செஞ்சி: பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கி நேற்று இரவு கர்நாடகா அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.  அப்பொழுது செஞ்சி திண்டிவனம் சாலையில், திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று, கர்நாடகா அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.  பின்பு தனியார் பேருந்து அருகில் இருந்த போர்வெல் கடை மீது மோதி நின்றது. … Read more

44-வது செஸ் ஒலிம்பியாட் | 28-ம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நாளான வரும் 28-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு வரும் 28ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அந்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், … Read more

தமிழகத்தின் மற்றொரு பிரக்ஞானந்தாவாக உருவாகும் 4 வயது சிறுவன் – யார் இந்த ஸ்டீஃபன்?

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் எதிர்வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் பிரமாண்டமான சிற்பக்கலை தூண் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் அடுக்கில் யானைகளும், அடுத்த அடுக்கில் மயில்களும், மேல்பகுதியில் சிங்கமுக தோற்றம் கொண்ட சிலையும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பல ஊர்களின் பேருந்து நிலையங்களில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்கள் மற்றும்சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் சர்வதேச வீரர்கள், பயிற்சியாளர்கள், பார்வையாளர்கள் மாமல்லபுரத்தை ரசிப்பதற்காக அங்குள்ள இடங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ALSO READ:  செஸ் ஒலிம்பியாட்: … Read more

சிஎஸ்ஐ தலைமையகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு

திருவனந்தபுரத்தில் உள்ள தென் இந்திய திருச்சபை (சிஎஸ்ஐ) தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் இன்று (திங்கள்கிழமை) அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.இந்தச் சோதனையானது காரக்கோணம் தேவாலயத்தால் நடத்தப்படும் டாக்டர். சோமர்வேல் மெமோரியல் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியிலும் நடந்தது. தொடர்ந்து, சிஎஸ்ஐ தென் கேரள பிஷப் தர்மராஜ் ராசலம், மருத்துவக் கல்லூரி இயக்குனரும், 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிட்டவருமான டாக்டர். பென்னட் ஆப்ரஹாம் மற்றும் சிஎஸ்ஐ செயலாளர் பிரவீன் வீட்டிலும் … Read more

#தமிழகம் | நூற்பாலைக்கு வேலைக்கு அழைத்துவந்த ப்ரோக்கர் : கொடுமை தாங்கமுடியாமல் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த இளம்பெண்கள் .!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் பாபு சான்டா என்பவர் ஏராளமான வடமாநில தொழிலாளர்களை தங்க வைத்து நூற்பாலைக்கு வேலைக்கு அனுப்பி வந்துள்ளார். இதில், ஒனடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரீத்தா முனாக்கூர், போர்சா ராணி ஜெயா என்ற 2 இளம்பெண்கள் எங்களால் இங்கு வேலை செய்ய முடியவில்லை, எங்களை ஊருக்கு அனுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் பாபு சான்டா அவர்களை ஊருக்கு அனுப்பாமல் ஒரு அறைக்குள் பூட்டி வைத்துள்ளார்.  மேலும், … Read more

கணியாமூர் பள்ளியில் ஜூலை 27 முதல் ஆன்லைன் வகுப்புகள் – அமைச்சர் அன்பில் மகேஷ்

வன்முறை நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கணியாமூர் தனியார் பள்ளியில் வரும் 27ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆலுவலகத்தில் பேட்டியளித்த அவர், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணியாமூர் சுற்று வட்டாரத்தில் வகுப்புகளை தயார் செய்து அடுத்த வாரம் முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றார். மேலும், ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பதாகவும் அமைச்சர் கூறினார்.   … Read more

மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் “தமிழகத்தைச் … Read more

'என்னிடம் தவறாக நடந்துகொண்டார்’.. மாணவியின் புகாரில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மாணவி கொடுத்த புகாரின் மீதான விசாரணையில், பதிவாளர் மாணவியிடம் தவறாக நடந்துகொண்டது தெரியவந்ததாகக்கூறி அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்விவகாரத்தில் இதுவரை என்னென்ன நிகழ்ந்துள்ளது என்பது தொடர்பான சில முக்கிய விவரங்கள், இங்கே. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக கோபி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பல்கலைக்கழக முழுநேர பொறுப்பு பதிவாளராக கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வருகிறார். … Read more

ஓபிஎஸ் களமான தேனியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: பிரமாண்ட கூட்டத்தை திரட்டி ‘கெத்து’ காட்ட இபிஎஸ் திட்டம்

மதுரை: ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் முதல் முறையாக ஓபிஎஸ் இல்லாத அதிமுக ஆர்ப்பாட்டம் நாளை நடக்கிறது. மின்கட்டண உயர்வுக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் ஓபிஎஸ்-ஐ மீறி பெரும் கூட்டத்தை திரட்டி தனது செல்வாக்கை நிரூபிக்கவும், சொந்த மாவட்டத்திலே அவருக்கு செல்வாக்கு இல்லை என்பதை காட்டவும் இபிஎஸ் தரப்பினர் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பழனிசாமி அணி அதிமுக சார்பில் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசை கண்டித்து இன்று (திங்கள்கிழமை) … Read more

`ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே..’ என்றுரைத்த பாரதியார் ஊரில், மற்றுமொரு ஆணவப்படுகொலை?

தூத்துக்குடியில் எட்டையாபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 50). இவரது மகள் ரேஸ்மா (வயது 20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜ் (வயது 26) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி, கடும் … Read more