அதிமுக பிரமுகரின் தம்பி வெட்டிக்கொலை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்குபொய்கைநல்லூரை சேர்ந்தவர் மனோகர் (40). பைனான்ஸ் மற்றும் விடுதிகள் நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு நண்பர் மணிவேலுடன் அலுவலகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல், உள்ளே புகுந்து மனோகரை அரிவாளால் சரமாரி வெட்டியது. தடுக்க முயன்ற மணிவேலுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த கும்பல் பைக்கில் தப்பியது. அப்பகுதியினர் வந்து இருவரையும் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி … Read more

குஜராத்தில் நடந்த சம்பவம்… இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ் பட நடிகை!

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விரக்தி காரணமாக தான் அப்போது நடந்துகொண்ட விதம் குறித்து படத்தின் வெற்றி விழாவில் இயக்குநரிடம் நடிகை அனுபாமா பரமேஸ்வரன் மன்னிப்பு கோரியுள்ளார். மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் அனுபாமா பரமேஸ்வரன். தொடர்ந்து தெலுங்கில், அ.ஆ, மற்றும் பிரேமம் ஆகிய படங்களில் நடித்த இவர், தமிழில் கொடி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என … Read more

புகழஞ்சலி – நெல்லை கண்ணன் | "இலக்கிய அறிவில் செறிந்த, பழகுதற்கினியவர்" – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,” பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய காமராசர் கதிர் விருது பெற்ற பெரியவர் நெல்லை கண்ணன், விழா மேடையிலேயே, என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டிப் பேசியதை இப்போதும் நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன். … Read more

பள்ளி மைதானத்தில் மின்னல் தாக்கி மாணவன் பலி

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே தாளையடிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேலு மகன் கஜினி (16). நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று மதியம் 3 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது விளையாடும் நேரம் என்பதால் பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த கஜினியை மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே கஜினி பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா உலகத்துக்கு தலைவலியாக மாறிய பைரஸி கும்பல்; யார் இந்த தமிழ் ராக்கர்ஸ்?

‘ஆக்ஷன் ஸ்டார்’ ஆதித்யா தீபாவளிக்கு தனது கருடா படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யவிருக்கிறார். இந்த படம் நடிகரின் ரசிகர்கள் காரணமாக பைசா வசூலாகிவிடும் என உறுதியாகிறது. மெகா ஹிட் ஆகி பெட்டிகள் நிரம்பி தயாரிப்பாளர்களுக்கு பணம் புரளும் என இந்த படம் உறுதியளிக்கிறது. ஆனால், அதில் ஒரு தடங்கல் உள்ளது. தமிழ் ராக்கர்ஸ் என்ற திரைப்பட பைரஸி கும்பல் படம் திரையரங்குக்கு வருவதற்குள் ஆன்லைனில் வெளியிடுவோம் என்று மிரட்டுகிறது. மேற்குறிப்பிட்ட வரிகள் வெள்ளிக்கிழமை வெளியாகும் தமிழ்ராக்கர்ஸ் என்ற … Read more

புகழஞ்சலி – நெல்லை கண்ணன் | "தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் என்றைக்கும் நிலைத்து நிற்கும்" – டிடிவி தினகரன்

சென்னை: தமிழறிஞர் நெல்லை கண்ணனின் தமிழ்ப் பணியும், சமூக பணியும் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தமிழறிஞரும் தலைசிறந்த சொற்பொழிவாளருமான திரு.நெல்லை கண்ணன் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்த மடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் என்றைக்கும் நிலைத்து … Read more

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை? நோட் பண்ணிக்கோங்க!

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (18.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் … Read more

மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ஓடும் ரயிலிலிருந்து இறங்கிய சென்னை போலீஸ்காரர் பலி

சேலம்: தர்மபுரி மாவட்டம், அரூர் ஈட்டியம்பட்டி கிராமத்ைத சேர்ந்தவர் வேலு (34), சென்னை ஆர்.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் ஒழுங்கு பிரிவில் முதல்நிலை காவலராக இருந்தார். மனைவி பார்வதி மற்றும் 3 மகன்களுடன் கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பில் வசித்தார். கடந்த 20 நாட்களுக்கு முன் போலீஸ்காரர் வேலு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான அரூர் வந்துள்ளார். வேலூர் மாவட்டம் வாலாஜாவில் சிகிச்சைக்கு சென்ற அவர் நேற்று காலை, அங்கிருந்து மொரப்பூருக்கு கோவை … Read more

‘வலிமை’ பட பேனர் வைத்ததில் முன்விரோதம் – காவல்நிலையம் எதிரே இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை

அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே பட்டபகலில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் சிவானந்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரை அதேப் பகுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று துரத்தி சென்று காவல் நிலையம் எதிரே வைத்து தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. இதில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். … Read more

கையில் தேசிய கொடி.. பிளாஸ்டிக் விழிப்புணர்வு… ஸ்கேட்டிங் மூலம் கவனம் ஈர்க்கும் சகோதரர்கள்

பி. ரஹ்மான் – கோவை கையில் தேசிய கொடியுடன் சாலைகளில் ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் சகோதரர்கள் இணையத்தில் வைரலாகி வருகினறனர். கோவை கோவையை அடுத்த குப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மகன்கள் முரளிதரன்,கவின்தரன். மாதம்பட்டி அரசு பள்ளியில் எட்டாவது மற்றும் நான்காவது படித்து வருகினறனர். இவர்கள் இருவரும், ஸ்கேட்டிங் விளையாட்டில் மாநில, தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பல உலக   சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளனர். இந்நிலையில் 75 நகர் மற்றும் புறநகர் … Read more