'இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தமிழகத்திலும் ஏற்படும்' – அண்ணாமலை பேச்சு

திருவாரூர்: தமிழகத்தில் நடைபெறும் அறிவாலய குடும்ப ஆட்சி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தமிழகத்திலும் ஏற்படும் என, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருவாரூர் தெற்கு வீதிக்கு கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக முன்னாள் திருவாரூர் மாவட்ட தலைவர் ராகவன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட பார்வையாளர் … Read more

திருமணமான 7 மாதத்தில் செவிலியர் விபரீத முடிவு – கணவருடனான கருத்து வேறுபாடு காரணமா?

நன்னிலம் அருகே திருமணமான 7 மாதத்தில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டநிலையில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பண்டாரவாடை திருமாளம் நோக்கர் தெருவைச் சேர்ந்தவர் கிருத்திகா. 29 வயதான இவர், பேரளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய கணவர் கோபிநாத் திருமணத்திற்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தநிலையில், தற்போது வீட்டில் வேலையின்றி இருந்து வருகிறார். கிருத்திகாவுக்கு திருமணமாகி 7 மாதங்கள் … Read more

இதுதான் கடைசி படம்; இனி 100% அரசியல்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

அரசியலில் பிஸியாக இருக்கும் திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், தான் நடிக்கும் மாமன்னன் திரைப்படம்தான் அனேகமாக தனது கடைசி படமாக இருக்கலாம் என்றும் இனி 100% அரசியல் பணிதான் என்று தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசியலில் பிஸியாக இருக்கிறார். சட்டப்பேரவை கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்கிறார். திமுக கட்சி நிகழ்சிக்களிலும் கலந்துகொள்கிறார். உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் … Read more

ப்ளஸ் 2 மாணவிக்கு பிறந்த குழந்தை.. இளைஞரை தேடும் காவல்துறையினர்..!

பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த சிறுமி அங்குள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கி படித்து வந்தார். அவருக்கும் அதே பள்ளியை சேர்ந்த அஜித் என்ற மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருன் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளன. இதனால், மாணவி கர்பமடைந்தார். முள்ளுக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் 18 வயதுடைய மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. மாணவியின் பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் … Read more

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி  பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி, உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் சமூக நீதியைப் பின்பற்றிட வேண்டுமென்றும், உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளைகளை புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நிறுவிட வேண்டுமென்றும், … Read more

கல்க்குட்டையில் குளிக்கச்சென்ற சிறுவர்கள் – நீச்சல் தெரியாததால் நேர்ந்த பரிதாபம்

மடிப்பாக்கத்தில் கல்க்குட்டையில் குளிக்கச்சென்ற இரண்டு சிறுவர்கள் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். சென்னை மடிப்பாக்கம் அடுத்த கீழ்க்கட்டளை அன்பு நகர் கல்க்குட்டையில் 4 சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அதில் 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுவர்களான மோனீஷ்(13) மற்றும் பர்வேஷ்(12) ஆகியோர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர். இருவரும் நீரில் மூழ்கியதை பார்த்த, உடன் சென்ற சிறுவர்கள் இருவர் அருகில் உள்ளவர்களுக்கு தெரியபடுத்தியதின் பேரில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மேடவாக்கம் மற்றும் கிண்டியிலிருந்து இரண்டு … Read more

’தோத்த காண்டு மொத்தத்தையும் இறக்கிட்டாப்ல’ – கமலின் ’விக்ரம்’ பட பாடல் குறித்து கஸ்தூரி விமர்சனம்

Actress Kashturi criticizes Kamalhassan’s Vikaram movie song: கமலஹாசனின் விக்ரம் பட பாடல் வரிகள் சர்ச்சையாகியுள்ள நிலையில், தோத்த காண்டு மொத்ததையும் இறக்கிட்டாப்ல என நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான … Read more

தமிழக ஆளுநர் விவகாரம் || மதுரையை சேர்ந்த முகமது, சையது இசாக் மீது போலீசார் வழக்குப்பதிவு.!

தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை திரும்பப்பெற வேண்டும் என்று சுவரொட்டி ஒட்டப்பட்ட விவகாரத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதுரையில் தமிழக ஆளுநரை திரும்பப் பெறவேண்டும் என்று சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 2 பேரை இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோரிப்பாளையம் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த … Read more

போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு – அமைச்சர் சிவசங்கர்!

போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கத் தயாராக உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையில், 14ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள், அமைச்சர் சிவசங்கர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து ஊழியர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் முதற்கட்டமாக 2 சதவித ஊதிய உயர்வு அளிக்கப்படும் என குறிப்பிட்டார்.  Source link

இலங்கைக்கு நிவாரண பொருட்கள்: 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு

சென்னை: இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணிக்கு 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கக் கோரி கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொருட்கள் அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, ரூ.80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி … Read more