுளத்தில் … Read more

தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: மத்திய அரசு கடிதம் 

சென்னை: தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் செந்தில் குமாருக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக, சராசரியாக தினசரி 2,044 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. இந்தியாவின் வாராந்திர புதிய … Read more

’’தாலிச் செயினை அடகுவைத்த பணம்சார் அது’’ – பணத்தை தொலைத்த பெண் போலீசில் புகார்

வங்கியில் நகை அடமானம் வைத்து பணத்தை வாங்கி பைக்கில் வைத்து, வீட்டிற்கு சென்று பார்த்தபோது பணம் காணவில்லை என பெண் ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராயப்பன் (49). இவரது மனைவி கீதா (35). இருவரும் இன்று மாலை ராமநத்தத்தில் உள்ள இந்தியன் வங்கியில் விவசாயப் பணிக்கு தனது 7 பவுன் தாலிச் செயினை அடகுவைத்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி, மொபட் … Read more

முதல்வரின் சீரிய முயற்சியால் மழை பாதிப்புகள் பெருமளவில் தடுப்பு: அமைச்சர் பேட்டி

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் சீரிய முயற்சியால் பெருமளவிலான மழை பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்தார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் மழை பாதிப்பு தொடர்பாக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பெருமழை காரணமாகவும் காவேரி நதிநீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் பாதிக்கப்படக் கூடிய ஒன்பது மாவட்டங்களில் பேரிடர் முன்னெச்சரிக்கை பணிக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அணைகள் … Read more

பட்டியலினத்தவர் குறித்த அவதூறு கருத்து வழக்கு – நடிகை மீரா மிதுனுக்கு மீண்டும் பிடிவாரண்ட்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்படத்துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு … Read more

தமிழகத்தில் தொடர் மழை: நோய்ப் பரவல் தடுப்புப் பணிகளுக்கு அமைச்சர் உத்தரவு 

சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக நோய்ப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து மருத்தவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாலும், காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி போன்ற தமிழகத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு எடுக்கப்பட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த அனைத்து மாவட்ட ஆட்சித்லைவர்கள் மற்றும் வருவாய், ஊரக வளாச்சி, உள்ளாட்சி அமைப்புகள், … Read more

திருச்சி: காவிரியில் பாய்ந்தோடும் வெள்ளம்.. 171 ஏரிகளில் ஒன்று கூட முழுமையாக நிரம்பவில்லை!

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோதும் திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் வானம்பார்த்த பூமியாக இருப்பது விவசாயிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. குடியிப்புகள், விவசாய நிலங்களில் புகுந்த தண்ணீர்.. இப்படி காவிரி ஆற்றில் கண்முன்னே வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் பாசனத்துக்கு பயன்படாத ஏக்கத்தில் இருக்கின்றனர் திருச்சி விவசாயிகள். திருச்சியில் காவிரி ஆற்றின் கிளைகளாக புதிய கட்டளை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், உய்யக்கொண்டான் வாய்க்கால் ஆகிய மூன்று வாய்க்கால்களும் பிரதானமாக உள்ளன. இதன்மூலம் 171 ஏரிகள் நிரம்பிவந்தன. தற்போது காவிரியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி நீர் பாய்தோடியபோதும், ஒரு ஏரி … Read more

பெங்களூரு சிறையில் நிர்வாணமாக நிறுத்தி வீடியோ… ‘நடமாடும் நகைக்கடை’ ஹரி நாடார் கதறல்

Hari Nadar wrote letter wife and describes Bengaluru police torture: மோசடி வழக்கில் கைதாகி கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரி நாடாரை போலீசார் நிர்வாணமாக வீடியோ எடுத்து விசாரிப்பதாகவும், ஜாமீன் வழங்காமல் சித்ரவதை செய்வதாகவும் அவர் தனது மனைவிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ஹரி நாடார், பனங்காட்டுப்படை என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவர் கிலோ கணக்கில் நகை அணிந்து வலம் வந்ததன் மூலம் … Read more

மழையால் சேதம் அடைந்த குறுவை பயிர்களுக்கு இழப்பீடு: உழவர் நலத் துறை அறிவிப்பு

சென்னை: மழையால் சேதம் அடைந்த குறுவை பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: “தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து அதிக அளவில் பெய்து வருவதாலும், காவிரி, வைகை, தாமிரபரணி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் அதிக அளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாலும் அருகாமையிலுள்ள வயல்களில் வெள்ள நீர் புகுந்து வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக … Read more

தாய்-மகன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டிய 3 சிறார்கள் கைது!

பொள்ளாச்சி அருகே தாய் – மகன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக மிரட்டி, 9 வயது சிறுவனிடம் பணம் பறித்த அதிர்ச்சி சம்பவத்தில் 3 சிறார்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நான்காம் வகுப்பு படித்து வரும் 9 வயது மாணவனிடம் அவன் டியூசன் செல்லும் இடத்தில் 17 வயதுடைய 3 சிறுவர்கள் நண்பர்களாக பழகி உள்ளனர். இந்நிலையில் 4 வயது சிறுவனின் புகைப்படத்தையும் அவனது தாயார் … Read more