இலக்கியத்தின் வழியாக அப்பாவை ஆவணப்படுத்தும் எழுத்தாளர்; நினைவு சிறுகதைப் போட்டி அறிவிப்பு

கவிஞர் அமிர்தம் சூர்யாவின் ‘கருமாண்டி ஜங்ஷன்’ யூடியூப் சேனல் ஒருங்கிணைப்பில், எழுத்தாளர் தேவா சுப்பையா தனது தந்தையின் பெயரில் நினைவு சிறுகதைப் போட்டியை அறிவித்திருக்கிறார். இந்த சிறுகதைப் போட்டி அறிவிப்பு வித்தியாசமாகவும் நெகிழ்ச்சியாகவும் அமைந்திருக்கிறது. இந்த சிறுகதைப் போட்டியின் மொத்தப் பரிசு ரூ.50,000, 10 சிறந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொரு சிறுகதைக்கும் ரூ.5,000 பரிசு பகிர்ந்தளிக்கப்படும். அது மட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த சிறுகதைகள் நூலாகவும் வெளியிடப்பட உள்ளது. எழுத்தாளரும் துபாயில் ஒரு நிறுவனத்தில் ‘புராஜெக்ட் ஹெட்’ ஆக … Read more

என்ன அவசரம்.., தடையை நீக்க முடியாது.., தமிழக அரசுக்கு மீண்டும் குட்டு வைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை.!

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குவதற்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 13,331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 10,000, … Read more

மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த விவகாரம்-தேடப்பட்டு வந்த மருந்தக உரிமையாளர் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சட்டவிரோதமாக மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த வழக்கில், தேடப்பட்டு வந்த மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வேல்முருகன் – அனிதா தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக அனிதா கருவுற்றார். கடந்த மே மாதம் இராமநத்தம் பகுதியில் முருகன் என்பவரது மருந்தகத்திற்கு சென்று, அங்கு மறைமுகமாக வைக்கப்பட்டிருந்த ஸ்கேன் மையத்தில் சட்டவிரோதமாக ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அதில் பெண் குழந்தை என்பது தெரியவந்ததை … Read more

சென்னையில் கரோனா சிகிச்சை பெற்று வரும் 5,264 பேரும் நலமுடன் உள்ளனர்: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் கரோனா சிகிச்சை பெற்று வரும் 5,264 பேரும் நலமுடன் உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கோவிட் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி, 5,936 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். நேற்ற மட்டும் 942 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் 5,264 நபர்கள் வீட்டுத் தனிமையிலும், 57 பேர் மாநகராட்சியின் கோவிட் பாதுகாப்பு மையங்களிலும், 263 … Read more

சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: நாளை முதல் அமல்

சென்னையில் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி முகாம்கள் மற்றும் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த 2 … Read more

இந்த படத்துல பூனையைக் கண்டுபிடிக்க திணறும் நெட்டிசன்கள்; நீங்க ட்ரை பண்ணி பாருங்க

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பூனை மறைந்திருக்கிறது. அந்த பூனையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால். நெடிசன்கள் பலரும் பூனையைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? ட்ரை பண்ணி பாருங்க. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகிறது. மறைந்திருக்கும் யானையைக் கண்டுபிடியுங்கள், குதிரையைக் கண்டுபிடியுங்கள், பறவையைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்து பகிரப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள சுவாரசியமான புதிர் நெட்டிசன்களை … Read more

#BREAKING || அதிமுக பொதுக்குழு நடக்கவே கூடாது…. அடுத்த அதிரடி திட்டத்தை வகுத்த ஓபிஎஸ்.! பெரும் சிக்கலில் சிக்கிய எடப்பாடி.!

வருகின்ற 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவை ஓ பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஒரு … Read more

பொதுக்குழுவிற்கான அழைப்பிதழை வெளியிட்டது அதிமுக

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், வருகிற 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழை அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. 11 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்வது, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரை பொதுக்குழுவிலேயே தேர்ந்தெடுப்பது, பொதுச்செயலாளர் தேர்தலை அறிவிக்க செய்வது … Read more

ரயில் பெட்டி வாஷ் பேஷனில் சிகரெட் குவியல்… மின்சார பேனலில் பாதி எரிந்த பீடி… – தெற்கு ரயில்வே அடுக்கிய 3 குறிப்புகள்

சென்னை: பயணிகள் தங்களது ரயில் பயணத்தின்போது புகைப்பிடிக்க வேண்டாம் என்று தெற்கு ரயில்வே சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின்போது புகைப்பிடிப்பது சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால், இதையும் மீறி பலர் புகைப்பிடித்து வருகின்றனர். இதைத் தடுக்க ரயில்வே சார்பில் பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயிலை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது கழிவறையில் உள்ள வாஷ் பேஷனில் சிகரெட் குவியல் இருந்ததை பார்த்தனர். மேலும், மின்சார பேனலில் … Read more

மொபெட்டில் சென்ற ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் – காரில் வந்த மர்மநபர்கள் கடத்தி நகைகள் கொள்ளை

முசிறி அருகே ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை கடத்திச் சென்று பீரோவில் வைத்திருந்த 12 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முசிறி அருகே தா.பேட்டையைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர், கனரா வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், குழந்தைகள் இல்லாததால் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை தனது உறவினரை பார்க்க வளையெடுப்பு கிராமத்திற்கு முத்துசாமி மொபட்டில் சென்றுள்ளார். பின்னர் … Read more