மெரினா கடற்கரையை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறை – காரணம் என்ன?

சென்னை மெரினா கடற்கரையில் காவல் துறையினர் ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு தலமாக மெரினா கடற்கரை இருந்து வருகிறது. இந்த கடற்கரையில் தினசரி ஏராளமான மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து பொழுதை கழித்து வருகின்றனர். பலர் கடற்கரைச் சாலையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர். அதேபோல வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மெரினா கடற்கரைக்கு சுற்றிப் பார்க்க வந்து கடலில் குளித்து மகிழ்வது வழக்கமாக இருந்து வந்தது. … Read more

பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை… இளையராஜாவுக்கு ஸ்டாலின்- தலைவர்கள் வாழ்த்து

இசைஞானி இளையராஜா ராஜ்யபசபா நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 216 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில், 12 உறுப்பினர்கள் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுபவர்கள். அப்படி நியமிக்கப்படுபவர்கள் பொதுவாக சட்டம், விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களாக இருக்க வேண்டும். அதன்படி மாநிலங்களவையில் தற்போது நியமன உறுப்பினர்களாக ரஞ்சன் கோகாய், மகேஷ் ஜேட்மலானி, சோனல் மான்சிங், ராம் ஷகால், ராகேஷ் சின்ஹா … Read more

ஓபிஎஸ்-ன் அடிமடியில் கைவைத்த எடப்பாடி… இன்று கலையியே நடந்த சந்திப்பு.! 

வருகின்ற 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டம் காரணமாக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தங்களது ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரடியாக வந்து, தனது ஆதரவை தெரிவித்து உள்ளார். தற்போது வரை அதிமுகவில் 20065 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர் 2240 பேர் எடப்பாடி … Read more

நாகூர் துறைமுகத்தில் இரு கிராம மீனவர்கள் இடையே மோதல்.. ரூ.7 லட்சம் மதிப்பிலான பைபர் படகு, வலைகளுக்கு மர்மநபர்கள் தீவைப்பு..!

நாகை மாவட்டத்தின் நாகூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைபர் படகு, வலைகள் உள்ளிட்டவைக்கு தீ வைக்கபட்டுள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதில் மேல பட்டினச்சேரி- கீழப்பட்டினச்சேரி கிராம மீனவர்கள் இடையே கருத்து வேறுபாடு மற்றும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் கீழ் பட்டினசேரியை சேர்ந்த விஜி என்பவரின் பைபர் படகு, வலைகளில் மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனையறிந்து துறைமுகத்தில் திரண்ட மீனவ … Read more

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே.ஜே.கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 5000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. வரும் ஜூலை 11-ம் … Read more

சென்னை: சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

சென்னை திருவல்லிக்கேணி சாலையில் நிறுத்தி வைத்திருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி கஜபதி தெருவின் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ கார் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி தீயணைப்புத் துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் அதே தெருவில் உள்ள கார் மெக்கானிக் கடை வாசலில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீப்பிடித்து மளமளவென பரவி … Read more

Gold rates today: 2 வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் பாருங்க!

Gold rates today at Delhi, Chennai, Kolkata, and Mumbai have been slashed Tamil News: தங்கம் விலை இந்தாண்டில் சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்தாலும், இந்தியாவில் அதன் விலை நிலையாக வர்த்தகமாகியது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், கடந்த ஆகஸ்ட்டில் தங்கம் விலை ரூ. 124 அல்லது 0.25 சதவீதம் உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.50,624 ஆக இருந்தது. இதேபோல் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெள்ளி ரூ. 334 அல்லது 0.6 சதவீதம் அதிகரித்து ஒரு கிலோ … Read more

7ம் வகுப்பு படிக்கும் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்.. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.!

7-ம் வகுப்பு படிக்கும் 14 சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜமுனாமரத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் 7-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலிப்பதாக  ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக … Read more

தமிழகத்தில் 20 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உயர்கல்வித்துறை சார்பில் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதன் படி விருதுநகர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கல்லூரிகளை திறந்து வைத்த முதலமைச்சர், சுமார் 152 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆய்வகங்கள், தொழில் முனைவோர் மையங்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றையும் … Read more

சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் போராடுவாரா? – வைகோ கேள்வி

சென்னை: விலைவாசி உயர்வால் மக்கள் அல்லல்படும் நிலையில், சமையல் எரிவாயு விலையையும் உயர்த்தி மக்கள் வயிற்றில் அடிப்பதை பாஜக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”பெட்ரோல், டீசல் விலையை பன்னாட்டு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நாள்தோறும் நிர்ணயிக்கப்படுவதைப் போல, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் … Read more