அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 472 ரூபாய் குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4846 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38768-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

ஆந்திரா : அசானி புயல் காரணமாக கடலோரம் கரை ஒதுங்கிய விசித்திர தேர்.!

அசானி புயல் காரணமாக ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே சுன்னப்பள்ளி கடல் சீற்றமாக காணப்படும் நிலையில், அங்கு விசித்திரமான தேர் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை கண்ட பொதுமக்கள், அந்த தேரை கரைக்கு இழுத்து வந்தனர். தேரில் கோபுரம் வடிவில் தங்க முலாம் பூசப்பட்டு உள்ள நிலையில் மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து புயலின் காரணமாக அடித்து வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.  Source link

பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்து அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் காக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், … Read more

'வெயில் தாங்கலப்பா ஒரு கூல் டிரிங்ஸ் கொடுங்க' குளிர்பான கடைக்கு வந்த குரங்கு

வேப்பூர் அருகே கடும் வெயில் காரணமாக குளிர்பான கடைக்கு குரங்குகள் வரத்துவங்கியுள்ளன. கடலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் அதிகமாக காப்புக்காடுகள் உள்ளன. இந்த காப்புக் காடுகளில் மான், மயில் ,காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றது. இந்நிலையில், அதிக வெயில் தாக்கம் காரணமாக வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு படை எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குரங்குக் … Read more

அசானி புயல்: 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… சென்னையில் 17 விமானங்கள் ரத்து

வங்க கடலில் ஆந்திராவின் மச்சிலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி, இன்று காலை புயலாக வலுவிழந்தது. நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அசானி புயல் காரணமாக, தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. அதேபோல், சென்னை மற்றும் … Read more

தாய்மண்ணில் மரிப்பேன் என்ற பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே.. நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே… வைரமுத்து.!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் எடுத்த தவறான முடிவுகளை காரணம் என எதிர்க் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக கோரி ஒரு மாதமாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்த மகிந்த ராஜபக்சே நேற்று … Read more

தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நபரை இரும்பு ராடால் அடித்து கொன்ற அண்ணன்

தருமபுரியில் தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நபரை இரும்பு ராடால் அடித்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர். பாலஜங்கமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சென்னன் என்பவரின் சகோதரியிடம் மதுபோதையில் பாலியல் தொந்தரவு செய்ய முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.  அந்த பெண் கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் ராஜேசை பிடித்து வைத்து அந்த பெண்ணை சிகிச்சைக்காக தர்ம புரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுபற்றி தகவல் அறிந்து ஆத்திரத்துடன் … Read more

ராஜ்யசபா எம்பி பதவி ஒதுக்க திமுகவிடம் கேட்போம்: கே.எஸ்.அழகிரி தகவல்

ஈரோடு: தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் கேட்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். மத்திய அரசைக் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில், கொடுமுடியில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 10 நாள் நடைபயணம் நேற்று தொடங்கியது. நடைபயணத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலத்துக்கான நிதியைக் … Read more

நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: தூத்துக்குடியில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தி செய்யும் 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. நாள்தோறும் 5 பிரிவுகளிலும் முழு அளவில் மின் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும். கோடைக்கால மின்சார தேவைக்காக ஐந்து … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (11.05.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 15/14/12 நவீன் தக்காளி 50 நாட்டு தக்காளி 40/35 உருளை 25/22/20 சின்ன வெங்காயம் 35/30/25 ஊட்டி கேரட் 40/35/30 பெங்களூர் கேரட் 20/15 பீன்ஸ் 80/70 பீட்ரூட். ஊட்டி 35/32 கர்நாடக பீட்ரூட் 25 சவ் சவ் 18/16 முள்ளங்கி 25/20 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 34/25 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி கத்திரி … Read more