`என்னையா விரட்ட பார்க்குறீங்க…?’ வனத்துறையினரை அலறவிட்டு காட்டுக்குள் தப்பியோடிய யானை!

கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்ட முற்பட்டபோது, யானை வாகனத்தை எதிர்த்து வந்த காட்சிகள் வெளியாகி இருக்கிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கொளப்பள்ளி, மழவன் சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்னா யானை ஒன்று ஊருக்குள் சுற்றி தெரிகிறது. சமீப காலமாக அந்த யானை மனிதர்களை கண்டால் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுகிறது. அந்த யானையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் … Read more

விண்ணில் பாய்ந்த SSLV ராக்கெட் – சில மணி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல்

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே SSLV ராக்கெட்டின் சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவிகள் சேர்ந்து உருவாக்கிய ஆசாதிசாட்  எனும் கல்விசாா் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கிய 6 மணி நேர கவுன்டவுன் முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டது. 144 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-02 செயற்கைக்கோள் புவி … Read more

சாலையில் வெட்டி கொல்லப்பட்ட இளைஞர், காவல்துறையினர் விசாரணை., திருநெல்வேலி அருகே பதற்றம்..!

இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரை சேர்ந்தவர் பேச்சிராஜா.  இவருக்கு திருமணமாகி மனைவியும் குழந்தையும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் கட்ட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், சம்பவதன்று அவர் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்க முயற்சித்தனர். … Read more

தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 7-ம் தேதி (இன்று) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 8-ம் தேதி மிதமான மழையும் பெய்யக் கூடும். 9, 10-ம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலையை … Read more

உலக சாதனை முயற்சி: திருக்குறளுக்கு நாட்டியமாடும் 50 பரதக் கலைஞர்கள்

மயிலாடுதுறையில் உலக சாதனை முயற்சியாக 1330 திருக்குறளுக்கு பரதநாட்டியமாடும் நடனத் திருவிழாவில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த 50 பரதக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். மயிலாடுதுறையில் தமிழ் இலக்கியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி இன்று காலை துவங்கியது. இதில், 1330 திருக்குறளுக்கு இரண்டரை வயது முதல் 42 வயது வரையிலான பரதநாட்டிய கலைஞர்கள் ஒவ்வொரு குறளுக்கும் ஏற்ப நடனமாடினர். இசை, கவிதை, உரைநடை, பாட்டு ஆகிய வடிவில் மீண்டும் மீண்டும் 1330 … Read more

சமத்துவம் பேசுவது தேசவிரோதமா? – இந்திய கம்யூ. மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

திருப்பூர்: அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று சமத்துவம் பேசுவது தேசவிரோதமா என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு திருப்பூரில் நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் மாநாட்டை கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு கொடி ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேசினார். இதையடுத்து, சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு கருத்தரங்கு நடந்தது. … Read more

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு இடத்தில் ஆக.12 முதல் மாலை நேர உழவர் சந்தைகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

கரூர்: தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையின்போது உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, ஆக.12-ம் தேதி முதல் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை வீதம் 37 இடங்களில் (சென்னை தவிர) தினமும் மாலை 4 மணி முதல் இரவு … Read more

சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற விருது கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருது இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான … Read more

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இணைந்து நடத்தும் முதல் மாநில மாநாடு – மதுரையில் இன்று நடக்கிறது

மதுரை: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இணைந்து நடத்தும் முதல் மாநில மாநாடு மதுரையில் இன்று நடக்கிறது. மதுரை விமான நிலையம் அருகே அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் கருப்பசாமி கோயில் அருகே இந்த மாநாடு நடக்கிறது. 146 பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், 47 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், 68 டிஎன்டி சமூகத்தினர் என மொத்தம் 261 சமூகத்தினர் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றனர். இதற்காக சமூகம் வாரியாக 50-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து மாநாட்டு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இது குறித்து … Read more