திமுகவின் முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்.!!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் பெரம்பூரில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், மாவட்ட அவை தலைவர் பாரதி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் பெரம்பூர், சோத்தூர், ஆனந்தநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திமுக மூத்த நிர்வாகி ஜெயபால் தலைமையில் திமுக உள்ளிட்ட … Read more

மக்கள் தாமாக முன்வந்து வரி செலுத்த ஆளுநர் தமிழிசை, தலைமை நீதிபதி பண்டாரி வேண்டுகோள்

சென்னை: சென்னையில் நடந்த வருமான வரி தின விழாவில், தனி நபர் வரி செலுத்துதல் பிரிவில், அதிக அளவு வரி செலுத்தியதற்காக, நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ரஜினிகாந்த் சார்பில் அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார். தமிழகம், புதுச்சேரி மண்டல வருமான வரித் துறை அலுவலகம் சார்பில் 163-வது வருமான வரி தினம் சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், … Read more

சென்னையில் இன்று எந்த ஏரியாவில் மின் தடை?

சென்னையில் 25.07.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், தி.நகர், பெரம்பூர், தரமணி ஐடி காரிடர் ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மயிலாப்பூர் பகுதி : மயிலாப்பூர் கிழக்கு;  டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராயபேட்டை நெடுஞ்சாலை, வி.எம்.தெரு லஸ் சர்ச் ரோடு பகுதி. … Read more

வேகம் பிடிக்குது தம் சிக்கு தம் சிக்… காரு இடிக்குது தம் சிக்கு தம் சிக்… மழையில் குளித்த மாவீரனுக்கு மாவுக்கட்டு

கொட்டும் மழையில் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு, சாலையில் நின்று கொண்டாட்டமாக குளித்தவர் மீது கார் மோதியதால் தூக்கி வீசப்பட்டார். ஒரு புறம் கனமழை கொட்டித்தீர்க்க.. மறுபுறம் இடி மின்னல் அதிரவைக்க , அதனை கண்டு அசராத ஆப் பாடி அர்ணால்டு ஒருவர், வீட்டு மாடியில் இருந்து வீதியில் விழும் மழை நீரை குற்றால அருவியாக பாவித்து கொண்டாட்டமாக குளித்துக்கொண்டிருந்தார். அவரது சந்தோசம் கன நேரம் கூட நீடிக்கவில்லை, அதற்குள்ளாக அந்த வழியாக வந்த கார் அவரை … Read more

டெல்லியில் இருந்து முன்கூட்டியே சென்னை திரும்பிய பழனிசாமி

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி 4 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த நிலையில், இன்று நடைபெறும் குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் நேற்றே பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பிரிவுபசார விழா, இன்று நடைபெறும் குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 22-ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின்போது, அதிமுகவில் நிலவும் … Read more

Tamil news today live: மின்கட்டண உயர்வு: அதிமுக போராட்டம்

Go to Live Updates பெட்ரோல் – டீசல் விலை சென்னையில் 64வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குடியரசு தலைவர் பதவியேற்பு இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக இன்று பதவியேற்கும் திரௌபதி முர்மு. டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்பு ஏற்பாடுகள் தீவிரம்.  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அதிமுக போராட்டம் மின்கட்டண உயர்வை கண்டித்து, … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு – ஓர் ஆய்வு

இதோ.. மிகப்பெரிய அளவில் தேர்வு நடத்துவதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொழில்முறை நிபுணத்துவம் மீண்டும் ஒருமுறை ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. 22 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் – சுமார் 8000 தேர்வு மையங்கள் – கூடுதலாக சுமார் 2,000 சிறப்பு பேருந்துகள் – தேர்வர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத கண்காணிப்பு ஏற்பாடுகள்… தேர்வாணையம், நன்கு திட்டமிட்டு செம்மையாக செயல்பட்டு இருக்கிறது. பாராட்டுகள். சில குறைகள் இருக்கத்தான் செய்தன. சில மையங்களில் தேர்வர்கள் உடன் வந்த பெற்றோர் … Read more

டேஸ்டியான பூண்டு சட்னி ஈசி செய்முறை: 3 நாள் வச்சு சாப்பிடலாம்!

Tasty Garlic chutney recipe in Tamil: பெரும்பாலானோர் காலையும் இரவும் இட்லி அல்லது தோசையைத் தான் சாப்பிட்டு வருகிறார்கள். இதற்கு நம் வீடுகளில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி அல்லது சாம்பார் என ஒரே மாதிரியாக வைப்பார்கள். சில வீடுகளில் தினம் ஒரு சட்னி, சாம்பார் அல்லது இரண்டு சட்னிகளை செய்ய அலுப்புப்பட்டு, ஒரே ஐட்டத்தை வைத்து முடித்துவிடுவார்கள். இதற்கு தீர்வாக, ஒரு முறை செய்தால் 3 நாளைக்கு வைத்து சாப்பிட அருமையான … Read more

மின் கட்டணம் உயர்வு.. தமிழக முழுவதும் இன்று அதிமுக போராட்டம்.!!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 18-ஆம் தேதி அறிவித்தார். கடந்த 10 வருடங்களில் மின்சார துறையின் கடன் ரூபாய் 12647 கோடியாக உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும். 42% மின் இணைப்பாளர்களுக்கு கட்டணங்களில் மாற்றம் இருக்காது என தெரிவித்து … Read more