முன்னாள் டிஜிபி ஜாஃபர் சேட் வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை

தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்த முன்னாள் டிஜிபி ஜாஃபர் சேட்டிற்கு தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் நிலம் ஒதுக்கியது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. தமிழ்நாடு காவல் துறையில் 2006 – 2022 காலகட்டத்தில், முன்னாள் டிஜிபியும் தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்தவர் ஜாஃபர் சேட். பெசண்ட் நகர் கோட்டம் திருவான்மியூர் புறநகர் பகுதியில், இவரது மகள் மற்றும் மனைவி பெயரில், நிலம் ஒதுக்கீடு … Read more

மாமல்லபுரத்தில் செஸ் விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ள மாமல்லபுரத்தில் நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு செஸ் விளையாடினார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா நாளை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்தப் பணிகள் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மாலை மாமல்லபுரத்தில் செய்யப்பட்டுள்ள … Read more

ஏலச்சீட்டு நடத்தியவர் எடுத்த விபரீத முடிவு.. பணத்தை பறிகொடுத்து தவிக்கும் 600 பேர்

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி 3 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதால் 800 பேர் ஏமாந்து போயுள்ளனர்.  திருச்சி பாலக்கரை எடத்தெருவில் பொன்மகள் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் கண்ணன் என்பவர் சீட்டு நடத்தி வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள 800க்கும் மேற்பட்டோர் அவரிடம் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை சீட்டுக்கான தொகை செலுத்தியுள்ளனர். 700 பேர் 500 ரூபாய் சீட்டு கட்டியுள்ளனர். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி அன்று ஒரு கோடி ரூபாய் சீட்டு … Read more

வெல்லமண்டி நடராஜன் மீது சி.பி.சி.ஐ.டி விசாரணையா? மாநகராட்சி கூட்டத்தில் ஒலித்த குரல்

திருச்சி மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் கடந்த 26-ம் தேதி மாநகராட்சி காமராஜர் மன்றத்தில் உள்ள லூர்துசாமி கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்ட மன்ற உறுப்பினர்கள் தங்களுடைய வார்டுகளில் உள்ள பல்வேறு குறைகள் குறித்தும் அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர். திமுக மேயர் அங்கமாக இருக்கும் திருச்சி மாநகராட்சியில் திமுக வார்டு உறுப்பினர்களே மாநகராட்சிக்கு எதிரான … Read more

நள்ளிரவில் கனரா வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி.. அலாரம் ஒலித்ததும் தப்பியோடிய கொள்ளையர்கள்.!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, நள்ளிரவில் கனரா வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்று, எச்சரிக்கை அலாரம் ஒலித்ததும் தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கச்சிராயன்பட்டி கிராமத்தில் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள இந்த வங்கியில் ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர்.  நள்ளிரவில் வங்கிக்கு வந்த கொள்ளையர்கள், முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அச்சமயம் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையடிப்பதைக் கைவிட்டு கொள்ளையர்கள் தப்பிய நிலையில், வங்கியில் இருந்த பணம், நகைகள் தப்பியது.     … Read more

’காமம் ஆணின் பகுத்தறிவை குருடாக்கிவிடுகிறது’ – உயர் நீதிமன்றம் வேதனை 

மதுரை: ‘ஆண்கள் உடல் இச்சைக்கு அடிமையாவதால், பெண் மீதான காமம் ஆணின் பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கிவிடுகிறது’ என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குமரி மாவட்டம் குலசேகரம் கல்வெட்டான்குழியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 2013ம் ஆண்டில் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று பேச்சிப்பாறை அணை கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்தப் பெண் கூச்சல் போட்டதால் கால்வாய் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த வழக்கில் மணிகண்டனை குலசேகரம் போலீஸார் கைது … Read more

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கல்லக்குடியில் மீண்டும் நின்று செல்ல வேண்டும் – பாரிவேந்தர் எம்.பி

பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர், ரயில்வே வாரியத்தின் சேர்மனுக்கு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கல்லக்குடி ரயில்நிலையத்தில் மீண்டும் நின்று செல்ல வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களும் லால்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். அவ்வாறு நின்று சென்றால் அது பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு பேருதவியாக இருக்கும். சோதனை முயற்சியாக ஒரு மாத காலத்திற்கு இதை செய்து பார்த்து, … Read more

மல்லி இலை, புதினா, மிளகாய், தக்காளி… ஒரு மாதம் வரை ஃப்ரெஷா வைக்கிறது எப்படி?

How to keep Green chilies, Coriander leaves, Mint, Tomato fresh for month: நாம் அடிக்கடி சமையலில் பயன்படுத்தும் பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா, தக்காளி போன்றவை கொஞ்ச நாளிலே அழுகி விடும் அல்லது காய்ந்து விடும். இதனால் நாம் இவற்றை அடிக்கடி வாங்க நேரிடுகிறது. இவற்றின் விலைகளிலும் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருவதால், பலருக்கு அடிக்கடி வாங்குவது சிரமமாக உள்ளது. இதற்கு தீர்வாக ஒரு முறை வாங்கி, ஒரு மாதத்திற்கு மேல் … Read more

புதுச்சேரி | புத்தகம், சீருடை தராததால் கல்வித்துறை அலுவலகம் முற்றுகை: 4 பெண்கள் உட்பட 50 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து ஒரு மாதமாகியும் அரசுப் பள்ளிகளில் பாடப் புத்தகம், சீருடை தராததால் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்ததை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிகழ்வில் 4 பெண்கள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறந்து 1 மாதத்துக்கு மேலாகியும் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடை தரப்படவில்லை. மாணவர்களுக்கான பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி … Read more

சிறிய கூண்டில் 76 குரங்குகளை அடைத்து வைத்த வனத்துறை அதிகாரிகள்! செங்கல்பட்டில் பரிதாபம்

செங்கல்பட்டு அருகே 76 குரங்குகளை ஒரு சிறிய கூண்டுக்குள் வனத்துறை அதிகாரிகளே அடைத்து வைத்த சம்பவம் பலரது கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. அருகில் இருந்த வனப்பகுதிகளில் இருந்து ஊருக்குள் நுழைந்த குரங்குகள், அங்கிருந்த வீடுகளுக்குள் நுழைந்து பொருட்களை உடைப்பது, உணவுப் பொருட்களை திருடிச் செல்வது என பல சேஷ்டைகளை செய்துள்ளன. இதையடுத்து, ஊருக்குள் இருக்கும் குரங்குகளை பிடித்துச் செல்லுமாறு … Read more