எடப்பாடி இறுதி அஸ்திரம்; எதிரில் நிற்கும் ஓபிஎஸ் கதி?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பொதுச் செயலாளர் பதவி யாருக்கு? என்கிற குழப்பம் நீடித்து வருகிறது. சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோரின் வருகைக்குப் பின்னர் இந்த பிரச்சனை உச்சத்துக்கு சென்ற நிலையில் பிரிந்திருந்த ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் திடீரென இணைந்தனர். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்த பிறகு சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் கட்சியில் இடம் இல்லை என கூறி, அதிமுக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஓபிஎஸ், … Read more

பாஜகவுடன் நட்பா நட்பில்லையா என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும் -நயினார் நாகேந்திரன்

நெல்லை சந்திப்பு முத்தாரம்மன் கோவிலில் ஆடி மாத கொடை விழா இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சட்டமன்ற கட்சி தலைவருமான நயினார் நாகேந்திரன் துவக்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்,  அதிமுகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் பாஜக உறுதியாக உள்ளது. அது ஓபிஎஸ் ஆக இருந்தாலும் சரி.. ஈபி.எஸ் ஆக … Read more

ஆவினில் ஆக. 20 முதல் கோல்ட் காபி, பலாப்பழ ஐஸ் கிரீம், பாஸந்தி அறிமுகம்

ஆவினில் ஏற்கனவே 150 உப பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அத்துடன் 10 புதிய பால் உபபொருட்கள் அறிமுகப்படுத்தப்படஉள்ளன. ஆவின் நிறுவனம் தமிழ்நாட்டில் பால் மற்றும் பல்வேறு வகையான பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், நுகர்வோரின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு புதிய பால் பொருட்கள் அறிமுகப்படுத்தி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆவினில் ஏற்கனவே 150 உப பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அத்துடன் 10 புதிய … Read more

தமிழக – கேரள எல்லையான ஆனைகட்டி பகுதியில் உடல்நலக் குறைவுடன் சுற்றித்திரியும் காட்டு யானை

தமிழக – கேரள எல்லையான ஆனைகட்டி பகுதியில் உடல்நலக் குறைவுடன் காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அடுத்த கொடுங்கரை ஆற்றின் அருகே நேற்று காலை முதல் உடல்நலக்குறைவுடன் காட்டு யானை சுற்றி வரும் நிலையில், அதற்கு யார் சிகிச்சையளிப்பது என தமிழக-கேரள வனத்துறையினர் தயக்கம் காட்டியதாக கூறப்பட்டது. தற்போது, யானைக்கு சிகிச்சையளிக்க கேரள வனத்துறையினருடன் இணைந்து தகவல் பரிமாறி கண்காணித்து வருவதாக தமிழக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.   Source link

மழைக்கால நோய்த் தடுப்பு | தேவையான மருந்துகளை இருப்பு வைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

சென்னை: “மருத்துவமனைகளில் மருந்துகள் தேவையான அளவு இருப்பு இருக்க வேண்டும்” என்று மழைக்கால நோய் தடுப்புக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு குறித்து மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ” தமிழகத்தில் … Read more

கவர்னர் டீ பார்ட்டி…தமிழக மக்களின் உணர்வுகள் இப்போ புண்படாத முதல்வர் அவர்களே?

மரபு மீறும் கவர்னர்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜகவின் முகவர் போல செயல்பட்டு வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ஒரு நூல் வெளியி்ட்டு விழாவில் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குறித்து பேசியதில் தொடங்கி அண்மையில் நடிகர் ரஜினிகாந்துடன் அரசியல் பேசியது வரை ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் அவ்வபோது சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்திலேயே அமைந்து வருகின்றன. இப்படி ஒரு மாநில ஆளுநருக்கான மரபை தாண்டி செயல்பட்டு … Read more

இரண்டு மணி நேரத்தில் பெண்ணாக மாறிய ஆண் – பல்லாவரத்தில் ஆச்சரியம்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் உலக சாதனைக்கான ஒப்பனை மராத்தான் இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினமான நேற்று (ஆகஸ்ட் 15)நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ரைசிங் ஸ்டார்ஸ் மற்றும் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 90 ஒப்பனைக் கலைஞர்கள்  பல்வேறுவிதமான ஒப்பனை கலைகளுடன் spectacular ramp walk  மூலம் அசத்தினர்.   ஒப்பனை கலைஞர்கள் தங்கள் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்தை 2 மணி நேரத்தில் … Read more

கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் நடத்தும் விவகாரம் – நீதிமன்றம் முக்கிய உத்தரவு

கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘விருதுநகர் மாவட்டம், வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழா பல ஆண்டுகளாக எந்த பிரச்னையுமின்றி சுமுகமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோயில் பொங்கல் திருவிழாவை ஆகஸ்ட் 19 முதல் 20 … Read more

பொறியியல் தரவரிசை: 200-க்கு 200 கட் ஆஃப் பெற்ற 133 மாணவர்கள்

சென்னை: பொறியியல் தரவரிசை பட்டியலில் 133 பேர் 200-க்கு 200 கட் – ஆப் பெற்றுள்ளனர். 2022-ம் ஆண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இதில் பொதுப் பிரிவில் 1,56,278 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 133 பேர் 200க்கு 200 கட் – ஆப் … Read more

மீண்டும் தொடங்கிய கனமழை: ஐந்து மாவட்டங்களுக்கு நச் அறிவிப்பு!

தமிழகம், புதுச்சேரிக்கான அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (16.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் … Read more