தமிழகத்தில் ஜூலை 11-ம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலியில் உள்ள காந்தி அம்மன் கோவில் தேரோட்ட விழா நடைபெற உள்ளது. இந்த தலத்தில் உள்ள தேரானது தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைகுரியது. இந்த தேர்த்திருவிழா வரும் ஜூலை 11ஆம் … Read more

திருமணமான இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு- கணவர், மாமியார் உட்பட 5 பேர் கைது

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருமணமான இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் கணவர், மாமியார், மாமனார் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலூர் அடுத்த பொட்டப்பட்டியில் உள்ள தென்னந்தோப்பில், கடந்த 29ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பட்டது திண்டுக்கல் மாவட்டம் பஞ்சயம்பட்டியை சேர்ந்த அர்ஜூணன் என்பவரின் மனைவி, 19 வயதான ராசாத்தி என்பது தெரியவந்தது. அர்ஜூணன் சென்னையில் இடியாப்ப … Read more

‘பொதுச் செயலாளர் தேர்தல்’ – ஜூலை 11 அதிமுக பொதுக்குழுக் கூட்ட விவாதப் பொருள்களின் முக்கிய அம்சங்கள்

சென்னை: வரும் ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமைக் கழகம் சார்பில் 3 பக்க கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள 16 பொருள்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: “11.07.2022 அன்று திருவள்ளூர் மாவட்டம், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ள கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பாணை: 23.06.2022 அன்று … Read more

மக்களே உஷார்… திருச்சியில் இன்று இந்த ஏரியாக்களில் மின் தடை!

க. சண்முகவடிவேல், திருச்சி திருச்சி தென்னூர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், திருச்சியில் மின் தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்துகொள்ளுங்கள். திருச்சி தென்னூர் துணை மின் நிலையத்தில் இன்று (ஜூலை 4, செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி தில்லைநகர், கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகள் காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர் பைபாஸ் ரோடு, தேவர் காலனி, தென்னூர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோவில் … Read more

பசு தோல் போர்த்திய புலிகளின் கையில் சிக்கி அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது-சசிகலா.

தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்தார். அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் சசிகலா இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். அதன்பின்னர் அதிமுக தொண்டர்களிடையே சசிகலா பேசியதாவது:- எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை 3-வது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. பசு தோல் … Read more

தேசிய நெடுஞ்சாலையில் காரை வேகமாக துரத்திச்சென்ற காட்டு யானை

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று காரை வேகமாக துரத்திச்சென்ற காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் நோக்கி காரில் 5 பேர் சென்று கொண்டிருந்தனர். தமிழக – கர்நாடகா எல்லையில் உள்ள புளிஞ்சூர் வனப்பகுதி வழியாக அவர்கள் சென்ற போது சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று வனப்பகுதிக்குள்ளிருந்து வேகமாக ஓடி வந்து காரை துரத்தத்தொடங்கியது. சுதாரித்துக்கொண்ட கார் ஓட்டுநர் உடனடியாக காரை … Read more

மீனவர்களையும் படகையும் மீட்க காங்கிரஸ் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்: நாராயணசாமி

காரைக்கால்: மீனவர்களையும் படகையும் மீட்க காங்கிரஸ் கட்சி சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி கூறினார். காரைக்கால் மாவட்டம் காசாக்குடிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த 1 ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 5 பேர், அருகில் உள்ள தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த 7 மீனவர்கள் என 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, … Read more

TNEA Counselling: கம்ப்யூட்டர் சயின்ஸ் vs ஐ.டி; எது பெஸ்ட்? என்ன வித்தியாசம்?

Computer Science Engineering vs Information Technology which is best course?: பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கேள்வி கணினி அறிவியல் என்ஜினியரிங் (Computer Science Engineering) மற்றும் தகவல் தொழில்நுட்பம் (Information Technology) இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பது தான். தற்போது ஐ.டி (IT) துறையில் நல்ல வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் இருந்து வருவதால், மாணவர்கள் பொறியியல் சி.எஸ்.இ (CSE) மற்றும் ஐ.டி (IT) படிப்புகளை … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை-சென்னை வானிலை ஆய்வு மையம்.!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.  அதன்படி, சென்னை ராயப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, அசோக்பில்லர் , … Read more

மதிய உணவு தொடர்பான புகார் | முதல்வரிடம் தெரிவிப்பதுடன் நானும் முடிவு எடுப்பேன்: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: மதிய உணவு தொடர்பான புகார் பற்றி முதல்வர், கல்வியமைச்சரிடம் தெரிவிப்பதுடன், ஆளுநராக நானும் முடிவு எடுப்பேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம், பெங்களூரைச் சேர்ந்த அட்சய பாத்ரா அறக்கட்டளையுடன் இணைந்து புதுச்சேரி பகுதி பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் கடந்த 2018 ஜூலையில் கையெழுத்திட்டுள்ளது. இந்த அறக்கட்டளையானது மதிய உணவை 12 மாநிலங்களில் செயல்படுத்துகிறது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடக்கமாக புதுச்சேரி பகுதியில் இயங்கி … Read more