`அதிமுக சட்டவிதிகளை மாற்றக்கோரி எந்தவிதமான கடிதமும் பெறப்படவில்லை'- தேர்தல் ஆணையம்

`அதிமுக சட்டவிதிகள் டிசம்பர் 1, 2021 க்கு பின் மாற்றப்படவில்லை’ என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றிருந்தது. அந்தக் கூட்டத்தில் தற்காலிக தலைவராக இருந்த தமிழ் மகன் உசேன், நிரந்தர அவை தலைவராக அறிவிக்கப்பட்டு ஏகமனதாக தீர்மானமொன்று மட்டும் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் குறித்தும், அப்பொதுக்குழு குறித்தும் சில வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம், … Read more

மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் தமிழகம் – சிறந்த செயல்பாடு என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாராட்டு

சென்னை: கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் தமிழகம் மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை நன்றாகவே செயல்படுத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் மத்திய தகவல், ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று கூறியதாவது: இந்திய வரலாற்றில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் பங்கேற்றது பல்கலைக்கழக … Read more

செஸ் ஒலிம்பியாட் 2 ஆம் சுற்று – பிரக்ஞானந்தா, கார்ல்சன் வெற்றி

Chess Olympiad 2022 Praggyanandha, carlsen won 2 round: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 2 ஆவது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ள நிலையில், 8 வயது பாலஸ்தீனச் சிறுமியும் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டம் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது. #praggnanandhaa | … Read more

இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (42). இவர் பண்ருட்டியை சேர்ந்த விக்னேஸ்வரன்(27) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது வண்டலூர்-வாலாஜாபாத் சாலை வளைவில் திரும்பியபோது ஒரகடம் நோக்கி அஸ்வின் குமார்(25) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், பாலசுப்பிரமணியன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், விக்னேஸ்வரன் சம்பவ … Read more

கன்னியாகுமரி – சென்னை உட்பட 23 ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை: கன்னியாகுமரி – சென்னை விரைவு ரயில் உட்பட 23 ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு ரயில்களில் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், 23 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்படும் விரைவு ரயில்(12695) மறுநாள் காலை 7.50 மணிக்கு பதிலாக 5 நிமிடம் முன்னதாக காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். … Read more

வீடீயோ கான்பரன்ஸ் மூலம் திருமணம்.. அனுமதி கொடுத்த உயர்நீதிமன்றம்.! 

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான வம்சி சுதர்ஷனி என்ற இளம் பெண் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “இந்திய வம்சாவளியான என்பவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார். அவர் அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர் என்றும், தாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம்.  அதன்படி கடந்த மே 5ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள ஆன்லைனில் விண்ணப் பித்து, பின்னர் சம்பந்த பட்ட திருமண பதிவு அதிகாரி முன்பு இருவரும் … Read more

22 கோடி பேருக்கு வேலை இல்லை என்பதா? – யெச்சூரிக்கு பாஜக துணைத் தலைவர் தி.நாராயணன் கண்டனம்

சென்னை: நாடு முழுவதும் 22.05 கோடி பேருக்கு வேலையே இல்லை என்பது போன்ற மாயையை சீதாராம் யெச்சூரி போன்ற தலைவர்கள் உருவாக்க நினைப்பது மோசடி வேலை என்று தமிழக பாஜக துணைத் தலைவர் தி.நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், பணி கிடைத்தவர்கள் எண்ணிக்கை குறித்த விவரம் சமீபத்தில் வெளியானது. இதை சுட்டிக்காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘கடந்த 7 ஆண்டுகளில் வேலைக்காக விண்ணப்பித்தோர் … Read more

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்ததாக ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவரிடம் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை

வேலூர்/ஆம்பூர்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்ததாக, ஆம்பூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரிடம் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவைச் சேர்ந்தவர் மிர் அனாஸ் அலி (22). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு இவர் ஆதரவளித்து வருவதாகக்கூறி, … Read more

அனைத்துக் கட்சி ஆலோசனை: இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இரு தரப்புக்கும் அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்

வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெற உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், இந்த கூட்டத்திற்கு முன்னாள் முதல்வர்கள் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி (நாளை மறுநாள்) அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் கார்டுடன் இணைக்கும் பணி தொடர்பான ஆலோசனை நடைபெற … Read more

கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு திட்டம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு வழக்கு

சென்னை: கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், “கீழ்பவானி பாசன திட்ட கால்வாய் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த 2020ஆம் ஆண்டு நபார்டு வங்கி நிதியுதவி மூலம் 933 கோடியே 10 லட்ச ரூபாயை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஆறு கட்டங்களாக … Read more