போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு 8 சதவீத சம்பள உயர்வு வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தமிழக அரசு சார்பாக முதற்கட்டமாக, கடந்த 1.9.2019-லிருந்து 2 சதவீத உயர்வும், 1.1.2022-லிருந்து அடுத்தகட்ட 3 சதவீத உயர்வும் என மொத்தமாக 5 சதவீதம் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார். போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில்14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி முகாமில் நடந்தது. ஏற்கெனவே … Read more

இறந்த கணவரை எரியூட்ட முயன்ற கடைசி நேரத்தில் மனைவி கைது.. விசாரணையில் பகீர்!

சீர்காழி அருகே கீழமூவர்கரையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை அடித்து கொலை செய்ததுமன்றி தீவைத்து கொளுத்திவிட்டு, தற்கொலை என நாடகமாடிய மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். மயானத்தில் எரியூட்ட முயன்றபோது போலீசார் பிடித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(45). இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு இரண்டு மகன்ளும் ஒரு மகளும் உள்ளனர். சக்திவேல் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தினந்தோறும் குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று கணவன் மனைவிக்கிடையே தகராறு … Read more

15 மிருகங்கள்- மனித முகங்கள் இருக்கு… நீங்க கண்டுபிடித்தது எத்தனை?

மனதை திகைக்கச் செய்யும் பல உருவங்களைக் கொண்ட படங்கள் மூளைக்கும் பார்வைக்கும் வேலை அளிக்கக்கூடியவை. 150 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமெரிக்க நிறுவனம் அச்சிட்ட இந்த படத்தில் 15 மிருகங்கள் – மனித முகங்கள் இருக்கிறது. இந்த படத்தைப் பார்த்து நீங்கள் எத்தனை கண்டுபிடிக்கிறீர்கள் என்று பார்ப்போம். சமீப காலங்களாக, ஆப்டிகல் இலுஸியன் என்கிற மனதை மருளச் செய்யும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. அவை பார்ப்பவர்களின் மூளைக்கும் பார்வைக்கும் விருந்தளிப்பவையாகவும் வேலை அளிப்பதாகவும் இருக்கின்றன. … Read more

தமிழக அரசின் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதலில் முறைகேடா.? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

இலங்கைக்கு உதவுவதற்காக 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய தமிழக பிறப்பித்த அரசாணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நாட்டு மக்களுக்கு உதவி செய்வதற்காக 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்க உள்ளதாக சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  இந்த நிலையில், இந்த 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை அதிக விலைக்கு வாங்கு உள்ளதாகவும், இதற்கு தடை விதிக்க … Read more

‘ஆக்டிங்’ மேயராக கணவர்? – தொடர் சர்ச்சையில் சிக்கும் மதுரை மாநகராட்சி மேயர்

மதுரை: மதுரை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள இந்திராணியை விட அவரின் கணவர் தான் ஆக்டிங் மேயராக செயல்பட்டு வருகிறார் என்று கவுன்சிலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொறுப்பேற்றபோது செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், ‘‘மதுரையில் தவறான திசையில் சென்ற திமுகவின் உருவம், பிம்பம் தற்போது திருத்தும் வகையில் புதிய வழியில் செல்லத் தொடங்கியிருக்கிறது’’ என்று மதுரை திமுகவினரின் பழைய அரசியலை மறைமுகமாக குற்றம்சாட்டினார். மேலும், அவர் ‘‘மதுரை மாநகர வரலாற்றில் இன்றைக்கு … Read more

சைக்கிளுக்கு கூட 10 ரூபாய் கட்டணம் வசூலா..! அதிருப்தியில் மதுரை ரயில் பயணிகள்

மதுரை ரயில் நிலைய வளாகத்திற்கு வரும் சைக்கிள்களுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.  மதுரை ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் ரயிலில் நிலையத்திற்கு வரும் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்களை ரயில்நிலைய வளாகத்தில் சூழ்ந்து பிரீமியம் டோக்கன் போட குத்தகைதாரர்கள் சுற்றிதிரிந்து வருகின்றனர். குறிப்பாக மதுரை ரயில் நிலையத்தின் மேற்கு நுழைவாயில் பகுதியில் ரயில்வே ஊழியர்களுக்கான பிரத்யேக வாகன நிறுத்தத்தில் … Read more

மகிந்த ராஜபக்ச உட்பட 17 பேர் வெளிநாடு செல்ல தடை – இலங்கை கோர்ட் உத்தரவு

Sri Lankan court imposes overseas travel ban on former PM Mahinda Rajapaksa, 16 others: கொழும்பில் இந்த வாரம் அமைதியான முறையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் வகையில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அவரது மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபக்ச மற்றும் 15 பேர் வெளிநாடு செல்வதற்கு இலங்கை நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்துள்ளது. திங்கட்கிழமை கோட்டகோகம மற்றும் … Read more

கணவனை கொலை செய்த மனைவி.. காவல்துறை விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

கணவனை அடித்து கொலை தீவைத்து கொளுத்திய மனைவி மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், கீழமூவர்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(45). இவருக்கு திருமணமாகி வசந்தா என்ற மனைவியும் இரண்டு மகன்ளும் ஒரு மகளும் உள்ளனர்.  சக்திவேல் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார்.  இந்நிலையில், சக்திவேல் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் வீட்டின் அறையில் இறந்து கிடந்துள்ளார். வசந்தா கணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ஊர்மக்கள் அவரின் … Read more

குடிபோதையில் கணவன் தகராறு… மகனுடன் சேர்ந்து கொளுத்திய மனைவி… தீக்குளித்ததாக நாடகம்!

சீர்காழி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை சுத்தியலால் அடித்து கொன்று விட்டு, தற்கொலை செய்ததாக நாடகமாடிய மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர். சக்திவேல் என்பவர் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் குடிபோதையில் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சக்திவேல், அறை கதவை பூட்டிக்கொண்டு  தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக மனைவியும், மகனும் அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளனர். சக்திவேலின் மரணத்தில் கிராம நிர்வாக அலுவலகர் சந்தேகம் எழுப்பியதால், எரியூட்டும் தருவாயில் போலீசார் உடலை கைப்பற்றினர். விசாரணையில், குடிபோதையில் … Read more

மின் கட்டணத்தை முறையாக செலுத்த வேண்டும்: மண்டல அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு 

சென்னை: தமிழக மின்சார வாரியத்துக்கு சென்னை மாநகராட்சி செலுத்த வேண்டிய கட்டணத்தை, நில வாடகை கழித்து, மீதமுள்ள தொகையை, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை செலுத்த, மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அலுவலகங்கள், தெரு விளக்குகள் போன்றவற்றிற்கு, ஆண்டுக்கு, 45.5 கோடி ரூபாய் செலவில், மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், அலுவலகம், மின்மாற்றி உள்ளிட்டவைகளுக்கு, மாநகராட்சியின் நிலத்தை, தமிழக மின்சார வாரியம் பயன்படுத்துகிறது. இதற்காக ஆண்டுதோறும், 35 கோடி ரூபாயை மாநகராட்சிக்கு, மின்சார வாரியம் வாடகையாக செலுத்த … Read more