கடலூரில் கபடி வீரர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ்.21 வயதான விமல்ராஜ், சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ஆம் ஆண்டு படித்துவந்தார். கபடி வீரரான விமல்ராஜ், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று இரவு (ஜூலை 24) பண்ருட்டி அருகேயுள்ள மாண்டிகுப்பத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.இந்த கபடி போட்டியில் விமல் ராஜ் கலந்துகொண்டார். போட்டியில் ரைடு சென்று திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக மயங்கி … Read more

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மூன்று பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மது விற்பனை செய்வதை தடுப்பதற்காக சட்டம்-ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் துறையினர், கனிராவுத்தர் குளம் அருகே தீவிர சோதனை மேற்கொண்டதில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த அஸ்லாம் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த 6 மாது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். … Read more

‘புதுச்சேரி மாணவி கொலையில் 7 நாட்களாகியும் கைது நடவடிக்கை இல்லை’ – கல்லூரி மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டு 7 நாட்களாகியும், கொலையாளி கைது செய்யப்படவில்லை என்று கூறி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி சன்னியாசி குப்பம் பகுதியை சேர்ந்த கீர்த்தனா என்ற கல்லூரி மாணவியை ஒரு வாரத்துக்கு முன்பு முகேஷ் என்ற இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்தார். இது தொடர்பாக திருபுவனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள முகேஷை தேடி வருகின்றனர், இந்த நிலையில், ஒருதலைபட்சமாக காதலித்து வந்து, அந்த மாணவியை … Read more

திருவள்ளூர்: பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் +2 மாணவி (17) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், திருவள்ளூர் அடுத்துள்ள கீழச்சேரி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், அது குறித்து பள்ளி நிர்வாகம் முறையான தகவலை அளிக்கவில்லை எனக் கூறியும், … Read more

‘கடவுளின் பெயரால்…’ அழுத்திச் சொன்ன இளையராஜா; எம்.பி-யாக தமிழில் பதவி ஏற்பு

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக ‘கடவுளின் பெயரால்’ அழுத்திக் கூறி பதவியேற்றுக் கொண்டார். நியமன எம்.பி.க்களாக அறிவிக்கப்பட்டவர்கள் அனைவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜூலை 18 ஆம் தேதி பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இளையராஜா அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்ததால் அவர் பதவியேற்கவில்லை. இந்த நிலையில், இளையராஜா இன்று (ஜூலை 25) மாநிலங்களவை கூட்டம் தொடங்கியவுடன் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவைத் துணைத் தலைவர் முன்பு தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். … Read more

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கத்தை நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து நிர்வாகிகளை நீக்கியும், புதிதாக நியமித்து வருகிறன்றனர். இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கத்தை நியமனம் செய்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் ஆகியோரை நியமித்தும் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Source link

குடும்ப கஷ்டம்: குரூப் 4 தேர்வெழுதிவிட்டு வந்த பெண் மகளுடன் எடுத்த விபரீத முடிவு

தாராபுரம் அருகே குடும்ப கஷ்டம் காரணமாக தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ் (28). பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் நூல் ஆலையில் வேலை செய்து வந்த இவர், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நூற்பாலை விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி பூங்கொடி (25) தாராபுரத்தில் உள்ள தனியார் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் … Read more

கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து திருவள்ளூர் பள்ளி மாணவி தற்கொலை!

கள்ளக்குறிச்சி மாணவி மர்மான முறையில் மரணமடைந்து, அந்த நிகழ்வின் அதிர்ச்சி நீங்கும் முன்பே, சென்னையை அடுத்த திருவள்ளூரில் அதேபோல் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொணடுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசானம். இவரது மனைவி முருகம்மாள். இவர்களது  மகள் சரளா. சரளா திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் உள்ள சாக்ரெட் ஹார்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அறைத் … Read more

கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி ; போலீசார் விசாரணை

விழுப்புரம் அருகே, தனியார் மருந்தியல் கல்லூரியின் முதல் மாடியிலிருந்து அக்கல்லூரி மாணவி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தைச் சேர்ந்த அம்மாணவி, விக்கிரவாண்டியில் உள்ள கல்லூரியில் மருந்தியல் துறையில் முதலாமாண்டு பயின்று வருகிறார். இன்று, கல்லூரியின் மாடியில் இருந்து அவர் குதித்ததாக கூறப்படும் நிலையில், படுகாயத்துடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே வலிப்பு வந்ததாக கூறப்படும் நிலையில், மயக்கமுற்று கால் தவறி மாடியில் இருந்து … Read more

“உங்கள் வீட்டு நாயை பராமரிக்க பயிற்சி பெற்ற காவலர் வேண்டுமா?” – ஆர்டர்லி வழக்கில் உயர் நீதிமன்றம் காட்டம்

சென்னை: ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவல், புகார் வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல் துறை உயர் அதிகாரி மீது உள்துறை முதன்மைச் செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட வாகனங்களில் காவல் துறை ஸ்டிக்கர்கள், கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உத்தரவிடப்பட்ட வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரம்ணியம் … Read more