காவிரியின் துணை ஆறான தொட்டல்லா காட்டாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்: மலைக் கிராம விவசாயிகள் வலியுறுத்தல்

அஞ்செட்டி வனச்சரகத்தில் ஓடும் காவிரி ஆற்றின் துணை ஆறான தொட்டல்லா காட்டாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என மலைக் கிராம விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஓசூர் வனக்கோட்டத்தில் அஞ்செட்டி மற்றும் உரிகம் வனச்சரகங்கள் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த வனச்சரகங்களின் இடையே 46 கிமீ தூரம் காவிரி ஆற்றின் துணை ஆறான தொட்டல்லா காட்டாறு ஓடுகிறது. அஞ்செட்டியை அடுத்த குந்துக்கோட்டை மலையில் உற்பத்தியாகும் தொட்டல்லா காட்டாறு அஞ்செட்டி வழியாக ஓடி உரிகம் வனச்சரகத்தில் உள்ள … Read more

காமன்வெல்த் 10ஆம் நாள் ஆட்டத்தில் அசத்திய இந்திய வீரர்- வீராங்கனைகள்!

காமன்வெல்த் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) ஆட்டத்தில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியை தழுவினார். மும்முறை தாண்டுதல் போட்டிஆண்கள் டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) போட்டியில் இந்தியாவின் எல்தோஸ் பால் தங்க பதக்கத்தையும், அப்துல்லா அபூபக்கர் வெள்ளியையும் வென்றனர். வரலாறு படைத்த மகளிர் ஹாக்கிஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்றது. இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது. நிகத் ஜரீன் தங்கம் நடப்பு … Read more

சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் – ராமதாஸ்

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”சென்னை மாநகரப் பேருந்துகளை படிப்படியாக தனியார்மயமாக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாகவும், அதற்காக உலக வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கட்டமைப்பை அடித்தட்டு மக்களிடமிருந்து பறிப்பதற்கு வகை செய்யும் இந்த நடவடிக்கை எந்த வகையிலும் ஏற்க முடியாததாகும். … Read more

அவித்த வேர்க்கடலை பிளஸ் வாழைப் பழம்: வாரம் ஒரு நாளாவது இப்படி சாப்பிடுங்க; நிறைய நன்மை இருக்கு!

அவித்த வேர்க்கடலை, பச்சை வாழைப்பழம் இரண்டையும் வாரத்துக்கு ஒரு நாளவது சாப்பிட்டுப் பாருங்கள், உங்களுடைய ஹார்மோன்களை சம நிலைப்படுத்தி, முடி, தோல், பிரச்னைகளை சரி செய்து நிறைய நன்மைகளை அளிக்கும். அதற்கு எப்படி சாப்பிட வேண்டும் என தெரிந்துகொள்ளுங்கள். எளிமையான உணவுகளில்கூட நல்ல ஊட்டச்சத்துகள் நிரம்பியிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்தலாம். அப்படிப்பட்ட எளிய உணவுகளில் ஒன்றுதான் பச்சை வாழைப்பழம், அவித்த வேர்க்கடலை. அவித்த வேர்க்கடலை, பச்சை வாழைப் பழத்தில் இவ்வளவு நன்மை இருக்கிறதா என்று நீங்கள் யோசிக்கலாம். இருப்பினும், … Read more

நெல் கொள்முதலில் இரட்டை நிலைப்பாட்டால் கூடுதல் எடை, வருவாய் இழப்பு: டெல்டா விவசாயிகள் கொந்தளிப்பு

தஞ்சாவூர்: தமிழகத்தில் நெல் கொள்முதலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 40 கிலோ எடையும், தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 75 கிலோ எடையும் வைத்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரே மாநிலத்தில் இரட்டை கொள்முதல் நிலைப்பாட்டால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் டெல்டா மாவட்ட விவசாயிகள் எடையாலும், கூடுதல் செலவாலும் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்கள் நீங்கலாக விருத்தாசலம், விழுப்புரம் உள்ளிட்ட பெரும்பாலான … Read more

தனிக்குடித்தனம் வர மாட்டியா.? கணவனை பழிவாங்க.. மனைவி செய்த காரியம்.. பறிபோன 3 உயிர்.!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வாணாபுரம் அருகே அமுதா என்ற 27 வயது பெண் தனது கணவர், குழந்தைகள் மற்றும் மாமனார் மாமியாருடன் வசித்து வந்துள்ளார். ஆனால் அவரது மாமனார் மாமியாருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.  அவர்களுடன் ஒரே குடும்பத்தில் இருப்பதால் சிக்கல் ஏற்பட்டு வந்ததால் நிம்மதி கெடுகிறது. தனிக்குடித்தனம் செல்லலாம் என்று அடிக்கடி தனது கணவரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால், பரசுராம் அதற்கு சம்மதிக்கவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த அமுதா தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்று … Read more

கருணாநிதி நினைவு தினம் | திமுகவினர் அமைதி பேரணி: முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை தொடர்ந்து சென்னையில் திமுகவினர் அமைதி பேரணி சென்றனர். கருணாநிதி நினைவு தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் சென்னை ஓமந்தூரார் வளாகத்திலிருந்து கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணியில் திமுகவினரும், பொதுமக்களும் … Read more

நாட்டின் சுதந்திரத்தில் பாஜகவுக்கு துளியும் பங்கு இல்லை: சிபிஐ தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா விமர்சனம்

திருப்பூர்: நாட்டின் சுதந்திரத்தில் பாஜகவுக்கு துளியும் பங்கு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா விமர்சித்தார். திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ம் மாநில மாநாடு இன்று தொடங்கியது. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் நிலையில், கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் டி.ராஜா திருப்பூரில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ”இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு வரும் அக். மாதம் விஜயவாடா நகரில் நடைபெறுகிறது. தற்போதைய … Read more

"போலிஸ் உங்கள் நண்பன்" ராக்கிக் கட்டி கோவை போலிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்.! 

இன்று உலகம் முழுதும் நண்பர்களால் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நண்பர்கள் தினம் வட இந்தியாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அங்கே நண்பர்களுக்கு ராக்கி கயிறு கட்டி இந்த நண்பர் தினத்தை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் வேலை பார்த்து வரும் ஜேம்ஸ் என்ற போலீஸ் வாகனங்களில் செல்லும் நபர்களுக்கு ராக்கி கயிறு கட்டி தனது நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து வந்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகளும் … Read more