ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல்.. தொழில்துறை அமைச்சர் கைது..!

பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கில், மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிப்பதற்கு தேர்வு நடத்தியது. இதையடுத்து, இந்த நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அத்துடன், 100 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றதாக புகார் … Read more

பழனிசாமி 4 நாள் பயணமாக டெல்லி சென்றார்: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க திட்டம்

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில்பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சார்பில் டெல்லியில் உள்ள ஓட்டலில் நேற்று மாலை பிரிவுபசார விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்குமாறு அதிமுகவை சேர்ந்த பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உட்பட பாஜக கூட்டணி … Read more

பிரியா விடைகொடுத்த கிராம மக்கள்.. மண்ணுக்குள் மறைந்தார் மாணவி ஸ்ரீமதி..!

மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் இன்று காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீமதியின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில், சற்றுமுன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி … Read more

மொழிப்பாடத்தாள்களின் எண்ணிக்கை  குறைப்பு மாணவர்களின் மொழி அறிவை பாதிக்கும்: ராமதாஸ்

சென்னை: “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளிலும், 6 பருவங்களில் 4 பருவங்களாவது தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்கள் கற்பிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குள் மாற்றப்பட்ட 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் தாள்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாக குறைக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் மொழி … Read more

ஒரே அதிமுக எம்.பி.யையும் செயல்பட விடாமல் தடுப்பதா? – சசிகலா விமர்சனம்

சென்னை: நாடாளுமன்றத்தில் அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி.யையும் செயல்படவிடாமல் தடுத்து, கட்சியின் அங்கீகாரத்தையே அழிக்க நினைப்பதை உண்மையான தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா மறைந்தது முதல்இன்று வரை நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும், ஒருசில சுயநலவாதிகள் எடுத்த தவறான முடிவுகளால் அதிமுக தன் பெருமைகளை ஒவ்வொன்றாக இழப்பதாக தொண்டர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். கட்சியின் நலனை காற்றில் பறக்கவிட்டு எடுத்த தவறான முடிவுகளால் நாடாளுமன்றத்தில் நம் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு, … Read more

கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த டெம்போ – 4 பெண்கள் உட்பட 16 தொழிலாளர்கள் காயம்

சத்தியமங்கலம் அருகே இளநீர் வெட்டும் தொழிலாளர்கள் சென்ற டெம்போ கவிழ்ந்து 16 பேர் காயமடைந்தனர். சத்தியமங்கலம் அடுத்த புது வடவள்ளியைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 16 பேர் இளநீர் பறிக்கும் வேலைக்காக வடவள்ளியில் இருந்து டெம்போவில் அத்தானி சென்று கொண்டிருந்தனர். அப்போது டெம்போ புது வடவள்ளி முருகன் கோவில் வளைவில் சென்றபோது அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டெம்போ சாலையோரம் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில், பயணித்த 4 பெண்கள் உட்பட 16 பேர் காயம் … Read more

நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் நீட் மசோதாவை நிறைவேற்ற பேரவைக்கு அதிகாரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: நீட் மசோதாவை நிறைவேற்ற மாநில சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. இந்த மசோதா நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பது உள்ளிட்ட பதில்களை மத்திய அரசுக்கு வழங்க இருக்கிறோம் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற அனுப்பப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் இம்மசோதா மத்திய சுகாதாரத் துறை, … Read more

திருவள்ளூர்: மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவருக்கு நேர்ந்த பரிதாபம்

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர் ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சாத்தான் குப்பத்தைச் சேர்ந்தவர் ராமன் (36).இ வர் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் 4 மீனவர்களுடன் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார். அப்போது, பழவேற்காடு முகத்துவாரம் கடல் பகுதியிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர் … Read more

ஒலிம்பிக் இந்திய அணிக்கு ரூ.18 கோடி ஸ்பான்சர்… பட்டியலை வெளியிட்ட பி.சி.சி.ஐ

BCCI Tamil News: 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்தாண்டில் (ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை) நடைபெற்றது. முன்னதாக, ஜூன் மாதத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு (IOA) ஆதரவளிக்க அளிப்பதாக தெரிவித்தது. அதன்படி, பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தன்னால் இயன்ற ஒவ்வொரு வடிவத்திலும், விதத்திலும் ஆதரவளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அந்த உணர்வில், … Read more

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் காவல் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய உள்துறை செயலரிடம் பாஜக மனு

சென்னை: போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வலியுறுத்தி உள்துறை செயலர் பணீந்திர ரெட்டியிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக உள்துறை செயலர் கே.பணீந்திர ரெட்டியை பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் நேற்று சந்தித்துமனு கொடுத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் மனு கொடுத்துள்ளார். தற்போதைய உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் … Read more