பூமி பூஜையால் அப்செட் ஆன திமுக எம்பி: கார்த்தி சிதம்பரம் முதல் நீதிபதி சந்துரு வரை குவியும் விமர்சனம்

தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார், சாலை திட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்வில் பூமி பூஜை நடத்தப்பட்டது தொடர்பாக மூத்த அதிகாரியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  இவரிடன் நடவடிக்கையை பல விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.   2019 மக்களவை தொகுதி தேர்தலில் வியக்கத்தகுந்த வெற்றியைபெற்றவர் செந்தில்குமார். இவர் சமீபத்தில் சாலை திட்டம் தொடர்பான அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பூமி பூஜை நடத்தப்பட்டது. இந்நிலையில் இது போன்ற விஷயங்களை ஏன் நடத்துகிறீர்கள்?. இது மதவாத ஆட்சியா இல்லை திராவிட … Read more

தர்மபுரி || குடும்ப தகராறு காரணமாக பெண் தற்கொலை.!

தர்மபுரியில் குடும்ப தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் வேப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி ஜீவா (45). இந்நிலையில் குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில், மன வேதனை அடைந்த ஜீவா தற்கொலை செய்வதற்காக விஷ செடி ஒன்றின் இலைகளை அரைத்து தின்றுவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more

மாணவி மரணம் எதிரொலி.. அரசு அதிரடி அறிவிப்பு..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், மாணவி பயின்ற சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சூறையாடப்பட்டது. அப்பள்ளியின் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமின்றி பள்ளி அலுவலகத்தில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட பலவும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி செல்வக்குமார் ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் … Read more

குளிப்பதை படமெடுத்து ரூ.16 லட்சத்தை பறித்த கந்து வட்டி காமுகன்..! குழந்தையுடன் பெண் கதறல்..!

பரமக்குடியில் 3 லட்சம் ரூபாய் கடனுக்காக பெண் குளிப்பதை படம் பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டி குறுகிய காலத்தில் வட்டிக்கு வட்டிபோட்டு 16 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை பறித்த கந்துவட்டி தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி புது நகரில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருபவர் அபிநயா. இவரது கணவர் தமிழ்மணி வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். கடந்த 2016 ஆம் ஆண்டில், பரமக்குடி மஞ்சள் பட்டினம் மெயின் வீதியில் உள்ள பைனான்ஸ் ரவிக்குமார் … Read more

கள்ளக்குறிச்சி விவகாரம்: கடலூரில் கலவரத்தை தூண்ட முயன்றதாக கல்லூரி மாணவர் கைது

கடலூர்: தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வாட்ஸ்-அப் மூலம் கலவரத்தைத் தூண்ட முயன்றதாக கல்லூரி மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், சில்வர் பீச் பகுதிகளில் மாணவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். யார், யார் கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்படுகிறார்கள் என்பதை போலீஸார் கண்காணித்து … Read more

ஜெனிபர் லோபஸ் 4-வது திருமணம்: புதுக் கணவருக்கு இது 2-வது திருமணம்

ஹாலிவுட் சினிமாவில் அதிரடி நாயகியாக வலம் வருபவர் ஜெனிபர் லோபாஸ். 1986-ம் ஆண்டு வெளியான மை லிட்டில் கேர்ள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அன் ஃபனிஷ்டு லைஃப்,தி பாய் நெக்ஸ்ட் டோர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாது பல படங்களை தயாரித்துள்ள ஜெனிபர், ஐஸ் ஏஜ் உள்ளிட்ட சில கார்ட்டூன் படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். தற்போது ஷார்ட்கன் வெட்டிங், தி மதர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் இந்த படங்களை … Read more

#காஞ்சிபுரம் || இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து.! வாலிபர் பலி.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வினய் குமார்(25) என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வினய் குமார் நேற்று ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக வினய் குமார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் … Read more

குட் நியூஸ்..!! அரிசி, கோதுமை, தயிர் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து!!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் சண்டிகர் நகரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி விதித்து அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த புதிய வரி விதிகள் நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. இதுவரை ரிஜிஸ்டர்டு பிராண்டுகளுக்கு மட்டுமே 5 சதவீத ஜிஎஸ்டி இருந்த நிலையில், தற்போது பண்டல் பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி, பருப்பு, கோதுமை தானியங்களுக்கும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால், … Read more

ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க முதலமைச்சர் சார்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பு

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் மெய்யநாதன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் பிரதமரிடம் அழைப்பிதழை வழங்கினர். 187 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ள ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்குகின்றன. Source link

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்பி பணியிட மாற்றம்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர்களின் போராட்டம் நேற்று முன்தினம் கலவரமாக மாறியது. பள்ளிக்குள் நுழைந்து சூறையாடிய வன்முறை கும்பல், அங்கிருந்த பேருந்துகள், போலீஸாரின் பைக்குகளை தீவைத்து எரித்தனர். கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 67 போலீஸார் காயமடைந்தனர். இதில் 27 பேருந்துகள் உள்பட மொத்தம் 67 வாகனங்களை கொளுத்தப்பட்டன. 3,000 மாணவர்களின் டி.சி … Read more