விமானத்தில் மயங்கிய பயணி; முதலுதவி அளித்த தமிழிசை சௌந்தரராஜன்; குவியும் பாராட்டு

Tamilisai Soundararajan treat first aid to fainted co-passenger in flight: நடுவானில் விமானத்தில் மயக்கமடைந்த பயணிக்கு தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான தமிழிசை செளந்தரராஜன் முதலுதவி அளித்த நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று அதிகாலை 3 மணிக்கு டெல்லியிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, ​​ஒரு பயணி திடீரென மயக்கம் … Read more

திருவாரூர்: மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் பலி.!

திருவாரூரில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மதன்ராஜ்(20) என்பவர் வலங்கைமானில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒன்று மதன்ராஜ் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் பலத்த காயமடைந்த மதன்ராஜை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். … Read more

புத்தகம், எழுதுகோலுடன் கள்ளக்குறிச்சி மாணவி உடல் நல்லடக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய புத்தகம் மற்றும் எழுதுகோலுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் இறுதி அஞ்சலி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியின் விடுதியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக சர்ச்சை நிலவுகிறது. மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கடந்த 17-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் வெடித்தது. வன்முறைக் கும்பல் பள்ளி … Read more

குட்கா ஊழல் : முன்னாள் டி.ஜி.பி-கள், மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு நடத்த தமிழக அரசு அனுமதி

குட்கா ஊழல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் எஸ்.ஜார்ஜ், டி.கே. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய மத்தியப் புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவர் நடத்தி வந்த குட்கா மற்றுமு் பான் மசாலா தயாரிப்பு குடோன் மற்றும், சென்னை அண்ணா நகரில் உள்ள குடோன் மேலாளர் ராஜேந்திரன் என்பவரது வீடு ஆகிய இரண்டு இடங்களிலும் வருமானவரித்துறை அதிரடி … Read more

அதிமுக வங்கி கணக்கை முடக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் 

சென்னை: அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என சென்னை மண்டல ரிசர்வ் வங்கி இயக்குநருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகவும், திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுக பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்தது குறித்து எடப்பாடி பழனிசாமி கடந்த வங்கிகளுக்குக் கடிதம் எழுதினார். அதில், வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளைத் திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார். மேலும் காசோலைகளில் கையெழுத்திடும் … Read more

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் செயல்படலாம்: ஓபிஎஸ் 

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அவர்களின் பதவிகளில் செயல்படலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து நிர்வாகிகளை நீக்கி வருகிறன்றனர். இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அவர்களின் பதவிகளில் செயல்படலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் அவர்களது வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் … Read more

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் – அதிகாலையில் நிகழ்ந்த சோகம்

திருக்கோவிலூர் அருகே வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை பாம்பு கடித்ததில், அந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. 70 வயதான இவர், இன்று அதிகாலை வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கட்டுவிரியன் விஷ பாம்பு, முதியவரின் கால் கட்ட விரலில் கடித்துள்ளது. இதனால் வலியால் துடித்த அவர், கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து முதியவரின் மனைவி அன்னக்கிளி (60), உடனடியாக … Read more

திருச்சியில் மூதாட்டி உயிரை பலி வாங்கிய பாதாள சாக்கடை குழி: மக்கள் கொந்தளிப்பு; அமைச்சர் சமரசம்

திருச்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே பொதுமக்கள் எங்கும் நிம்மதியாக சென்று வரமுடியாத அளவுக்கு மேடுபள்ளங்கள் நிறைந்ததாகவே சாலைகள் இருக்கின்றன. மழைக்காலங்களில் வழுக்கி விழுந்து பலர் மருத்துவமனைக்கு சென்ற நிகழ்வுகளே அதிகம். இதனால் பெரும்பாலானோர் மாநகராட்சி மீது அதீத வருத்தத்திலும், எரிச்சலிலுமே இருக்கின்றனர். இந்நிலையில், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர், பகவதிபுரம் குட்செட்ரோடு அருகே பாதாள சாக்கடைக்கு உந்து நிலையம் அமைக்கும் பணிக்காக குழி தோண்டும் பணி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. ஆனால் அந்த … Read more

“சென்னை பல்கலை.யில் நிலவும் சாதிப் பாகுபாடு புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது” – வேல்முருகன்

சென்னை: “சென்னையின் வரலாற்று அடையாளமாகத் திகழும் சென்னை பல்கலைக்கழகத்தில் சாதிப் பாகுபாடு நிலவுவதாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகிய நோபல் பரிசு பெற்றவர்களையும், ராமானுஜம், எஸ்.ஆர்.சீனிவாச வரதன் உள்ளிட்ட கணித மேதைகளையும் உருவாக்கிய சென்னை பல்கலைக்கழகம், ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட குடியரசுத் தலைவர்களை நாட்டிற்கு வழங்கியுள்ளது. இத்தகைய போற்றுதலுக்கும், பெருமிதத்திற்கும்,175 ஆண்டு பாரம்பரியத்துக்குரிய, சென்னையின் வரலாற்று … Read more