வெறும் வயிற்றில் காஃபி, டீ குடிக்கிறீங்களா? உஷார்… இந்த ஆபத்து இருக்கு மக்களே!

காலையில் எழுந்ததும் காஃபி, டீ குடித்துவிட்டுதான் உங்கள் எல்லா வேலைகளையும் தொடங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறீர்கள் என்றால், இனிமேல் அப்படி செய்யாதீர்கள். ஏனென்றால், வெறும் வயிற்றில் காஃபி, டீ குடிப்பது நல்லதல்ல. பெட் காஃபி, பெட் டீ குடிப்பது என்பது இந்தியர்களின் பழக்கமாக இருக்கிறது. ஆனால், அப்படி காலையில் காஃபியையோ அல்லது டீயையோ குடித்துவிட்டு உங்கள் நாளைத் தொடராதீர்கள். பலரும் கண்டிப்பாக தேநீர் குடிப்பவர்கள். சூடான டீயுடன் தினமும் நம் நாளைத் தொடங்க விரும்புகிறோம். தேநீர் பிரியர்கள் நண்பர்களுடன் … Read more

'நம்ம செஸ்.. நம்ம பெருமை.. செஸ் குறியீட்டை மணலில் செதுக்கிய பள்ளி ஆசிரியர்.!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது.  இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை அனைத்து தரப்பு மக்களுக்கும் அறிந்து கொள்ளும் வகையில், மாவட்டம் தோறும் இந்த போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள மேம்பாலங்களுக்கு செஸ்பலகை வடிவில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நாகூர் தேசிய … Read more

தெறிக்க விடலாமா.. ரைபிள் கிளப்பை குலுங்க வைத்த ரசிகர்கள்.. இறங்கி வந்த அஜீத்..!

துப்பாக்கிசுடும் போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு சென்றுள்ள அஜித்தை காண்பதற்கு திரண்ட கூட்டத்தை கலைக்க இயலாமல் போலீசார் விழிபிதுங்கி போயினர். திருச்சியை திரும்பிப்பார்க்க வைத்த அசராத அஜீத் ரசிகர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. நடிகர் அஜீத் திருச்சி துப்பாக்கி சுடும் மையத்திற்கு போட்டியில் பங்கேற்பதற்காக வந்தார். காரில் இருந்து இறங்கியதும் அஜீத் வேகமாக ரைபிள் கிளப்பிற்குள் சென்று விட ரசிகர்கள் முண்டியடிக்க போலீசார் ரசிகர்களை கட்டுப்படுத்த இயலாமல் தவித்து போயினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் … Read more

சீமைக்கருவேலம், யூகலிப்டஸ் மரங்களை அகற்றுவது பேரவசியமாகிறது: சீமான்

சென்னை: “யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்குத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் பெரிதும் வரவேற்கிறேன். சீமைக்கருவேலம், யூகலிப்டஸ் மரங்களை அகற்ற தமிழக அரசு விரைவாக செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. “தமிழக வனப்பகுதிகளிலுள்ள அந்நிய மரங்களை அகற்றக்கோரி தொடரப்பட்டப் பொது வழக்கொன்றில், விரைவாக அவற்றிற்கென செயல்திட்டத்தை வகுக்க வலியுறுத்தியும், யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்குத் தடைவிதித்தும் உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் … Read more

’அண்ணாமலை ஜனநாயகத்தின் காவலர்’.. பாஸ்போர்ட் மோசடி வழக்கில் நீதிபதி பாராட்டு மழை!

பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பாஸ்போர் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சுரேஷ் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “2013-ம் ஆண்டு பெறப்பட்ட எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த போது காவல்துறையினர் என் மீது குற்ற வழக்கு இருப்பதாக தெரிவித்தனர். … Read more

களத்தில் உயிரைவிட்ட விமல்ராஜ்! 3 லட்சம் கொடுத்து, உருகவைத்த மானடிக்குப்பம் மக்கள்! 

மானடிக்குப்பத்தில் நடந்த மாநில அளவிலான கபாடி போட்டியில் பெரிய புறங்கனி கிராமத்தை சேர்ந்த கபாடி வீரன் விமல் ராஜ் ஆடுகளத்திலேயே உயிரிழந்தார்.  களத்தில் உயிரைவிட்ட மாவீரன் விமல் ராஜ் குடும்பத்தினருக்கு போட்டி நடத்திய ஊரான மானடிக்குப்பம் ஊர் பொது மக்கள் அனைவரும் ஒன்று கூடி ரூபாய் 3,00,000 நிதி திரட்டி பண உதவியாக வழங்கி உள்ளனர்.  இந்த மிகப்பெரிய உதவியினை செய்த அக்கிராம நல்உள்ளங்களுக்கு அனைவரும் நன்றி கூறி வருகிறார்கள். தமிழக அரசு தரப்பில் ரூபாய் மூன்று … Read more

பிரதமர் மோடியின் இரண்டு நாள் சென்னை பயண விவரம்

சென்னை: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்க விழா மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டுநாள் சுற்றுப்பயணமாக நாளை தமிழகம் வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியின் பயணத்திட்டம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாளை (ஜூலை 28) பிற்பகல் 2.20 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு … Read more

பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மண்ணில் புதைப்பு – பெற்ற தாயே செய்த கொடூரச்செயல்

வலங்கைமான் அருகே பிறந்து இரண்டே நாட்களான பச்சிளம் குழந்தையை மண்ணில் புதைத்த தாயால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, வேடம்பூர் தோப்புத் தெரு பகுதியில் மாரியப்பன்- ரேவதி தம்பதியருக்கு ரேணுகா (வயது 33), ரேகா (வயது30), மணிகண்டன் (வயது20), சினேகா (வயது18) உள்ளிட்ட மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மூத்த பெண்ணான ரேணுகாவிற்கு நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த முத்து என்பவருடன் 12 வருடங்களுக்கு முன்பு … Read more

முன்னாள் டிஜிபி ஜாஃபர் சேட் வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை

தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்த முன்னாள் டிஜிபி ஜாஃபர் சேட்டிற்கு தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் நிலம் ஒதுக்கியது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. தமிழ்நாடு காவல் துறையில் 2006 – 2022 காலகட்டத்தில், முன்னாள் டிஜிபியும் தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்தவர் ஜாஃபர் சேட். பெசண்ட் நகர் கோட்டம் திருவான்மியூர் புறநகர் பகுதியில், இவரது மகள் மற்றும் மனைவி பெயரில், நிலம் ஒதுக்கீடு … Read more

மாமல்லபுரத்தில் செஸ் விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ள மாமல்லபுரத்தில் நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு செஸ் விளையாடினார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா நாளை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்தப் பணிகள் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மாலை மாமல்லபுரத்தில் செய்யப்பட்டுள்ள … Read more