தமிழ்நாட்டை பாண்டிய நாடு, பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும் – பாஜக எம்.எல்.ஏ.

தமிழகத்திற்கு தனிநாடு வேண்டும் என திமுக எம்பி ஆ.ராசா பேசுவதாக கூறிய பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டை பாண்டியநாடு, பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் பேசிய அவர், ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அங்கு கிடைத்துள்ளதால், தமிழ்நாட்டையும் நிர்வாக ரீதியாக இரண்டாக பிரித்தால் அதிக திட்டங்களை பெற முடியும் என்றார். Source link

தமிழகத்தில் காலரா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: மா.சுப்பிரமணியன்

சென்னை: காரைக்காலை சுற்றியுள்ள உள்ள பகுதிகளில் காலரா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சோழிங்நல்லூர் சட்டமன்ற தொகுதியில் எழில் நகர் பகுதியில் ரூ.1.30 கோடியில் சமூக நலக் கூடம் கட்டும் பணியை தொடங்கி வைத்து கண்ணகி நகர் நகர்புற சுகாதார மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், “புதுச்சேரியைச் சேர்ந்த காரைக்கால் பகுதியில் 39 பேருக்கு காலரா … Read more

கவிஞர் லீனா மணிமேகலைக்கு ஐகோர்ட் எச்சரிக்கை; சுசி கணேசன் குறித்து கருத்து தெரிவிக்க கூடாது!

இயக்குநர் சுசி கணேசன் குறித்து கருத்து தெரிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, கவிஞர் லீனா மணிமேகலை ஏன் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இயக்குநர் சுசி கணேசன், உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க லீனா மணிமேகலை, சின்மயி ஆகியோருக்கும், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் வெளியிட ஃபேஸ்புக், கூகுள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கும், ஆங்கில இணையதள செய்தி நிறுவனத்திற்கும் தடை விதிக்க … Read more

அண்ணன்-தம்பிக்கு இடையே சொத்து தகராறு.. தம்பி அரிவாளால் வெட்டிக்கொலை.!

அண்ணன்-தம்பிக்கு இடையே சொத்து தகராறில் தம்பி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமுத்திரம்(வயது 65), மாரிமுத்து(வயது 59) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தங்கசாமிக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டத்தை பிரித்ததில் அண்ணன், தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் விவசாயியான மாரிமுத்து ஜேசிபி எந்திரம் மூலம் எலுமிச்சை செடிகளை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது சமுத்திரம் அங்கு சென்றபோது … Read more

மீனவர்கள் கைது: இலங்கையை மத்திய அரசு கண்டிக்க மநீம வலியுறுத்தல்

சென்னை: “தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை அரசுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து இன்று மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, கடந்த 2 நாட்களில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது படகுகளை சிறைப்பிடித்துள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக … Read more

தொடரும் கொலைகள்.. அவிழாத மர்மங்கள்.. எடப்பாடி பழனிசாமியை பயமுறுத்துகிறதா கோடநாடு வழக்கு?

”கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் நமக்கெல்லாம் தெரியாத ஒரு விஷயம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்கிறது என புரிந்துகொள்ள முடிகிறது” என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு அவருக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் இருக்கும் எஸ்டேட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொடூரமான சம்பவத்தில் பாதுகாவலர் ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இதில் முதல் குற்றவாளியான கனகராஜ் ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர். இவர் கொள்ளை சம்பவத்திற்கு பின் … Read more

தி.மு.க.,வில் இருந்து ஒரு ஷிண்டே புறப்படுவார் – அண்ணாமலை

Annamalai says one Shinde come from DMK in BJP protest: தமிழ்நாட்டில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருகிறது. தி.மு.க.,வில் இருந்து ஒரு ஷிண்டே புறப்படுவார் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க இன்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசைக் கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000, பெட்ரோல், டீசல் விலை … Read more

அரைவேக்காடு ரொட்டியும் ஆங்கிலேயர்களும் – மருத்துவர் இராமதாஸ் முகநூல் பதிவு.!

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் சுவாரசியமான சில பதிவுகளை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று “அரைவேக்காடு ரொட்டியும் ஆங்கிலேயர்களும்” என்ற தலைப்பில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில்,  அரைவேக்காடு ரொட்டியும் ஆங்கிலேயர்களும்! இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஒரு சமயம் இங்கிலாந்தில் நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.  அந்த நிகழ்ச்சியில் ஆங்கிலேயர் ஒருவர் கூட்டத்தின் மத்தியில் உரையாட தொடங்கினார். பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர், “இறைவனுக்கு ஆங்கிலேயர்கள் … Read more

பதிவு செய்யாத முதியோர் இல்லங்கள் செயல்பட அனுமதிக்கக் கூடாது – உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பதிவு செய்யாத இல்லங்கள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முதியோர் இல்லங்களை பதிவு செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அமல்படுத்தப்படவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணையில், முதியோர் இல்லங்களின் அன்றாட நடவடிக்கைகளை அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் குறைபாடுகளை சுட்டிக்காட்டிய பின்னரும் அதனை நிவர்த்தி செய்யாத … Read more

தியேட்டர்கள், மால்களுக்கான புதிய கரோனா வழிமுறைகள் – சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு என்ன?

சென்னை: வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ஆகியோருக்கு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றபடி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கடிதம் அனுப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு 1000-க்கும் அதிகமாக உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் … Read more