அரசு பள்ளி வகுப்பறையின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயம்..!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அரசு பள்ளியில், வகுப்பறையின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் படுகாயமடைந்தனர். தரடாப்பட்டு கிராமத்தில் இயங்கு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில், 6 ஆம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறையில் விரிசல் ஏற்பட்ட நிலையில் திடீரென மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தன. இதில், மாணவர்கள் ஜனார்தனன், தருண்குமார், முகேஷ் ஆகியோரும், வகுப்பில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் தினகரனும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் … Read more

“நெருப்புடன் விளையாட வேண்டாம்” – ஆ.ராசா பேச்சுக்கு வானதி கண்டனம்

கோவை: “நெருப்புடன் விளையாட வேண்டாம். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்” என்று ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த 3-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற, திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, ”பிரிவினை வேண்டும். தனித் தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன்வாருங்கள். சுதந்திர தமிழ்நாடுதான் … Read more

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி இருக்கும்? – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை மாவட்டங்களின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் பத்தாம் தேதி வரை, சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் நீலகிரி … Read more

‘காளி போஸ்டர் நீக்கு…’ லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிரடி சரஸ்வதி கைது

‘காளி’ படத்தின் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கவிஞர், திரைபட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்த விகாரத்தில் சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கம் அமைப்பின் தலைவர் அதிரடி சரஸ்வதி கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில், கவிஞர் லீனா மணிமேகலை ‘காளி’ ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டார். அதில், காளி வேஷத்தில் இருக்கும் பெண் சிகரெட் புகைப்பதை போல போஸ் கொடுத்தபடி இருக்கிறார். காளி வேஷத்தில் உள்ள பெண் வாயில் சிகரெட் வைத்திருக்கிற போஸ்டர் இந்து மத … Read more

கனமழை காரணமாக நாளை மற்றும் மறுநாள் இந்த தாலுகாவிற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.!

கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவிற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அவ்வபோது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலூக்காவில் நாளை மற்றும் நாளை … Read more

குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்..! மனைவி இறந்து விட்டதாக நினைத்து கணவன் தற்கொலை

கோயம்புத்தூரில், குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர், மனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்து கொண்டார். கட்டிடத் தொழிலாளியான பூபாலன், மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் மனைவியின் முதுகில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி ஷாலினி இறந்து விட்டதாக எண்ணிய பூபாலன் பக்கத்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Source link

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகியின் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் ஐ.டி ரெய்டு

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான, அதிமுக நிர்வாகி சந்திரசேகர் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். கோவை வடவள்ளியில் உள்ள தொண்டாமுத்தூர் சாலை, நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இன்ஜினியரான இவர் கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நபராவார். தவிர, நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும், அதிமுக புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலராகவும் உள்ளார். அத்துடன், சில நிறுவனங்களையும் சந்திரசேகர் நடத்தி … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அவமானப்படுத்தப்பட்டேனா? – ஆளுநர் தமிழிசை விளக்கம்

சிதம்பரம் நடராஜர் கோவில் நடந்த சம்பவத்தை தான் அவமானமாக பார்க்கவில்லை என்றும் மக்களுடைய பிரச்சனைகளை சிவன் தான் தீர்க்க வேண்டும் எனவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டியளித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்ற புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜனுக்கு அவமரியாதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த துணைநிலை ஆளுநர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனத்திற்கு … Read more

மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி சிங் ராஜினாமா

முக்தார் அப்பாஸ் நக்வி, மற்றும் ஆர்.சி.பி. சிங் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூலை 7ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இருவரும் தங்கள் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளதால் நரேந்திர மோடி அரசில் பாஜகவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருக்காது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஜூலை 7-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இருந்து … Read more

மனவேதனையில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை.!

மதுரையில் மனவேதனை அடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுரை மாவட்டம் ஓடைப்பட்டி மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகு (50). இவருடைய மகன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.  இதையடுத்து இவருடைய மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இவர்கள் இருவரின் உயிரிழப்பால் வாழ்க்கையே வெறுத்து, மனம் உடைந்த அழகு வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து … Read more