”வீட்டைவிட்டு கணவர் வெளியேற வேண்டும்”..மனைவி தொடர்ந்த டைவர்ஸ் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

விவாகரத்து கோரிய மனைவியும், குழந்தைகளும் வீட்டில் அமைதியாக வாழ வேண்டும் எனக் கூறி, கணவரை வீட்டை விட்டு வெளியேற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழிலதிபரான தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு பெண் வழக்கறிஞர், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனது கணவரை வீட்டை விட்டு வெளியேற்றக் கோரி கூடுதல் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், இருவரும் ஒரே வீட்டில் … Read more

காவடி தூக்கவா, டெல்லிக்கு போகிறேன்? திருமா மணி விழாவில் ஸ்டாலின் ஆவேசம்

விசிக தலைவர் திருமாவளவன் மணிவிழா பிறந்தநாளில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “நான் டெல்லிக்கு செல்வது காவடி தூக்கவோ, கை கட்டி, வாய் பொத்தி, உத்தரவு கேட்கவோ அல்ல. கலைஞர் பிள்ளை நான். ஒன்றிய அரசு என்ற உறவுதான் இருக்கிறதே தவிர திமுகவுக்கும் பாஜகவிற்கு எந்த உறவும் இல்லை” என்று ஆவேசமாக கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனது 60வது பிறந்தநாளை மணிவிழா பிறந்தநாளாகக் கொண்டாடுகிறார். … Read more

பைக் மீது ஆட்டோ மோதி விபத்து – வாலிபர் பலி

ராமநாதபுரத்தில் பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கன்னிசேரி பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் மதிவாணன் (27). இவர் கீழக்கன்னிசேரியிலிருந்து பைக்கில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று மதிவாணன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மதிவாணனை மீட்டு சிகிச்சைக்காக முதுகுளத்தூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட மதிவாணன், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே படித்தவமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து … Read more

அரசு பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனையில் டிஜிட்டல் டிக்கெட்: தமிழக போக்குவரத்துத் துறை அசத்தல் திட்டம்

சென்னை: மின்னணு மற்றும் பணமில்லா பரிவர்த்தனை முறையில் பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கீழ் விழுப்புரம், கும்பகோணம், கோவை, மதுரை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இதைத் தவிர்த்து சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 26 மண்டலங்களில் 20,304 பேருந்துகள் மூலம் தினசரி 1.5 கோடி … Read more

அகவிலைப்படி உயர்த்தி அறிவித்த முதல்வர்… ஆனாலும் அகம் மகிழாத அரசு ஊழியர்கள்… என்ன காரணம்?

பழைய ஓய்வூதிய திட்டம்: திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று 2021 சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவே்ற்றப்படாததால் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்து வருகின்றனர். மாதத்துக்கு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களும் இருக்கின்றனர்; அவர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன என்று பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேசும்போது … Read more

’சனாதனவாதிகளால் நான் குறிவைக்கப்படுகிறேன்! பாஜகவோடு துளி சமரசம் கிடையாது!’ – மு.க.ஸ்டாலின்

விசிக தலைவர் திருமாவளவன் மணிவிழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “சனாதனவாதிகளால் நான் குறிவைத்து தாக்கப்படுகிறேன். திருமாவளவன் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் சகோதரன் ஸ்டாலின் சொல்கிறேன். பாஜகவோடு துளி சமரசமும் செய்யமாட்டான் இந்த ஸ்டாலின்.” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கலைவாணர் அரங்கில் மணிவிழா கொண்டாட்டம் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி உள்ளிட்ட பலர் … Read more

சீசனில் ஆர்ப்பரிக்கும் ‘மினி குற்றாலம்’ – மதுரை குட்லாம்பட்டி அருவி பூட்டி வைக்கப்பட்டிருப்பது ஏன்?

மதுரை: தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் கவனம் பெறாததால் தண்ணீர் வந்தும் கடந்த 2 ஆண்டுகளாக மதுரை குட்லாடம்பட்டி அருவியை வனத் துறை பூட்டி வைத்துள்ளதால் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட சுற்றுலாப் பயணிகள், இந்த மினி குற்றலாத்தில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குளிர்ந்த சாரல் காற்றுடன் அருவிகளில் குளித்தால் மனமும், உடலும் புத்துணர்ச்சி பெறும். ஆனால், அப்படி ஆண்டு முழுவதுமே தண்ணீர் கொட்டும் அருவிகள் தமிழகத்தில் இல்லை. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழைகளை சார்ந்தே அருவிகளில் … Read more

முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா? – ப.சிதம்பரம் டுவீட் பின்னணி..!!

திமுகவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மதுரை டாக்டர் சரவணன் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் அப்போதைய தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார். பின்பு சில காலம் அங்கு மாவட்ட தலைவராகவும் பஜகவில் பதவி வகித்தார். இந்நிலையில் மறைந்த ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு அமைச்சர் … Read more

எடை மேடையில் ஏற அடம்பிடித்த சங்கர் யானை – கரும்பு கொடுத்து சமாதானப்படுத்திய பாகன்கள்

உடல் எடையை பரிசோதனை செய்ய எடை மேடையில் ஏற அச்சப்பட்டு சாலைக்கு ஓடிய வளர்ப்பு யானை சங்கரை யானை பாகன்கள் கரும்பு கொடுத்து சாந்தப்படுத்தி எடை பரிசோதனை செய்தனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை உடல் எடை பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்தாண்டு கூடலூரில் அடுத்தடுத்து 3 பேரை கொன்ற காட்டு யானை சங்கர் பிடிக்கப்பட்டு தற்போது … Read more

சேலம்: அருவியில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே அருவியில் தவறி விழுந்தவர் உயிரிழந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பூண்டி பெரியகாடு பகுதியை சேர்ந்தவர் இன்ஜினியர் சக்திவேல் (53). இவர் குடும்பத்தினருடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு முக்கிய இடங்களை சுற்றி பார்த்த சக்திவேல் குடும்பத்தினர், இன்று காலை ஏற்காடு அருகே உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்பொழுது சக்திவேல், அருவியின் மேற்பகுதியில் உள்ள பாறையில் ஏறும்பொழுது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே … Read more