‘உத்தரவு வாபஸ் துறை அமைச்சர்’ யார் தெரியுமா? திருச்சி ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய அ.தி.மு.க

க. சண்முகவடிவேல், திருச்சி திமுக ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி,வீட்டுவரி உள்ளிட்டவைகள் கட்டண உயர்வை கண்டித்து, தமிழக முழுவதும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, அண்ணா சிலை திடலில் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் … Read more

சின்னசேலம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்: அமைச்சர் அன்பில் மகேஸ்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் மேநிலைப் பள்ளியில் வன்முறை நடைபெற்று இயங்க முடியாத சூழலில், அந்தப் பள்ளி மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த நிலையில், அவரது உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு கடந்த 17-ம் தேதி பள்ளியில் பெரும் வன்முறை நிகழ்ந்தது. இந்த வன்முறையின்போது, … Read more

ஓ.பி.எஸ் இனி அனாதை; மத்திய அரசு எங்களை அங்கீகரித்து விட்டது: ஆர்.பி உதயகுமார்

RB Udhayakumar says OPS has been orphaned, Centre recognize us: அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் அலட்சியமாக நடந்துக் கொண்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அனாதையாகிவிட்டார் என்று தமிழக சட்டசபையில் ஓ.பி.எஸ்-க்கு பதிலாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை கோரிக்கை காரணமாக, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஒரு அணியும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு அணியும் உருவானது. பொதுக்குழுவில் … Read more

புதுச்சேரி முழுவதும் 1 லட்சம் தேசியக் கொடி ஏற்ற பாஜக ஏற்பாடு: சாமிநாதன் தகவல்

புதுச்சேரி: 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி முழுவதும் 1 லட்சம் தேசியக் கொடி ஏற்ற பாஜக ஏற்பாடு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார். புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் இன்று கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “75-வது சுதந்திரத்தினத்தையொட்டி 1 லட்ச வீடுகளில் தேசியக் கொடிகளை ஏற்ற பாஜக ஏற்பாடு செய்துள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுக்க இளையோரின் தேசப் பற்றை வளர்க்கும் நோக்கில் புதுச்சேரியில் உள்ள மறைந்த தலைவர்களின் சிலைகளை சுத்தம் செய்தல், … Read more

”திமுகவுக்கு அடுத்து என்பவர்களுக்கு எங்கள் ஆர்ப்பாட்டம் ஒரு பாடம்” – செல்லூர் ராஜூ சூசகம்

திமுகவிற்கு அடுத்து நாங்கள் தான் என்போருக்கு அதிமுக ஆர்ப்பாட்டம் ஒரு பாடம் என பாஜக குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். மின் கட்டண உயர்வை கண்டித்து மதுரை முனிச்சாலை பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கருப்புச் சட்டை அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர், மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, ஆவின் … Read more

சென்னை: ஜூலை மதத்தை நிறைவுபடுத்த வரிசைகட்டும் நிகழ்ச்சிகள்

ஆடி மாசம் தொடங்கியதிலிருந்து மக்கள் விசேஷ நாட்கள் இல்லாமல் வாடிப்போய் இருக்கின்றனர். ஆதலால் மக்களின் நாட்களை நிறைவு செய்யும் விதமாக சென்னையில் வரிசையாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது. இம்மாத இறுதியில் அய்யனார் ஆடிப்பெருக்கு விழாவைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் அற்புதமான ஸ்டாண்ட்-அப், கலைக் கண்காட்சி போன்ற பல நிகழ்ச்சிகள் சென்னை மக்களின் நாட்களை உற்சாகப்படுத்த தயாராக உள்ளது. இரண்டு இசை ஜாம்பவான்களின் மந்திரம்: ‘காதல் ரோஜாவே’ என்ற மெல்லிசைப் பாடலில் இருந்து ‘காதலிக்கும் பெண்ணின் கைகள்’ வரை பல்லாயிரம் … Read more

#BREAKING : பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது பாலியல் புகார்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!

இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களை பாலியல் தொந்தரவு தரும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதுபோன்று பாலியல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், மாணவியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு சேலம் பதிவாளர் கோபி கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு, பதிவாளர் கோபி பாலியல் தொல்லை தந்ததாக ஆராய்ச்சி … Read more

பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு கடும் போட்டி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை பிடிக்க அக்கட்சி நிர்வாகிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ஆர்.டி.ராமச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருப்பதால், அவரை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி அண்மையில் கட்சியிலிருந்து நீக்கினார். இதையடுத்து, தற்போது அந்தப் பதவியைப் பிடிக்க பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில், முன்னாள் எம்.பிக்கள் சந்திரகாசி, மருதராஜா, முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழ்ச்செல்வன், பூவை.செழியன், ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், … Read more

மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த கடலூர் கபடி வீரர்! பகீர் காட்சிகள்!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கபடி விளையாடும் போது மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான காட்சி வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பெரியபுரங்கணி கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் முத்தாண்டிகுப்பம் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட மானடிக் குப்பத்தில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்டுள்ளார். நேற்று இரவு போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது, விமல் ராஜ் எதிரணியிடம் ரைட் சென்று திரும்பி எல்லைக்கோட்டை தொடும்போது திடீரென மயங்கி … Read more

“பள்ளியை ஏன் மூடுகிறீர்கள்?” – புதுச்சேரி முதல்வரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய மாணவர்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளியை பள்ளிக் கல்வித் துறை மூடபோவதாக அப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் பள்ளியை மூட எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள், பள்ளி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஒருகட்டத்தில் முதல்வர் இல்லம் சென்று அங்கிருந்த முதல்வர் ரங்கசாமியிடம் மாணவ, மாணவிகள் கேள்வி எழுப்பினர். புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகர் காவலர் குடியிருப்பு பகுதியில் 30 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது இந்திரா காந்தி அரசு … Read more