Tamil News Live Update: வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு எதிராக சசிகலா காட்டம் பசு தோல் போர்த்திய புலிகளின் கையில் சிக்கி அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது. தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது. … Read more

பாதி எரிந்த நிலையில் இளம்பெண் சடலமாக மீட்பு.. கணவன் கொலை செய்தது விசாரணையில் அம்பலம்..!

திருமணமான பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். கடந்த 29ம் தேதி மதுரை மாவட்டம், பொட்டாம்பட்டியில் உள்ள தென்னந்தோப்பில் பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த சடலம் திண்டுக்கல் மாவட்டம், பஞ்சயம்பட்டியை சேர்ந்த … Read more

ரூ.200 கோடி லோன் வாங்கி தருவதாகக் கூறி மோசடி.. 3 பேர் கைது.!

கல்லூரி மேம்பாட்டுக்கு கடன் பெற்று தருவதாக கூறி கல்லூரி தாளாளரிடம் இருந்து 6 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், போலி பைனான்சியர் உட்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மதுரையில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் தாளாளர் முகமது ஜலீல், சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த முத்துவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து, 200 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி அதற்கு 2 … Read more

மெக்காவில் இனி தமிழும் இந்தியும் ஒலிக்கும்

ராமேசுவரம்: முஸ்லிம்களின் புனித தலங்களில் ஒன்றான சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் புனித ஹஜ் பயணத்தின்போது நிகழ்த்தப்படும் அரஃபா சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை முதன்முறையாக தமிழ் மற்றும் இந்தியில் ஒலிபரப்பாகிறது. ஹஜ் பெருநாள் (பக்ரீத் பண்டிகை) உலகளவில் முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். முஸ்லிம்களின் புனித தலங்களில் ஒன்றான சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் முஸ்லிம்களின் புனிதக் கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற கரோனா பரவலுக்கு முன்பு வரை 25 லட்சம் பேர் வரையிலும் … Read more

சத்தியமங்கலம்: ஆக்ரோஷத்துடன் காரை துரத்திய காட்டு யானை – வனத்துறை எச்சரிக்கை

சத்தியமங்கலம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் காட்டு யானை மின்னல் வேகத்தில் வாகனத்தை துரத்தி தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில், ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் நடமாடுகின்றன. இதையடுத்து நேற்று மாலை … Read more

பேரூராட்சிகளில் விரைவில் கலைஞர் உணவகம் – அமைச்சர் சக்கரபாணி பேட்டி

இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டார். மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் தேசிய மாநாடு, மத்திய அமைச்சா் பியூஸ் கோயல், மத்திய இணைஅமைச்சா்கள் அஸ்வினி குமாா் சௌபே, சாத்வி நிரஞ்சன் ஜோதி தலைமையில் நடைபெற்றது. உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்குவது, உணவு உற்பத்தி … Read more

தமிழகத்தில் கனமழை காரணமாக, இன்று இந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதனிடையே இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more

மீன் விற்பனையில் தகராறு.. மீனவ கிராமத்தில் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நாகை அருகே, மீன் விற்பனை மற்றும் ஏலம் தொடர்பாக இரு மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மீனவ கிராமத்தில் புகுந்து வீடு, வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும், ஏலம் விடுவதற்கும் மேல பட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே மோதல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. மீன்விற்பனைக்கு தங்களுக்கும் உரிமை வேண்டும் எனக் கோரி மேல பட்டினச்சேரி கிராம மீனவர்கள் … Read more

விமானநிலையம் – கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை தேவை

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், முதல்கட்டமாக பரங்கிமலை-சென்ட்ரல், விமானநிலையம்-விம்கோநகர் ஆகிய 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் வரை9 கி.மீ. தொலைவுக்கு முதல்கட்டநீட்டிப்புத் திட்டத்தில் பணி முடிந்து,ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு, 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. 2026-க்குள்திட்டப்பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை … Read more

ஆசிரியர்களே முந்துங்கள்… இன்று மாலை வரைதான் அவகாசம்

தமிழகத்தில் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரத்து 331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை தற்காலிக ஆசிரியர் நியமனம் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் தகுதி வாய்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் கடந்த 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. … Read more